Hyundai Cars Offer: ஹூண்டாய் நிறுவனம் ஆண்டு இறுதியையொட்டி அறிவித்துள்ள சலுகையின்படி, கோனா மின்சார காருக்கு அதிகபட்சமாக 3 லட்ச ரூபாய் வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டு இறுதி சலுகை:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பாண்டில் பல்வேறு உற்பத்தி நிறுவனங்களும், தங்கள் தரப்பில் ஏராளமான கார்களை அறிகப்படுத்தி வருகின்றன. விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில் விழக்காலங்களில் சலுகைகளையும் வழங்கி வருகின்றன. அதன் விளைவாக தான் தீபாவளியை ஒட்டியும் வாகன விற்பனை களைகட்டியது. அதன் தொடர்ச்சியாக ஆண்டு இறுதியை ஒட்டி மீண்டும் ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் ஏராளமான சலுகைகளை அறிவிக்க தொடங்கியுள்ளன. அந்த வகையில், ஹுண்டாய் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய் வரை சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கி அறிவித்துள்ளது.
ஹுண்டாய் ஆண்டு இறுதி சலுகை:
ஹுண்டாய் நிறுவனம் சார்பில் எக்ஸ்டர், வென்யூ, வென்யூ என் லைன், கிரேட்டா மற்றும் IONIQ 5 ஆகிய கார் மாடல்களை தவிர, மற்ற அனைத்து மாடல்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆண்டு இறுதி சலுகையை பயன்படுத்தி ஹூண்டாய் கார் வாங்க விரும்புவோர், அறிந்துகொள்ள விரும்பும் சலுகையின் விவரம் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
Hyundai Grand i10 Nios:
Hyundai Grand i10 Nios மாடலுக்கு மொத்தமாக 48 ஆயிரம் ரூபாய் வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பண தள்ளுபடியாக சிஎன்ஜி மாடலுக்கு மொத்தம் 35 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பெட்ரோல் மேனுவல் வேரியண்டிற்கு 20 ஆயிரம் ரூபாயும், ஆட்டோமேடிக் வேரியண்டிற்கு 10 ஆயிரம் ரூபாயும் மொத்தமாக பண தள்ளுபடி வழங்கப்படுகிறது. எக்சேஞ்ச் போனஸாக 10 ஆயிரம் ரூபாயும், கார்ப்ரேட் டிஸ்கவுண்டாக 3 ஆயிரம் ரூபாயும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. Hyundai Grand i10 Nios கார் மாடலின் விலை ரூ. 5.84 லட்சம் தொடங்கி ரூ.8.51 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Hyundai Aura:
ஹுண்டாய் நிறுவனத்தின் ஆரா கார் மாடலில் சிஎன்ஜி வேரியண்டிற்கு அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாயும், மற்ற வேரியண்ட்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் பண தள்ளுபடி வழங்கப்படுகிறது. எக்சேஞ்ச் போனஸாக 10 ஆயிரம் ரூபாயும், கார்ப்ரேட் டிஸ்கவுண்டாக 3 ஆயிரம் ரூபாயும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. Hyundai Aura கார் மாடலின் விலை ரூ.6.44 லட்சம் தொடங்கி ரூ.9 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Hyundai i20 & i20 N Line:
பழைய ஹுண்டாய் ஐ20 கார் மாடலுக்கு அதிகபட்சமாக 30 ஆயிரம் ரூபாய் வரையிலும், புதிய ஐ20 கார் மாடலுக்கு 10 ஆயிரம் ரூபாயும், பழைய ஹுண்டாய் ஐ20 என் லைன் மாடலுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரையிலும் பண தள்ளுபடி வழங்கப்படுகிறது. பழைய மற்றும் புதிய ஐ20 மாடல்கள் இரண்டிற்குமே தலா 10 ஆயிரம் ரூபாய் எக்சேஞ்ச் போனஸாக வழங்கப்படுகிறது. இந்த கார் மாடலின் விலை ரூ.6.99 லட்சம் தொடங்கி ரூ.11.16 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Hyundai Verna:
ஹுண்டாய் நிறுவனத்தின் வெர்னா மாடலின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பண தள்ளுபடியாக 20 ஆயிரம் ரூபாயும், எக்சேஞ்ச் போனஸாக 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.10.96 லட்சம் தொடங்கி ரூ.17.38 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Hyundai Alcazar:
அல்காசர் மாடலின் பெட்ரோல் வேரியண்ட்களுக்கு பண தள்ளுபடியாக 15 ஆயிரம் ரூபாய் வரையிலும், எக்சேஞ்ச் போனஸாக 20 ஆயிரம் ரூபாயும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. டீசல் வேரியண்டிற்கு பண தள்ளுபடி கிடையாது. எக்சேஞ்ச் போனஸ் மட்டும் 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.16.77 லட்சம் தொடங்கி ரூ.21.23 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Hyundai Tucson:
ஹுண்டாய் நிறுவனத்தின் டக்சன் கார் மாடலின் பெட்ரோல் வேரியண்டிற்கு எந்த சலுகையும் இல்லை. ஆனால், டீசல் வேரியண்டிற்கு ரூ.1.5 லட்சம் வரை பணத்தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.29.02 லட்சம் தொடங்கி ரூ.35.94 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Hyundai Kona Electric:
ஹுண்டாய் நிறுவனம் ஆண்டு இறுதி சலுகை வழங்கியுள்ள ஒரே ஒரு மின்சார கார் மாடல் கோனா. அதன்படி, இதன் விலையில் 3 லட்ச ரூபாயில் பண தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.23.84 லட்சம் தொடங்கி ரூ.24.03 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI