இந்தியாவின் பிரபலமான இரு சக்கர வாகனங்களில் ஒன்று Yezdi. கம்பீரமான, வசீகரமான நீண்ட தூர பயணங்களுக்கான இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பில் இந்த Yezdi பைக் முன்னணியில் உள்ளது.
இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற Yezdi Adventure பைக் பற்றி கீழே விரிவாக காணலாம். இந்த பைக்கில் மொத்தம் 4 வேரியண்ட்கள் உள்ளது.
1. Adventure Forest Green White - ரூபாய் 2 லட்சத்து 45 ஆயிரத்து 208
2. Adventure Khaki White and Nebula Blue White - ரூபாய் 2 லட்சத்து 53 ஆயிரத்து 006
3. Adventure Tornado Black - ரூபாய் 2 லட்சத்து 57 ஆயிரத்து 829
4. Adventure Grey Black and Gloss White - ரூபாய் 2 லட்சத்து 57 ஆயிரத்து 830
இந்த Yezdi Adventure பைக் வெள்ளை - சாம்பல், வெள்ளை - அடர்நீலம், வெள்ளை - வெளிர் பச்சை, கருப்பு, வெள்ளை, கருஞ்சாம்பல் ஆகிய வண்ணங்களில் உள்ளது.
எஞ்ஜின்:
334 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் 6 கியர்களை கொண்டது. 187 கிலோ எடை கொண்டது. இந்த பைக் 30.5 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இந்த Yezdi Adventure பைக்கில் 15.5 லிட்டர் பெட்ரோல் டேங்கர் வசதி உள்ளது. இதன் இருக்கை உயரம் 815 மி.மீட்டர் ஆகும்.
மைலேஜ்:
29.16 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 29.56 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. அதிகபட்சமாக 140 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது. 1 கியர் கீழேவும், 5 கியர் மேலேவும் உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 472.8 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.
டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்டது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் உள்ளது. ஸ்போக் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 21 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 17 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப் டயர்களே இதில் உள்ளது. 50 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 4 வருட வாரண்டி அளிக்கப்படுகிறது.
சிறப்புகள்:
டிடிஎஃப் டிஸ்ப்ளே வசதி உள்ளது. ப்ளூடூத் போன் வசதி உள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், கியர் இண்டிகேட்டர், கியர் ஷிப்ட் லைட், லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹசார்ட் வார்னிங், ஹை பீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது.
டூயல் எல்இடி ப்ரொஜக்டர் முகப்பு விளக்குகள் உள்ளது. ஹசார்ட் வார்னிங் விளக்குகள் உள்ளது. இந்த Yezdi Adventure பைக் நெடுந்தூர இரு சக்கர வாகன சாகசத்திற்கு மிகவும் பக்கபலமாக உள்ளது. இந்த பைக் மட்டுமின்றி Yezdi Roadster, Yezdi Scrambler ஆகிய பைக்குகளும் நன்றாக விற்பனையாகி வருகிறது. விரைவில் இந்திய சந்தையில் Yezdi Streetfighter, Yezdi Roadking ஆகிய பைக்குகளும் அறிமுகமாக உள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI