Volkswagens Hybrid SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஃபோல்க்ஸ்வாகனின் வலுவான ஹைப்ரிட் எஸ்யுவி  செப்டம்பரில் அறிமுகமாக உள்ளது.

ஃபோல்க்ஸ்வாகனின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் எஸ்யுவி:

ஜெர்மனியில் வரும் செப்டம்பர் 9ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரையில், முனிச் மோட்டார் ஷோ நடைபெற உள்ளது. இனை முன்னிட்டு ஃபோல்க்ஸ்வாகன் நிறுவனம் தனது இரண்டாவது தலைமுறை T - Roc எஸ்யுவியை டீஸ் செய்துள்ளது. இந்த 5 டோர், 5 சீட்டர் எஸ்யுவி ஆனது 2026ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அப்போது டொயோட்டா கொரொல்லா க்ராஸ், நிசான் காஷ்காய், ஹுண்டாய் கோனா மற்றும் டொயோட்டா C-HR ஆகிய கார்களுடன் போட்டியிட உள்ளது. இந்த காரின் மிக முக்கிய அம்சமாக, நிறுவனத்தின் முதல் ஸ்ட்ராங் ஹைப்ரிட் எஸ்யுவி ஆக T - Roc விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. தொடர்ந்து, அடுத்த ஆண்டின் இறுதியிலோ அல்லது 2027ம் ஆண்டின் தொடக்கத்திலோ, இந்தியாவிலும் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோல்க்ஸ்வாகன் T - Roc எஸ்யுவி - ஹைப்ரிட் விவரங்கள்:

காரில் இடம்பெற உள்ள ஹைப்ரிட் பவர்ட்ரெயின் தொடர்பான விவரங்கள் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை. அதேநேரம், டொயோட்டா அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் - ஹைப்ரிட் சிஸ்டமை போன்றே ஃபோல்க்ஸ்வாகனின் ஹைப்ரிட் சிஸ்டமும் செயல்படும் என கூறப்படுகிறது. அதன்படி, நிறுவனத்தின் ஹைப்ரிட் அமைப்பானது பெட்ரோல் இன்ஜின் மற்றும் மின்சார மோட்டார் ஆகிய இரண்டின் ஆற்றலையும் சேர்த்து T - Roc வாகனத்தை இயக்க உள்ளது. கூடுதல் தகவல்களின்படி, இந்த இரண்டாவது தலைமுறை எஸ்யுவியில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ்ட் பெட்ரோல்  பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட உள்ளது. அதனுடன் மின்சார மோட்டாரையும் சேர்த்து 201bhp முதல்  268 வரையிலும் மற்றும் 350Nm முதல் 400Nm வரையிலும் ஆற்றலை உற்பத்தி செய்யும் என கூறப்படுகிறது.

உலக நாடுகளில் கிடைக்கும் இன்ஜின் ஆப்ஷன்:

குறிப்பிட்ட சில சர்வதேச சந்தைகளில் தற்போதைய ஃபோல்க்ஸ்வாகன் T - Roc எஸ்யுவியில், 1.4 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில் முதல் இன்ஜின் ஆப்ஷனானது 147bhp மற்றும் 250Nm ஆற்றலையும், இரண்டாவது ஆப்ஷனானது 188bhp மற்றும் 320Nm ஆற்றலையும் உற்பத்தி செய்கிறது. இந்த காரின் ஃப்ளாக்‌ஷிப் வேரியண்டான R, 2.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜினை கொண்டு 296bhp ஆற்றலை உற்பத்தி செய்கிறது.

T - Roc - டிசைன், வசதி அப்க்ரேட்கள்:

முற்றிலும் புதிய T - Roc எஸ்யுவி ஆனது வலுவான ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன்,  கணிசமான டிசைன் மாற்றங்கள் மற்றும் வசதி மேம்பாடுகளையும் பெற உள்ளது. கசிந்த புகைப்படங்களின்படி, முகப்பு விளக்கிற்கு கீழே பெரிய ஹெக்ஸகன் வடிவிலான க்ரில் இடம்பெற்றுள்ளது. 

முகப்பு விளக்குகள் முந்தைய எடிஷனை காட்டிலும் மெல்லியதாக உள்ளது. மையப்பகுதியில் வழக்கமான லோகோவுடன் கூடிய மெல்லிய எல்இடி லைட் பாரானது முகப்பு விளக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. முன் மற்றும் பின்புற ஓவர்ஹேங்ஸ் நீளமானதாக இருக்கும். கூடுதலாக லைட் பார் மூலம் இணைக்கப்பட்ட டெயில் லேம்ப்கள் மற்ரும் சற்றே திருத்தப்பட்ட ரியர் பம்பர் ஆகியவையும் அப்டேட்களாக இணைக்கப்பட்டுள்ளன.


Car loan Information:

Calculate Car Loan EMI