Volkswagen Upcoming Cars 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வரும் 2026ம் ஆண்டில் ஃபோக்ஸ்வாகனம் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

2026க்கான ஃபோக்ஸ்வாகனின் ப்ளான்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வரும் புத்தாண்டில் புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்த ஒவ்வொரு ப்ராண்டும் தீவிரம் காட்டி வருகிறது. அந்த பட்டியலில் தரத்திற்கு பெயர்போன ஃபோக்ஸ்வாகனும் தவிர்க்க முடியாததாக உள்ளது. விர்டஸ் கார் மாடலை உள்ளூரில் அறிமுகப்படுத்தி 3 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. டைகன் விற்பனைக்கு வந்தும் 4 ஆண்டுகளுக்கும் அதிகமாகிறது. ஃபோக்ஸ்வாகனின் விற்பனை ஒட்டுமொத்தமாக அதிகரிக்க இரண்டு மாடல்களும் முக்கிய பங்களிப்பு வழங்கினாலும், சந்தைப்படுத்தப்பட்ட பிறகு எந்தவொரு பெரிய அப்டேட்களையும் பெறவில்லை. ஆனால், 2026ம் ஆண்டில் அந்த நிலை மாற உள்ளதோடு, முற்றிலும் புதிய எஸ்யுவி ஆன டெய்ரனும் உள்ளூரில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்த கார் மாடல்கள் குறித்து இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

ஃபோக்ஸ்வாகனின் புதிய கார்கள்:

1. ஃபோக்ஸ்வாகன் டெய்ரன்

முற்றிலும் புதிய டெய்ரன் எஸ்யுவி ஆனது, மூன்று வரிசை இருக்கைகளை கொண்ட ப்ரீமியம் எஸ்யுவி பிரிவில் ஃபோக்ஸ்வாகனின் ரி-எண்ட்ரியை குறிக்கிறது. அதாவது அண்மையில் நிறுத்தப்பட்ட டிகுவான் ஆல் ஸ்பேஸ் மாடலுக்கு மாற்றாக புதிய எஸ்யுவி களமிறக்கப்படுகிறது. முற்றிலும் உதிரிபாகங்களாக கொண்டு வரப்பட்டு, உள்நாட்டில் அவுரங்காபாத்தில் அசெம்பிள் செய்யப்பட உள்ளது. விலை அடிப்படையில் நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் டிகுவான் ஆர் -லைனிற்கு கீழே டெய்ரன் நிலைநிறுத்தப்படலாம்.

இதில்  204hp மற்றும் 320Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 2.0 லிட்டர் TSI பெட்ரோல் இன்ஜின் இடம்பெறக்கூடும். அதற்கு 7 ஸ்பீட் டிஎஸ்ஜி ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன், ஆல் வீல் ட்ரைவ் வசதி எதிர்பார்க்கப்படுகிறது. டெய்ரனின் பெரும்பாலான ஸ்டைலிங் அம்சங்கள் டிகுவான் ஆர் -லைனில் இருந்து பின்பற்றப்பட்டாலும், மூன்றாவது வரிசை இருக்கைகளை பெறும் அளவிற்கு நீளமானதாக இருக்கும். ஆண்டின் முதல் பாதியில் சந்தைப்படுத்தப்பட வாய்ப்புள்ள டெய்ரன் எஸ்யுவியின் விலை, சுமார் 45 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம்.

2. ஃபோக்ஸ்வாகன் டைகன் ஃபேஸ்லிஃப்ட்

டைகன் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் ஏற்கனவே இந்தியாவில் சாலை பரிசோதனைகளை தொடங்கிவிட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின்படி, ஷீட் மெட்டல் பிரிவில் பெரிய அப்டேட்கள் இல்லாத நிலையில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட அலாய் வீல்களுடன் சேர்ந்து மிருதுவான பாகங்களுக்கு மேம்படுத்தல்கள் வழங்கப்படலாம். ஏற்கனவே உள்ள இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களில் எந்தவித மாற்றமும் இல்லாத நிலையில், 1.0 லிட்டர்  TSI இன்ஜினில் புதியதாக 8 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதில் 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன்  மட்டுமே வழங்கப்படுகிறது. புதியதாக இணைக்கப்படும் அம்சங்கள் பிரிவில் டைகனின் கூடுதலாக பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ADAS வழங்கப்படலாம். அடுத்தாண்டின் மூன்றாவது காலாண்டில் சந்தைப்படுத்த வாய்ப்புள்ள இந்த காரின் விலை, ரூ.12 முதல் 19 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.

3. ஃபோக்ஸ்வாகன் விர்டஸ் ஃபேஸ்லிஃப்ட்

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட புதிய விர்டஸ் கார் மாடலானது, அலாய் வீலில் புதிய டிசைனுடன் கூடிய முன் மற்றும் பின்பக்க மேம்படுத்தல்களை பெற உள்ளது. பெரும்பாலான இன்டீரியர்கள் மற்றும் அம்சங்களானது ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட, டைகன் உடன் பகிரப்பட உள்ளது.  ADAS இதில் புதிய அம்சங்களாக சேர்க்கப்படலாம். தற்போதுள்ள இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களில் எந்தவித மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது. அதேநேரம்,  1.0 லிட்டர்  TSI இன்ஜினில் புதியதாக 8 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் சேர்க்கப்படலாம். 2026ம் ஆண்டின் கடைசி காலாண்டில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ள புதிய விர்டஸ் விலை, ரூ.12 முதல் ரூ.18 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.


Car loan Information:

Calculate Car Loan EMI