Car Designer Ramkripa Ananthan: பிரபல வாகன வடிவமைப்பாளரான ராம்கிருபா ஆனந்தன், மஹிந்திரா நிறுவனத்திற்காக தார், ஸ்கார்ப்பியோ உள்ளிட்ட கார் மாடல்களை வடிவமைத்துள்ளார்.


எஸ்யுவி செக்மெண்டை புரட்டி போட்ட ராம்கிருபா ஆனந்தன்:


இந்தியாவில் எஸ்யுவி என யூகிக்க தொடங்கினாலே, அனைவரது நினைவிற்கும் வருவது தான் மஹிந்திரா நிறுவனம் தான். காரணம் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள  தார், எக்ஸ்யூவி700 மற்றும் ஸ்கார்பியோ போன்ற கார்கள் உள்நாட்டு சாலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த அனைத்து கார்களுக்கும் இரு ஒற்றுமை இருப்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா? அதற்கான பதில் ராம்கிருபா ஆனந்தன். மஹிந்திராவின் SUV பிரிவை மாற்றி அமைத்து பெரும் புரட்சி செய்த அவர், தற்போதுஇந்திய வாகனத் துறையில் குறிப்பிடத்தக்க வடிவமைப்பாளராகவும் உள்ளார். 


மஹிந்திரா நிறுவனத்தில் ராம்கிருபா ஆனந்தன்:


கிருபா ஆனந்தன் என்று அறியப்படும் ராம்கிருபா ஆனந்தன், கடந்த 1997 ஆம் ஆண்டு மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தில் இண்டீரியர் டிசைனராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பிட்ஸ் பிலானியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டமும் , ஐஐடி பாம்பேயில் முதுகலை வடிவமைப்பும் பெற்ற அவர், வாகனத் துறையில் முத்திரை பதிக்கத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் படைப்பாற்றல் திறன்களின் சரியான கலவையை தன்னகத்தே பெற்று இருந்தார். மஹிந்திரா நிறுவனத்தில் தனது ஆரம்பகால பணியின்போது,  பொலிரோ, ஸ்கார்பியோ மற்றும் சைலோ போன்ற கார்களின் உட்புறங்களை வடிவமைப்பதில் கிருபா ஆனந்தன் ஈடுபட்டிருந்தார். அவரது திறனை கண்டு வியந்த நிறுவனம்,  2005ம் ஆண்டு அவரை  மஹிந்திராவின் டிசைன் பிரிவு தலைவராக நியமித்தது .


XUV500 வடிவமைப்பு:


இந்த காலகட்டத்தில் தான் பிரபலமான மஹிந்திரா XUV500 மாடல் காரை கிருபா ஆனந்தன் வடிவமைத்தார். அதன் மூலம் மஹிந்திராவின் வடிவமைப்புக் குழுவில் முக்கிய நபராக தனது அடித்தளத்தை பதித்தார். இந்திய எஸ்யுவி சந்தையில் அதுவொரு பென்ச்மார்க்காக மாறியது.  XUV500 கிடைத்த வரவேற்பால் 2019ம் ஆண்டு வாக்கில்,  அவர் தலைமை வடிவமைப்பாளராக உயர்ந்தார். இது மஹிந்திராவின் எதிர்கால வாகனங்களின் தோற்றத்தையும் உணர்வையும் வடிவமைக்க முக்கிய நடவடிக்கையாக மாறியது.


டிசைன் துறையில் புரட்சி:


அதன்படி, மஹிந்திரா தார், எக்ஸ்யூவி700 மற்றும் ஸ்கார்பியோ ஆகிய மூன்று எஸ்யூவிகளின் வடிவமைப்பில் கிருபா ஆனந்தன் முக்கிய பங்கு வகித்தார். அவை இந்தியாவில் பிராண்டட் பெயர்களாக மாறின. குறிப்பாக மஹிந்திரா தார், இந்திய வாகன வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. இது ஒரு ஆஃப்-ரோடு வாகனத்தின் முரட்டுத்தனத்தை நவீன மற்றும் ஸ்டைலான வடிவமைப்புடன் ஒருங்கிணைக்கிறது.  இது கிருபா ஆனந்தனின் தொலைநோக்குப் பார்வை மற்றும் படைப்பாற்றலின் அடையாளமாகும். அவரது தலைமையின் கீழ், மஹிந்திரா பரந்த அளவிலான வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் வாகனங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தியது. எடுத்துக்காட்டாக, XUV700 ,  அதன் மேம்பட்ட அம்சங்கள் மற்றும் வடிவமைப்புகளுக்காக பெயர் பெற்றது. இதன் மூலம் பரந்த வாடிக்கையாளர் தளத்தை ஈர்க்கிறது. அதேபோன்று, ஸ்கார்பியோ, அதன் வலுவான வடிவமைப்புடன், பல ஆண்டுகளாக அதன் பிரபலத்தைத் தக்க வைத்துக் கொண்டது.


ஓலா நிறுவனத்திற்கு மாறிய ராம்கிருபா ஆனந்தன்:


தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டில், ராம்கிருபா ஆனந்தன் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் டிசைன் பிரிவு தலைவராக இணைந்தார்.  ஓலாவில், இரு சக்கர வாகனங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் நான்கு சக்கர வாகனப் பிரிவுகளுக்கான வடிவமைப்பு முயற்சிகளுக்கு அவர் தலைமை தாங்குகிறார். அதன் விளைவாக, அடுத்த ஆண்டு ஓலா நிறுவனம் தனது முதல் மின்சார பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.  வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், EV வடிவமைப்பின் எல்லைகளையும் தாண்டி வாகனங்களை வடிவமைப்பதே கிருபா ஆனந்தன் இலக்காக கொண்டுள்ளார். 


தாக்கத்தை ஏற்படுத்தும் ராம்கிருபா ஆனந்தன்:


மஹிந்திராவில் அவரது ஆரம்பகால பங்களிப்புகள் முதல் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் அவரது தற்போதைய முயற்சிகள் வரை, ஆனந்தன் தொடர்ந்து புதுமையான வடிவமைப்புகளை வழங்கியுள்ளார்.  இது தொழில்துறையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. மின்சார வாகனங்கள் பெருகிய முறையில் முக்கிய நீரோட்டமாக மாறும் போது, ​​அனந்தன் போன்ற டிசைனர் ஐகான்கள் இயக்கத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.


Car loan Information:

Calculate Car Loan EMI