Year Ender 2024: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பாண்டில் அறிமுகமான, தரமான 5 அட்வென்ச்சர் பைக்குகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


அட்வென்ச்சர் பைக்குகள்:


நடப்பாண்டில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையானது இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் என இரண்டு தரப்பிலும், பல்வேறு புத்தம் புது மாடல்களை கண்டது. குறிப்பாக அட்வென்ச்சர் பைக் செக்மெண்டில், BMW மோடார்ட் தொடங்கி Honda மற்றும் Suzuki  என பல முன்னணி நிறுவனங்களும் தங்களது மாடல்களை அறிமுகப்படுத்தின. அந்த வகையில் 2024ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமான 5 சிறந்த அட்வெச்ன்சர் பைக்குகள் கீழே பட்டியலிடபப்ட்டுள்ளன.



2024ன் டாப் 5 அட்வென்ச்சர் பைக்குகள்: 


1. ஹோண்டா NX500


ஹோண்டா தனது 2024ம் ஆண்டிற்கான பயணத்தை NX500 உடன் துவக்கியது. இது ஒரு நல்ல சாலை சார்ந்த அட்வென்ச்சர் வாகனமாகும். 500 சிசி திறன் கொண்ட பைக்கிற்கு  ரூ.5.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலை சற்று அதிகமாக உணரலாம். மென்மையான செயல்திறன், நல்ல உயரமான உடல் வடிவமைப்பு மற்றும் ஹோண்டாவின் நம்பகமான நற்பெயர் ஆகியவை NX500 மாடலை ஒரு நல்ல தேர்வாக மாற்றுகிறது. 


2. BMW R 1300 GS


BMW இன் ஃபிளாக்ஷிப் அட்வெண்டர் மாடலான R 1300 GS, பழைய R 1250 GSக்குப் பதிலாக ரூ.20.95 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) சந்தையில் களமிறங்கியது. முந்தைய மாடலை போலல்லாமல், புதிய GS ஆனது 237 கிலோ (R 1250 GS ஐ விட 20 கிலோ எடை குறைவானது) எடையுடன் இலகுவாகவும், வேகமாகவும், சவாரி செய்வதற்கு மிகவும் எளிதாகவும் உள்ளது. திறன் அதிகரித்த போதிலும், 1,300 சிசி, லிவிட்-கூல்ட் பாக்ஸிங் இன்ஜினின் அளவை குறைத்ததன் மூலம் அதிக சமச்சீராக உள்ளது.  இருப்பினும், BMW முன்பை விட 10 bhp மற்றும் 6 Nm திறனை அதிகப்படுத்தியது. 


3. டிரையம்ப் டைகர் 900 


புதிய 2024 டிரையம்ப் டைகர் 900 ஜிடி மற்றும் ரேலி ப்ரோ வகைகள் இந்தியாவில் முறையே ரூ.13.95 லட்சம் மற்றும் ரூ.15.95 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம் விலை, டெல்லி) அறிமுகப்படுத்தப்பட்டன. இரண்டு பைக்குகளும் மிகவும் வசதியாகவும் திறமையாகவும் இருக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டன. 888 cc, இன்லைன்-மூன்று இன்ஜின் அதிக ஆற்றல் மற்றும் முறுக்குவிசைக்காக மேம்படுத்தப்பட்டது. அதன் சிக்கனத்தில் சமரசம் செய்யாமல் இந்த இலக்கு அடையப்பட்டுள்ளது. ஆனால் இந்த இரண்டு பைக்குகளிலும் உள்ள கவனிக்க வேண்டிய விஷயம் அதன் மாசற்ற கட்டுமானத் தரம் என்று ட்ரையம்ப் தெரிவித்துள்ளது.


4. Suzuki V-Strom 800 DE


Suzuki V-Strom 800DE ஆனது ரூ.10.30 லட்சத்தில் ஒரு அற்புதமான அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிளாக உள்ளது. இது விதிவிலக்கான மதிப்பை வழங்குகிறது. இந்த மிடில்வெயிட் ADV ஆனது 220mm கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 21-இன்ச் முன் சக்கரம் உட்பட தீவிரமான ஆஃப்-ரோட் சான்றுகளுடன் 84.3 bhp மற்றும் 78 Nm ஐ உற்பத்தி செய்யும் பஞ்ச் 776cc பேரலல்-ட்வின் இன்ஜினை ஒருங்கிணைக்கிறது. பன்முகத்தன்மை - குணாதிசயங்கள் நிறைந்த 270-டிகிரி கிராங்க் இன்ஜின் முதல் பல சவாரி முறைகள் மற்றும் இரு திசை விரைவு ஷிஃப்டரைக் கொண்ட விரிவான எலக்ட்ரானிக்ஸ் தொகுப்பு வரை இது உண்மையிலேயே தனித்து நிற்கிறது. 


5. கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர்


கேடிஎம் 1390 சூப்பர் டியூக் ஆர் உடன், 890 அட்வென்ச்சர் ஆர் அறிமுகமானது இந்த ஆண்டு கேடிஎம் இந்தியாவிடமிருந்து மற்றொரு பெரிய ஆச்சரியமாக இருந்தது. இதன் விலை ரூ.15.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி), இது ட்ரையம்ப் டைகர் 900 வகைகளுக்கு இடையே சரியான இடத்தில் உள்ளது. இதன் 889 சிசி, பேரலல்-ட்வின் இன்ஜின் 103 பிஎச்பி மற்றும் 100 என்எம் பீக் டார்க்கை உருவாக்குகிறது. கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர் என்பது ஒரு பல்துறை பைக் ஆகும். இது நீண்ட தூர சாகச பயணம் மற்றும் ஆஃப்-ரோடிங் பயணத்தை எளிதாக மேற்கொள்ள உதவுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI