Volkswagen Golf GTI: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கூடுதலாக 100 கோல்ஃப் ஜிடிஐ மாடல் கார்களை விற்பனைக்கு கொண்டு வர ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ - கூடுதலாக 100 யூனிட்கள்:
ஃபோல்க்ஸ்வேகன் நிறுவனம் தனது புதிய காரான கோல்ஃப் ஜிடிஐ-யின் 150 யூனிட்களை இந்திய சந்தையில் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்து அதற்கான முன்பதிவையும் தொடங்கியது. அடுத்த சில மணி நேரங்களிலேயே அனைத்து யூனிட்களுக்குமான முன்பதிவும் நடந்து முடிந்தது. தேவை அடிப்படையில் மேலும் 100 யூனிட்களை இந்தியாவிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிவித்துள்ளது. நடப்பாண்டு இறுதியிலேயே இரண்டாவது பேட்சுக்கான முன்பதிவு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதுபோக, வரும் 26ம் தேதியன்று கோல்ஃப் ஜிடிஐ-யின் விலை அறிவிக்கப்பட்ட பிறகு முதல் பேட்ச்சில் முன்பதிவு செய்வதவர்கள் சிலர் அதனை ரத்து செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மேலும் சிலருக்கும் கோல்ஃப் ஜிடிஐ காரை முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது. இரண்டாவது பேட்ச்சில் முன்பதிவு செய்பவர்களுக்கு அடுத்த ஆண்டில் தான் கார் டெலிவெரி செய்யப்பட உள்ளது.
முன்பதிவு செய்வது எப்படி?
கோல்ஃப் ஜிடிஐ மாடலுக்கான முன்பதிவை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் நூதனமாக மேற்கொண்டது. அதன்படி, ஃபோக்ஸ்வேகன் சார்பில் ஆன்லைனில் நடத்தப்படும் ஃக்விஸ் போட்டியில் பங்கேற்று ஐந்திற்கு நான்கு மதிப்பெண்களை எடுத்தால் மட்டுமே, முன்பதிவு செய்வதற்கான லிங்கை பயனர்கள் பெற முடியும். இந்த லிங்கில் ஒரு மொபைல் நம்பருக்கு ஒரு எண்ட்ரியை மட்டுமே மேற்கொள்ள முடியும். அதன்படி, இந்த லிங்கில் நுழைந்து தேவையான தகவல்களை பதிவிட்டு ஃபோக்ஸ்வேகனின் கோல்ஃப் ஜிடிஐ கார் மாடலுக்கு முன்பதிவு மேற்கொள்ளலாம். முதல் பேட்ச்சில் முன்பதிவு செய்தவர்களுக்கு வரும் ஜுன் மாதம் முதல் கார்கள் விநியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் விலை:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஃபோக்ஸ்வேகனின் கோல்ஃப் ஜிடிஐ கார் மாடலின் ஷோ ரூம் விலை சுமார் 53 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரிகள் அனைத்தும் சேர்த்து வாங்கும்போது, ஆன் - ரோட் விலை சில மாநிலங்களில் 60 லட்சம் ரூபாயை கடக்கலாம். இந்திய சந்தையில் ரூ.44.90 லட்சம் முதல் ரூ.55.90 லட்சம் வரையிலான விலையை கொண்ட 2 டோர் மினி கூப்பர் எஸ் மாடலுக்கும், அதிக சக்தி வாய்ந்த ரூ.94.80 லட்சம் மதிப்பிலான மெர்சிடஸ் AMG A 45 S கார் மாடலுக்கும் இடையே புதிய கோல்ஃப் ஜிடிஐ இடம்பெற உள்ளது. இதனிடையே, அதிக சக்தி வாய்ந்த 328hp ஆல்-வீல் ட்ரைவ் திறன் கொண்ட கோல்ஃப் R மற்றும் டைனமிக் சேசிஸ் கொண்ட ஜிடிஐ கார் மாடலும் எதிர்காலத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்ஜின் விவரங்கள்:
இந்தியாவிற்கான கோல்ஃப் ஜிடிஐ கார் மாடல் 265hp மற்றும் 370 Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை கொண்டிருக்கும். அண்மையில் ஃபோக்ஸ்வேகன் சார்பில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட டைகுன் R-Line-ஐ காட்டிலும், இந்தியாவில் அதிக சக்தி வாய்ந்த அந்நிறுவனத்தின் கார் மாடலாக கோல்ஃப் ஜிடிஐ கார் உருவெடுக்கும். இதில் 7 ஸ்பீட் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் சிஸ்டத்திற்கும், எலெக்ட்ரானிகல்லி கண்ட்ரோல்ட் ஃப்ரண்ட் ஆக்சல் டிஃப்ரென்ஷியல் லாக்கிற்கு ஆற்றல் விநியோகிக்கப்படுகிறது. இதனால், வெறும் 5.9 விநாடிகள் பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை கோல்ஃப் ஜிடிஐ கார் எட்டும் என கூறப்படுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த ஹேட்ச்பேக் பயணிக்கும்.
கோல்ஃப் ஜிடிஐ - உட்புற, வெளிப்புற அம்சங்கள்:
எல்இடி முகப்பு விளக்குகளுக்கு மத்தியில் VW என்ற ஒளிரூட்டப்பட்ட லோகோக்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்புற பம்பரானது X வடிவிலான ஃபாக் லைட் கொண்டுள்ளது. முன்புற கதவுகளில் GTI பேட்ஜை பெறுகிறது. 18 இன்ச் அலாய் வீல்கள், ஸ்மோக்ட் எல்இடி டெயில் லைட்ஸ், ரூஃப் ஸ்பாய்லர், ட்வின் எக்சாஸ்ட் டிப்ஸ் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. கிரெனடில்லா பிளாக், ஓரிக்ஸ் ஒயிட், மூன்ஸ்டோன் கிரே பிளாக் மற்றும் கிங்ஸ் ரெட் ஆகிய 4 வண்ண விருப்பங்களில் இந்த கார் விற்பனை சந்தைப்படுத்தப்பட உள்ளது.
உட்புறத்தில் GTI பேட்ஜ் உடன் கூடிய லெதர் ரேப் செய்யப்பட்ட ஸ்டியரிங் வீலை கொண்டுள்ளது. அதோடு, பேடல் ஷிஃப்டர்ஸ், 12.9 இன்ச் டச்-ஸ்க்ரீன், 10.25 இன்ச் ட்ரைவர்ஸ் டிஸ்பிளே, 7 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங், ஆம்பியண்ட் லைட்ஸ், பனோரமிக் சன்ரூஃப், டார்டன் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகிய அம்சங்களும் கோல்ஃப் ஜிடிஐ கார் மாடலில் வழங்கப்பட்டுள்ளன.
Car loan Information:
Calculate Car Loan EMI