பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் தனது புதிய மாடல் கார் ஒன்றை விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. SUV ரகத்தை சேர்ந்த வோக்ஸ்வேகன் டைகன் என்ற கார் தான் அது. வோக்ஸ்வேகன் நிறுவன இந்திய குழுமத்தின் 2.0 ப்ராஜெக்ட் மூலம் இந்த டைகன் கார் வெளியாகவுள்ளது. தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த வோக்ஸ்வாகன் பயணிகள் கார்களின் இந்தியாவின் பிராண்ட் இயக்குநர் ஆஷிஷ் குப்தா, இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் இந்த கார் வெளியாகும் என்று அறிவித்தார்.  






1930-களின் இறுதியில் ஜெர்மனிய நகரை தலைநகரமாக கொண்டு 'German Labour Front' என்ற அமைப்பால் உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் வோக்ஸ்வேகன். கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக பயணிகள் மற்றும் பலதரப்பட்ட வாகனங்களை தயாரித்து வருகின்றது வோக்ஸ்வேகன் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவிலும் வோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. கடந்த 2007ம் ஆண்டு வோக்ஸ்வேகன் நிறுவனம் தன்னுடைய வோக்ஸ்வேகன் பசாட் என்ற மடலை தான் முதன்முதலில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


McLaren India Launch | அசத்தல் வடிவமைப்பு.. அதிவேகம்.. இந்திய சந்தையில் கால்பதிக்கும் மெக்லாரென்.!   






10 லட்சம் ரூபாய் என்ற ஆரம்ப விலையில் வோக்ஸ்வேகன் டைகன் கார்கள் வெளியிடப்படலாம் என்று நம்பப்படுகிறது. 1.0 லிட்டர் என்ஜின் கொண்ட மாடலில் 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் முறைகளை இந்த வாகனத்தில் வழங்கியுள்ளது வோக்ஸ்வேகன் நிறுவனம். அதேபோல 1.5 லிட்டர் மடலில் 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 7 ஸ்பீட் DSG கியர் பாக்ஸ் அமைப்புடன் இந்த கார் இந்திய சந்தையில் வெளியாகவுள்ளது.    






டைகனின் உட்புற அமைப்பில் TFT  டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருடன் கூடிய மெய்நிகர் காக்பிட் வடிவமைக்கப்பட்டுள்ளது. 10.1 இன்ச் தொடுதிரை, உள்பட பல சிறப்பு அம்சங்கள் இதன் உட்புற அமைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  


Car loan Information:

Calculate Car Loan EMI