உலகின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகனங்களில் ஒன்று யமஹா. இந்தியாவிலும் யமஹா நிறுவனத்தின் ஸ்கூட்டர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. 

Continues below advertisement

Yamaha Aerox-E ஸ்கூட்டர் அறிமுகம்:

இதையடுத்து, யமஹா நிறுவனம் Yamaha Aerox-E இ ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக இந்த இ ஸ்கூட்டர் எப்போது அறிமுகமாகும்? என்று எதிர்பார்த்து காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு இதன் அறிமுகம் மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இந்த Yamaha Aerox-E ஸ்கூட்டரின் ஆன் ரோட் விலை ரூபாய் 2 லட்சத்து 90 ஆயிரத்து 375. இந்த இ ஸ்கூட்டரில் முன்பக்கம் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. அதிகபட்சமாக 9.4 கிலோவாட் ஆற்றலில் இயங்குகிறது. 48 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. நார்மல், எகோ மற்றும் பவர் மோட்களில் இயங்குகிறது.

Continues below advertisement

மைலேஜ்:

பிஎம்எஸ்எம் மோட்டார் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 3 கிலோவாட் பேட்டரி இந்த Yamaha Aerox-E ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 117 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதை சார்ஜ் செய்வதற்கு 6.20 மணி நேரம் ஆகிறது. 2 போர்ட்டபிள் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது.  போர்ட்டபிள் சார்ஜர் வசதி உள்ளது. 

சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் இதில் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 14 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 14 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

வசதிகள்:

இந்த Yamaha Aerox-E இ ஸ்கூட்டர் 139 கிலோ எடை கொண்டது. 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரி வாரண்டி கொண்டது. 5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே இதில் உள்ளது. ப்ளூடூத் வசதி இதில் உள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் இதில் உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டல் இதில் உள்ளது. 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டலில் உள்ளது. 

ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹை பீம் இண்டிகேட்டர் வசதி இதில் உள்ளது. கால்/எஸ்எம்எஸ் அலர்ட்ஸ் வசதி இதில் உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி இதில் உள்ளது. சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/மோட்டார் கட் ஆஃப் வசதி இதில் உள்ளது. ரிவர்ஸ் பார்க்கிங் வசதி இதில் உள்ளது. 

டாப் ஸ்பீட்:

டூயல் எல்இடி முகப்பு விளக்குகள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த விளக்குகள் பகலிலும் எரியும் ஆற்றல் கொண்டது. ப்ரேக்/டெயில் விளக்குகள் இதில் உள்ளது. ஹசார்ட் வார்னிங் விளக்குகள், பாஸ் விளக்குகள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 

மேலும், பல சிறப்பம்சங்களும் இந்த Yamaha Aerox-E ஸ்கூட்டரில் உள்ளது. இதில் பொருத்தப்பட்ட பேட்டரி லித்தியம் அயர்ன் பேட்டரி ஆகும். இந்த இ ஸ்கூட்டர்தான் யமஹாவின் மிகவும் விலை உயர்ந்த ஸ்கூட்டராக இந்தியாவில் விற்பனையாகிறது. இந்த இ ஸ்கூட்டரின் தோற்றம் மிகவும் வசீகரமாக ஸ்போர்ட்ஸ் லுக்கில் உள்ளது. அதிகபட்சமாக 95 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதன் டயர்கள் 14 இன்ச் ஆகும். 


Car loan Information:

Calculate Car Loan EMI