யமாஹா நிறுவனத்தின் வேறு எந்த பைக் மாடலாலும் செய்ய முடியாத அளவிற்கு, இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது என்றால் அது ஆர்எக்ஸ் - 100 பைக் மாடல் தான். RD350 பைக் மாடல் வாடிக்கையாளர்கலை கவர்ந்தாலும், அதன் விற்பனை என்பது சற்று மந்தமாகவே உள்ளது. ஆர்எக்ஸ் - 100 பைக்கை 2 ஸ்ட்ரோக் இன்ஜின்களின் ராஜா என்றாலும் மிகையாகது.  100சிசி இன்ஜின்களைப் பொருத்தவரை அதன் செயல்திறன் பிரமிக்கவைக்கும் வகையில் உள்ளது. இதனால் தான் இன்றளவும் இளைஞர்கள் கூடுதல் விலையை கொடுத்தும், நேரடி உரிமையாளரிடமிருந்து ஆர்எக்ஸ் - 100 பைக்குகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன் காரணமாகவே வாகன விற்பனையை நிறுத்தினாலும், ஆர்எக்ஸ் - 100 பைக்கிற்கான உதிரி பாகங்களை யமாஹா நிறுவனம் தொடர்ந்து சந்தையில் விற்பனை செய்து வருகிறது.


புதிய RX100 பைக்:


கடுமையான BS6 இரண்டாம் கட்ட உமிழ்வு விதிமுறைகள் காரணமாக யமஹா OG RX100 இன் 2-ஸ்ட்ரோக் எஞ்சினை மீண்டும் கொண்டு வராது என்பது அனைவரும் அறிந்ததே.  பல்வேறு புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தி வந்தாலும்,  RX100 எனும் பெயரை பயன்படுத்துவதை யமாஹா நிறுவனம் தொடர்ந்து தவிர்த்து வந்தது.  இந்நிலையில் தான், பல்வேறு முக்கிய மாற்றங்களுடன் ஆர்எக்ஸ் - 100 பைக் மீண்டும் விற்பனைக்கு வர உள்ளதாக, யமாஹா நிறுவனத்தின் இந்திய தலைவர் ஈஷின் சிஹானா தெரிவித்துள்ளார். முந்தைய மாடலை போன்றே புதிய பைக்கும் அதிக செயல்திறன் மிக்கதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.


புதிய ஃபிளாட்பார்மில் RX100 பைக்:


யமஹா இந்தியா நிறுவனத்தின் பிரபல பிளாட்ஃபார்மாக FZ பிளாட்ஃபார்ம் உள்ளது. அந்த வகையில் இதே பிளாட்ஃபார்மில் புது மாடலை உருவாக்கி அதில் இருந்து லாபம் பார்க்க யமஹா இந்தியா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  அவ்வாறு செய்யும் பட்சத்தில் மாடலின் உற்பத்தி செலவீனங்கள் குறையும். ஆனால், யமஹா நிறுவனம் இவ்வாறு செய்யாது என்றும் புது மாடலில் 149சிசி அல்லது FZ 25 மாடலில் உள்ள என்ஜின் எதுவும் புது மாடலுக்கு பொருந்த்தமாக இருக்காது என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் புது மாடலுக்காக யமஹா நிறுவனம் முற்றிலும் புது பிளாட்ஃபார்மை உருவாக்கும் என்றே தெரிகிறது. தற்போதைய 155சிசி, லிக்விட் கூல்டு மோட்டார் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 2008 ஆம் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே இந்த மோட்டார் அதிக விற்பனையை பெற்று கொடுக்கிறது என்பது கொடுக்கிறது.


RX100 பைக் விவரங்கள்:


பாக்கெட் ராக்கெடென அழைக்கப்பட்ட ஆர்எக்ஸ்-100 மாடல் பைக்கில், 98சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் - கூல்ட், டூ-ஸ்ட்ரோக் இன்ஜின் வழங்கப்பட்டு இருந்தது. 98 கிலோ எடைகொண்ட அந்த வாகனம், 11 குதிரைகளின் சக்தி மற்றும் 10.39 நியூட்டன் மீட்டர் இழுவிசை திறனை கொண்டு இருந்தது. இந்த வடிவமைப்பில் எந்தவொரு பெரிய மாற்றத்தையும் செய்யாமலேயே, அந்த வாகனம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணியில் இருந்தது குறிப்பிடத்தகக்து.


புதிய பைக்கில் என்ன இருக்கும்?


பழைய ஆர்எக்ஸ் - 100 பைக் மாடலின் தோற்றம் மற்றும் வடிவமைப்புடன் 350சிசி திறன் கொண்ட இன்ஜினுடன், ராயல் என்ஃபீல்ட் பைக்கிற்கு போட்டியாக புதிய பைக்கை யமாஹா நிறுவனம் அறிமுகப்படுத்தக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  புதியதாக வடிவமைக்க உள்ள ஆர்எக்ஸ் - 100 பைக் மாடல் புதிய ரெட்ரோ தோற்றம், கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆனாலும், 2026 வரை புதிய யமஹா RX100 மாடல் அறிமுகம் பற்றி எந்த தகவலும் வெளியாகாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI