இந்தியாவில் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. டிவிஎஸ், ஹோண்டா ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக பல நிறுவனங்களும் ஸ்கூட்டர் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Continues below advertisement

VLF Mobster:

இந்தியாவில் வளர்ந்து வரும் நிறுவனமாக VLF நிறுவனம் உள்ளது. இவர்களின் VLF Mobster ஸ்கூட்டர் உள்ளது. இந்த ஸ்கூட்டரின் தரம், விலை, மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம்.

369 கி.மீட்டர் மைலேஜ்:

இந்த VLF Mobster ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 54 ஆயிரத்து 190. இந்த ஸ்கூட்டரில் 125 சிசி திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டர் 122 கிலோ ஆகும். இதன் இருக்கை உயரம் 797 மி.மீட்டர் ஆகும். பெட்ரோல் டேங்கர் 8 லிட்டர் வரை உள்ளது.

Continues below advertisement

இந்த ஸ்கூட்டரில் 46 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 368 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 11.7 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.

சிறப்புகள்:

இதில் 1 சிலிண்டர், லிக்யூட் கூல்ட், 4 வால்வுகள் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பிஎஸ்6 பாஸ் 2 பி எமிஷன் ஸ்டாண்டர்ட் பொருத்தப்பட்டுள்ளது. சுவிட்சபிள் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் இதில் உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. 

அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 12 இன்ச் சக்கரங்கள், பின்பக்கம் 12 இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக் ஃப்ரன்ட் ஃபோர்க் சஸ்பென்சன் முன்பக்கமும், கேஸ் சார்ஜ்ட் டபுள் ஷாக் அப்சார்பர் சஸ்பென்சன் பின்பக்கமும் பொருத்தப்பட்டுள்ளது.

வசதிகள்: 8 லிட்டர் பெட்ரோல் டேங்கர் வசதி உள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 155 மி.மீட்டர் ஆகும். 40 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 4 வருடம் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே வசதி பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் மொபைல் போன் கனெக்ஷன் வசதி உள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது.

ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டலில் உள்ளது. 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டலில் உள்ளது. டேகோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம் வசதி உள்ளது. லோ ப்யூல் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹை பீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது. எஞ்ஜின் டெம்பரேச்சர் இண்டிகேட்டர் வசதி உள்ளது. மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் வசதி உள்ளது. கால்/எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது.

சிறப்பம்சங்கள்:

ட்ராக்ஷன் கன்ட்ரோல் வசதி உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. சைலன்ஸ் கவர் வசதி உள்ளது. டூயல் எல்இடி ப்ரொஜக்டர் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகலில் எரியும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ப்ரேக்/ டெயில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பாஸ் விளக்குகள், சிக்னல் பொருத்தப்பட்டுள்ளது. டிக்கி வசதி பொருத்தப்பட்டுள்ளது. பில்லியன் சீட் வசதி உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI