ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் இந்தியாவில் கார்களின் விலை குறைந்துள்ளது. ஜிஎஸ்டி வரி மாற்றம் நாளை முதல் அமலாக உள்ள நிலையில், இந்தியாவில் கார்களின் விலை மிகப்பெரிய அளவு குறைந்துள்ளது.

Continues below advertisement

முன்னணி கார் நிறுவனமான வோல்க்ஸ்வோகனும் தனது கார்களின் விலையை குறைத்துள்ளது. அதன் எந்த வேரியண்ட்க்கு எவ்வளவு விலை குறைக்கப்பட்டுள்ளது என்பதை கீழே காணலாம்.

1. Virtus 1.0 TSI Comfortline MT:

Virtus மாடலின் Virtus 1.0 TSI Comfortline MT வேரியண்டின் பழைய விலை ரூபாய் 11.56 லட்சம் ஆகும். இதன் புதிய விலை ரூபாய் 11.16 லட்சம் ஆகும். ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் இந்த காரின் விலை ரூபாய் 40 ஆயிரம் வரை குறைந்துள்ளது. 

Continues below advertisement

2. Virtus 1.0 TSI GT-Line MT:

விர்டஸ் மாடலின் Virtus 1.0 TSI GT-Line MT வேரியண்ட் காரின் பழைய விலை ரூபாய் 14.08 லட்சம் ஆகும். இந்த கார் ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் ரூபாய் 49 ஆயிரம் குறைந்துள்ளது. இதனால், இந்த கார் இனி ரூபாய் 13.59 லட்சத்திற்கு விற்கப்படும். 

3. Virtus 1.5 TSI GT MT Plus Chrome:

விர்டஸ் காரின் Virtus 1.5 TSI GT MT Plus Chrome வேரியண்டின் பழைய விலை ரூபாய் 17.60 லட்சம் ஆகும். இந்த கார் ரூபாய் 61 ஆயிரம் வரை விலை குறைந்துள்ளது. இந்த கார் இனி ரூபாய் 16.99 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.

4. Virtus 1.5 TSI GT MT Plus Sport:

Virtus காரின் வேரியண்டான Virtus 1.5 TSI GT MT Plus Sport காரின் பழைய விலை ரூபாய் 17.85 லட்சம் ஆகும். இந்த காரின் விலை ரூபாய் 62 ஆயிரம் விலை குறைக்கப்பட்டு இனி ரூபாய் 17.23 லட்சத்திற்கு விற்கப்படும். 

5. Virtus 1.0 TSI Highline AT:

Virtus காரின் மற்றொரு வேரியண்டான Virtus 1.0 TSI Highline AT காரின் பழைய விலை ரூபாய் 14.88 லட்சம் ஆகும். இதன் புதிய விலை ரூபாய் 14.27 லட்சம் ஆகும். இந்த கார் ரூபாய் 61 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. 

6. Virtus 1.0 TSI GT-Line AT:

இந்த Virtus 1.0 TSI GT-Line AT காரின் பழைய விலை ரூபாய் 15.18 லட்சம் ஆகும். இந்த கார் ரூபாய் 52 ஆயிரம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் புதிய விலை ரூபாய் 14.66 லட்சம் ஆகும். 

7. Virtus 1.5 TSI GT Plus DSG Chrome:

இந்த Virtus 1.5 TSI GT Plus DSG Chrome காரின் பழைய விலை ரூபாய் 19.15 லட்சம் ஆகும். இந்த கார் ரூபாய் 66 ஆயிரம் வரை விலை குறைந்துள்ளது. 

8. Virtus 1.5 TSI GT Plus DSG Sport:

இந்த Virtus 1.5 TSI GT Plus DSG Sport காரின் பழைய விலை ரூபாய் 19.40 லட்சம் ஆகும். இந்த கார் ரூபாய் 67 ஆயிரம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை ரூபாய் 18.73 லட்சம் ஆகும்.

9. Taigun 1.0 TSI Comfortline MT:

இந்த மாடலில் இந்த Taigun 1.0 TSI Comfortline MT வேரியண்டின் பழைய விலை ரூபாய் 11.80 லட்சம் ஆகும். ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் இந்த கார் ரூபாய் 41 ஆயிரம் வரை விலை குறைந்துள்ளது. இந்த காரின் புதிய விலை ரூபாய் 11.39 லட்சம் ஆகும்.

10. Taigun  1.0 TSI Highline AT:

இந்த காரில் Taigun 1.0 TSI Highline AT வேரியண்ட்டின் விலை ரூபாய் 48 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த கார் இதன் பழைய விலையான ரூபாய் 14 லட்சத்தில் இருந்து ரூபாய் 13.52 லட்சத்திற்கு விற்கப்பட உள்ளது. 

11.Taigun  1.0 TSI GT-Line AT:

இந்த காரில் Taigun  1.0 TSI GT-Line AT வேரியண்டிற்கு ரூபாய் 55 ஆயிரம் குறைத்துள்ளனர். இதன் பழைய விலை ரூபாய் 15.90 லட்சம் ஆகும். இந்த கார் தற்போது ரூபாய் 15.35 லட்சத்திற்கு விற்கப்பட உள்ளது. 

12. Taigun  1.5 TSI GT Plus DSG Chrome:

இந்த காரில் Taigun  1.5 TSI GT Plus DSG Chrome வேரியண்ட்டின் பழைய விலை ரூபாய் 19.58 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 67 ஆயிரம் வரை ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை தற்போது ரூபாய் 18.91 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

13.Taigun 1.5 TSI GT Plus DSG Sport:

இந்த Taigun  1.5 TSI GT Plus DSG Sport காரின் விலை தற்போது 19.83 லட்சத்திற்கு விற்கப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் இதன் விலை ரூபாய் 68 ஆயிரம் வரை குறைந்துள்ளது. இதனால், இந்த கார் இனிமேல் ரூபாய் 19.15 லட்சத்திற்கு விற்கப்பட உள்ளது. 

14. Tiguan R-Line (CBU):

இந்த Tiguan R-Line (CBU) காரின் பழைய விலை ரூபாய் 49 லட்சம் ஆகும். ஜிஎஸ்டி வரி குறைப்பால் ரூபாய் 3.27 லட்சம் வரை விலை குறைந்துள்ளது. இதனால், இந்த Tiguan R-Line (CBU) கார் இதன்பின்னர் ரூபாய் 45.73 லட்சத்திற்கு விற்கப்பட உள்ளது.

15. Golf GTI (CBU):

இந்த Golf GTI (CBU) கார் ரூபாய் 53 லட்சத்திற்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த காரின் விலை ரூபாய் 2.09 குறைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூபாய் 50.91 லட்சத்திற்கே இனி விற்கப்பட உள்ளது.

ஜிஎஸ்டி வரி மாற்றம் நாளை முதல் இந்தியாவில் அமலாக உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI