Facebook Messenger: பேஸ்புக் மெசஞ்சரில் இனி வீடியோ கால் பேசிக் கொண்டே கேம் விளையாடும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பேஸ்புக்
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி வருகின்றன. தகவலை பகிர்ந்து கொள்வதற்கான முதன்மை செயலியாக, வாட்ஸ்-அப், ட்விட்டருக்கு அடுத்து பேஸ்புக் தொடர்ந்து நீடிப்பதற்கு மெட்டா நிறுவனம் வழங்கும், இந்த அடுத்தடுத்த அப்டேட்களும் முக்கிய காரணமாகும். அந்த வகையில்தான்,வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அடுத்ததாக, புதிய அப்டேட்களை அடுத்தடுத்து வழங்குகிறது.
வீடியோ கால் பேசிக்கொண்டே கேம்ஸ்:
அந்த வகையில் தற்போது பேஸ்புக் மெசஞ்சரில் வீடியோ கால் பேசியப்படியே கேம்ஸ் விளையாடும் வசதியை தற்போது மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில், 14 வீடியோ கேமிங்-ஐ மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மெசஞ்சரில் வீடியோ கால் பேசியபடியே வீடியோ கேம்ஸ் விளையாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ கேமிஸ்-ஐ இன்ஸ்டால் செய்வது கட்டாயமில்லை. எப்போது வேண்டுமென்றாலும் பேஸ்புக் மெசஞ்சரில் பேஸ்புக் கேமிக் (facebook Gaming) என்ற ஆப்ஷனை பயன்படுத்தி விளையாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கேம்ஸ்களை பெரும்பாலும் இரண்டு நபர்களுடன் விளையாடும் வசதியில் இருக்கிறது. mini golf, words with friends உள்ளிட்ட 14 கேம்கள் பேஸ்புக் மெசஞ்சரில் உள்ளது.
புதிய கேம்கள்:
இந்த ஆண்டுக்குள் பேஸ்புக் மெசஞ்சரில் பல வீடியோ கேம்களை அறிமுகப்படுத்த மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பேஸ்புக் மெசஞ்சரில் வீடியோ கால் பேசிக் கொண்டு இருக்கும்போது play ஆப்ஷனை கிளிக் செய்து தங்களுக்கு பிடித்த கேம்களை விளையாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் வாட்ஸ் அப்பிலும் பல்வேறு அப்டேட்களை மெட்டா நிறுவனம் வழங்கி வருகிறது. அதன்படி சமீபத்தில், பயனர்களின் பிரைவஸிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் லாக் சாட் (lock chat) என்ற புதிய வசதியை விரைவில் கொண்டு வரப்படுகிறது. இந்த வசதி மூலம் பயனர்கள் ஒருவருடனான சாட்-டை (chat) பிரத்யேகமாக லாக் செய்து வைத்துக் கொள்ள முடியும்.
முன்னதாக, பயனர்கள் தனிப்பட்ட சாட்களையே, தொழில் ரீதியான உரையாடல்களையே மற்றவர்கள் பார்க்காமல் இருக்க வாட்ஸ் அப் மொத்தத்தையும் லாக் போட் (whatsapp lock) செய்து வைப்போம். ஆனால் அதனை எளிமையாக்கும் வகையில் chat lock என்ற ஆப்ஷனை மெட்டா நிறுவனம் விரையில் அறிமுக்கப்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
WhatsApp Update : ’இனி சாட் கூட லாக் செய்யலாம்..' வாட்ஸ் அப்பில் வருகிறது அசத்தலான அப்பேட்..!
Car loan Information:
Calculate Car Loan EMI