Volkswagen Car Offer: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஃபோக்ஸ்வேகன் கார் மாடல்களுக்கு, ஜுன் மாதத்தில் பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகன்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனையை ஊக்குவிக்கவும், பழைய யூனிட்களை காலி செய்யவும் உற்பத்தி நிறுவனங்கள் சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவிப்பது வழக்கம், அந்த வகையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது விர்டஸ் மற்றும் டைகுன் கார் மாடல்களின் குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு ஜுன் மாதத்தில் பல சலுகைகளை அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ரூ.2.7 லட்சம் வரை இந்த பணப்பலன் நீடிக்கிறது. பணத்தள்ளுபடி தொடங்கி அல்லது எக்சேஞ்ச் போனஸ் அல்லது நீட்டிக்கப்பட்ட வாரண்டி பேக்கேஜ் மூலம் இந்த பலன்களை நீங்கள் அனுபவிக்கலாம். சலுகை மற்றும் தள்ளுபடிகளானது மாநிலம் மற்றும் கையிருப்பின் அடிப்படையில் மாறக்கூடும்.

ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் காருக்கான சலுகை

விர்டஸ் கார் மாடலானது 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் TSI வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றிற்கு குறிப்பிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.  இதில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆட்டோமேடிக் எடிஷனிற்கு ரூ.2.15 லட்சமும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மேனுவல் எடிஷன் ரூ.2.20 லட்சம் வரையிலும் சலுகை மற்று தள்ளுபடிகளை பெறுகிறது. அதேநேரம், GT பிளஸ் க்ரோம் வேரியண்டானது ரூ.1.55 லட்சம் வரையிலும், GT பிளஸ் ஸ்போர்ட் வேரியண்ட் ரூ.1.2 லட்சம் வரையிலும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காருக்கான சலுகை

ஃபோக்ஸ்வேகனின் டைகுன் கார் மாடலுக்கான சலுகை அதனை அணுகுவதை மேலும் எளிதாக்கியுள்ளது. அதன்படி, 1.5 லிட்டர் டர்போசார்ஜ்ட்  பெட்ரோல் இன்ஜின் உடன் DSG கியர்பாக்ஸை கொண்டுள்ள டாப் எண்ட் வேரிடண்டான GT பிளஸ் க்ரோம் ரூ.2.75 லட்சம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. GT பிளஸ் ஸ்போர்ட் வெர்ஷனுக்கு  ரூ.1.85 லட்சம் சலுகை வழங்கப்படுகிறது. 1.0 லிட்டர் TSI ஆப்ஷன்களில் டாப் எண்ட் வேரியண்டிற்கு ரூ.2.2 லட்சம் வரையிலும்,  ஆட்டோமேடிக் வேரியண்டிற்கு ரூ.1.4 லட்சமும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட யூனிட்களை காலி விற்று தீர்க்கவும், அதிகப்படியான வாடிக்கையாளர்களை கவரும் நோக்கிலும் இந்த சலுகைகளை ஃபோக்ஸ்வேகன் அறிவித்துள்ளதாம். இது லிட்டருக்கு 18 முதல் 20 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்குகிறது.

விர்டஸ் கார் மாடல் விவரங்கள்:

விர்டஸ் கார் மாடலின் விலை ரூ.14.35 லட்சம் தொடங்கி ரூ.24.09 லட்சம் வரை நீள்கிறது. அட்டகாசமான வடிவமைப்பை கொண்ட இந்த செடான் கார் மாடலானது, 14 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. பவர் ஸ்டியரிங், ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் என 40-க்கும் அதிகமான தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது. 6 ஏர்பேக்குகள் உட்பட நிலையான பாதுகாப்பான அம்சங்களை கொண்டுள்ளது. சர்வதேச அளவிலான பாதுகாப்பு சோதனையில், பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என இருதரப்பினர் பாதுகாப்பையும் உறுதி செய்து 5 ஸ்டார் ரேட்டிஙகி பெற்றுள்ளது.

டைகுன் கார் மாடல் விவரங்கள்:

டைகுன் கார் மாடலின் விலை ரூ.14.65 லட்சத்தில் தொடங்கி ரூ.24.57 லட்சம் வரை நீள்கிறது. 16 வேரியண்களில் விற்பனை செய்யப்படும் இந்த காரானது லிட்டருக்கு 17 முதல் சுமார் 20 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்குகிறது. தாராளமான இடவசதி, வலுவான தரமான கட்டமைப்பு காரின் பிரதான அம்சமாக கருதப்படுகிறது. இதுவும் சர்வதேச அளவிலான பாதுகாப்பு சோதனையில், பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என இருதரப்பினர் பாதுகாப்பையும் உறுதி செய்து 5 ஸ்டார் ரேட்டிஙகி பெற்றுள்ளது. இதனைஉறுதி செய்ய 6 ஏர் பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.


Car loan Information:

Calculate Car Loan EMI