Yamaha Fascino S: யமாஹா நிறுவனத்தின் புதிய ஃபேஸினோ எஸ் ஸ்கூட்டரின் விலை, 93 ஆயிரத்து 730 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


யமாஹா ஃபேஸினோ எஸ் ஸ்கூட்டர்:


யமஹா நிறுவனம் அதன் மிகவும் மலிவு விலை ஸ்கூட்டர் மாடலின்,  ஒரு புதிய எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஒரு நுட்பமான அப்டேட்டையும் வழங்கியுள்ளது. இந்த புதிய 'S' வேரியண்ட் மூன்று மேட் நிறங்களில் கிடைக்கிறது மற்றும் ஒரு பிரத்யேக புதிய அம்சத்தைக் கொண்டுள்ளது. இந்த புதிய 'ஆன்சர் பேக்' அம்சம் செயலி அடிப்படையிலானது மற்றும் யமஹாவின் மொபைல் செயலில் மூலம் மட்டுமே இந்த அம்சத்தை பயன்படுத்த முடியும்.


வடிவமைப்பு இன்ஜின் விவரங்கள்:


இந்த புதிய செயல்பாடானது 'யமஹா ஸ்கூட்டர் ஆன்சர் பேக்' என பட்டியலிடப்பட்டுள்ளது.  இந்த செயலியை பயன்படுத்துவது உங்கள் ஸ்கூட்டரைக் கண்டறிய உதவும். இரண்டு விநாடிகளுக்கு ஹார்ன் ஒலியுடன் இடது மற்றும் வலது இண்டிகேட்டர்களை செயல்படுத்துவதன் மூலம் இந்த அம்சம் செயல்படுகிறது.  ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஒஎஸ் இரண்டு விதமான செயலிகளும் கூகுள் பிளேஸ்டோரில் கிடைக்கிறது. அந்த செயலியில் ”Answer Back” என்ற பட்டனை தொடுவதன் மூலம் அந்த அம்சத்தை செயல்பட செய்யலாம். அதன் மூலம், கூட்ட நெரிசலான பகுதியில் உங்கள் வாகனத்தை பார்க் செய்து இருந்தாலும், எளிதில் அதனை அடையாளம் காண முடியும். இது தவிர 2024 ஆம் ஆண்டு எடிஷனில் Fascino வேறு எந்த மாற்றத்தையும் பெறவில்லை. இது இன்னும் 8.2hp மற்றும் 10.3Nm உற்பத்தி செய்யும் 125cc சிங்கிள் சிலிண்டர் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. Fascino 99 கிலோ எடை கொண்டது மற்றும் 21 லிட்டர் இருக்கைக்கு அடியில் சேமிப்பு உள்ளது. 


இதையும் படியுங்கள்: Maruti Car Offer: நாங்கனா சும்மாவா..! மாருதியின் நெக்ஸா கார்களுக்கு விலை தள்ளுபடி, எந்த மாடலுக்கு எவ்வளவு தெரியுமா?


விலை விவரங்கள்:


டிரம், டிஸ்க் மற்றும் எஸ் என மொத்தம் மூன்று வேரியண்ட்களில் Fascino ஸ்கூட்டர் இந்திய சந்தையில் கிடைக்கிறது. என்ண்ட்ரி லெவர் டிரம் வேரியண்ட் ரூ.79,900 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி), டிஸ்க் வேரியண்ட் ரூ.91,130 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை செல்கிறது. S வேரியண்ட் மேட் ரெட் அல்லது மேட் பிளாக் நிறத்தில் ரூ 93,730 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) தொடங்குகிறது. மறுபுறம் மேட் அடர் நீலத்தின் விலை ரூ.94,530 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி). தற்போது இது Suzuki Access 125, Honda Activa 125, TVS Jupiter 125, Yamaha Ray ZR 125 மற்றும் Hero Destini 125 Xtec ஆகிய ஸ்கூட்டர் மாடல்களுக்கு இந்திய சந்தையில் போட்டியாக உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI