Top Facelift Launches 2023: இந்திய சந்தையில் நடப்பாண்டில் அறிமுகமாகி அதிக கவனம் ஈர்த்த, டாப் - 5 ஃபேஸ்லிப்ட் கார்களில் விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


ஃபேஸ்லிப்ட் கார்கள்:


ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் தொடர்ந்து புதுப்புது கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. வெளியான பிறகு நல்ல வரவேற்பை பெறும் கார்கள் உட்புற மற்றும் வெளிப்புற அமைப்புகளில் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு, ஃபேஸ்லிப்ட் வேரியண்ட் என புதியதாக சந்தைப்படுத்தப்படும். ஆனால், தற்போதைய சூழலில் ஃபேஸ்லிப்ட் வேரியண்டில், பவர் ட்ரெயின் உட்பட பல பெரிய மாற்றங்களும், மேம்படுத்தல்களும் கூட காரில் வழங்கப்படுகிறது.  அந்த வகையில் நடப்பாண்டில் வெளியாகி வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்ததோடு, விற்பனையிலும் அசத்திய டாப் 5 ஃபேஸ்லிப்ட் கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 


Kia Seltos:


செல்டோஸ் இந்த ஆண்டு சரியான புதுப்பிப்பை பெற்றுள்ளது. இது புதிய தோற்றத்துடன் ஸ்டைலிங்கை மாற்றுகிறது, அதே நேரத்தில் சமீபத்திய வடிவமைப்பு போக்குகளை பிரதிபலிக்கிறது. புதிய செல்டோஸ் முன்பக்கத்திலும்,  பின்புறத்திலும் பரிணமித்துள்ளது. உட்புறத்திலும், கியா செல்டோஸுக்கு ADAS உட்பட முன்பை விட கூடுதல் அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்ட கேபின் வடிவமைப்பை வழங்கியுள்ளது. இயந்திர ரீதியாகவும் தற்போதைய பவர் ட்ரெய்ன்களுடன் போட்டியிடும் விதமாக புதிய 1.5லி டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.


Tata Nexon:


டாடா மோட்டார்ஸ் 2023 ஆம் ஆண்டில் அதிக அளவில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நெக்ஸானை அறிமுகப்படுத்தியது. இது புதிய அலாய் வீல்களுடன் ஸ்பிலிட் ஹெட்லேம்ப் செட்-அப் மூலம் புதிய தோற்ற வடிவமைப்பை கொண்டுள்ளது. அதே நேரத்தில் பின்புற ஸ்டைலிங்கிலும் முழு அகலமான LED லைட் பார் உள்ளது. உட்புறத்தில் புதிய நெக்ஸான் டச் கண்ட்ரோல்கள் மற்றும் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரால் பொருத்தப்பட்ட பெரிய டச் ஸ்கிரீன் கொண்ட பேனலுடன் திருத்தப்பட்ட சென்டர் கன்சோலைக் கொண்டுள்ளது. போட்டி நிறுவனங்களின் மாடல்களுக்கு நிகராக பல்வேறு கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இருக்கும் விருப்பம் தொடர்ந்து வழங்கப்படும் நிலையில், ​​டர்போ பெட்ரோல் புதிய DCT ஆட்டோமேட்டிக் சலுகையும் உள்ளது.


Tata Harrier/Safari:


நெக்ஸானுடன், டாடா மோட்டார்ஸின் பிரீமியம் டூயோ எஸ்யூவிக்களான ஹாரியர் மற்றும் சஃபாரியும் சரியான புதுப்பிக்கப்பட்ட மேம்படுத்தல்களை பெற்றன. சஃபாரி மற்றும் ஹாரியர் இடையே உள்ள புதுமயான வடிவமைப்பு மொழி மற்றும் அதிக வேறுபாடுகள்  கவனம் ஈர்ப்பதாக உள்ளன. முக்கியமாக இரண்டு SUVக்களும் புதிய தோற்றம் கொண்ட உட்புறம் மற்றும் புதிய தொழில்நுட்ப அம்சங்களையும் கொண்டுள்ளன. டீசலில் இன்ஜின் ஆப்ஷன்கள் ஒரே மாதிரியாக இருக்கும் அதே வேளையில், புதிய எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் மூலம் ஓட்டும் அனுபவம் மாற்றப்பட்டுள்ளது.


MG Hector: 


MG அதன் பிரபலமான SUVயின் பல்வேறு வடிவமைப்பு கூறுகளை மாற்றியமைத்ததன் மூலம் இந்த ஆண்டு  ஹெக்டர் ஒரு பெரிய கிரில்லைப் பெற்றது. அதோடு புதிய பின்புற ஸ்டைலையும் பெற்றுள்ளது. உட்புறம் மேம்படுத்தலை பெற்றுள்ள நிலையில்,  தொடுதிரை நீங்கள் பெறக்கூடிய மிகப்பெரிய அப்டேட்களில் ஒன்றாகும்.  புதிய அப்ஹோல்ஸ்டரி போன்ற பல தொழில்நுட்ப வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.


Car loan Information:

Calculate Car Loan EMI