VinFast VF6 & VF7: வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் VF6 மற்றும் VF7 ஆகிய இரண்டு மின்சார கார் மாடல்களுக்குமான முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது.
வின்ஃபாஸ்ட் VF6 & VF7:
இந்திய ஆட்டோமோபைல் சந்தையில் தனது புதிய VF6 மற்றும் VF7 கார் மாடல்கள் மூலம், பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. விழாக்கால சூழலை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் வகையில் செப்டம்பர் 6ம் தேதி இரண்டு கார்களையும் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. நடப்பாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி க்ளோபல் எக்ஸ்போவில் முதல்முறையாக இந்த கார் காட்சிப்படுத்தப்பட்ட இந்த கார்கள், நாடு முழுவதும் நடைபெற்ற ரோட் ஷோவில் பங்கேற்று பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
வின்ஃபாஸ்ட் VF6 & VF7 - முன்பதிவு தீவிரம்
சென்னை உள்ளிட்ட பிரதான நகரங்களில், வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் விற்பனை நிலையங்கள் திறப்பு விழாவிற்கு தயாராகி வருகின்றன. இந்த விற்பனை நிலையங்களிலும், ஆன்லைன் வாயிலாகவும் விருப்பமுள்ள நபர்கள், வின்ஃபாஸ்ட் கார் மாடல்களை முன்பதிவு செய்துகொள்ளலாம். இரண்டு கார் மாடல்களுமே, தூத்துக்குடியில் உள்ள நிறுவனத்தின் ஆலையில் தான் அசெம்பிள் செய்யப்படுகின்றன.
வின்ஃபாஸ்ட் VF6 வடிவமைப்பு விவரங்கள்
VF6 கார் மாடலின் எண்ட்ரி லெவல் வேரியண்டின் விலை சுமார் 25 லட்சம் ரூபாயிலிருந்து தொடங்கலாம் என கூறப்படுகிறது. இந்த கார் மாடலானது 4,238 மில்லி மீட்டர் நீளம், 1,820 மில்லி மீட்டர் அகலம் கொண்டு மிட்சைஸ் எஸ்யுவி பிரிவில் கச்சிதமாக பொருந்துகிறது. 2,730 மில்லி மீட்டர் வீல் பேஸ் ஆனது விசாலமான இடவசதிக்கு வழிவகை செய்வதோடு, 423 லிட்டர் பூட் ஸ்பேஸை வழங்குகிறது. கூபே மாதிரியான ப்ரொஃபைலை கொண்டு, பின்புறத்தில் ப்ராண்டின் அடையாளமாக உள்ள V வடிவிலான எல்இடி டிஆர்எல்கள் மற்றும் கனெக்டட் எல்இடி ஸ்ட்ரிப்களை கொண்டுள்ளது.
வின்ஃபாஸ்ட் VF6 உட்புற விவரங்கள்
உட்புற அமைப்பை கவனித்தால் 12.9 இன்ச் டச்ஸ்க்ரீன் ஆனது கவனத்தை ஈர்க்கும் அம்சமாக உள்ளது. இதில் கூகுள் செயலிகள், சப்போர்ட்ஸ் வாய்ஸ் கமெண்ட்ஸ், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் பேரிங் ஆகிய அம்சங்களை பெற்றுள்ளது. வழக்கமான இன்ஸ்ட்ரூமெண்டல் க்ளஸ்டருக்கு மாற்றாக, வாகனத்தை ஓட்டுவதற்கான அனைத்து தரவுகளுமே இந்த ஒரே திரையிலேயே வழங்கப்படுகிறது. இதன் மூலம், கேபின் வடிவமைப்பு மிகவும் எளிமையாக காட்சியளிக்கிறது. ஓவர் தி ஏர் அப்டேட் வசதியையும் இந்த கார் பெறுகிறது.
வசதிகள் அடிப்படையில் வெண்டிலேடட் சீட்ஸ்,. அகலமான பனோரமிக் க்ளாஸ் ரூஃப், டூயல் ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல், ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜர் ஆகியவை பயணத்தை வசதியானதாக மாற்றுகின்றன. அதோடு பாதுகப்பை உறுதி செய்வதற்காக 7 ஏர் பேக்குகள் உடன் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், மல்டி ஃபங்சனல் ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கிய லெவல் 2 ADAS தொழில்நுட்ப வசதி வழங்கப்பட்டுள்ளது.
வின்ஃபாஸ்ட் VF6 பேட்டரி விவரங்கள்
வின்ஃபாஸ்ட் நிறுவனம் VF6 கார் மாடலை ECO மற்றும் Plus என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்ய உள்ளது. இரண்டிலுமே 59.6KWh பேட்டரி மட்டுமே வழங்கப்பட உள்ளது. இந்த பேட்டரி மூலம் ECO வேரியண்டானது 174hp மற்றும் 250Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் என்றும், Plus வேரியண்டானது 204hp மற்றும் 310Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் என்றும் கூறப்படுகிறது. இரண்டு வேரியண்ட்களும் உற்பத்தி செய்யப்படும் ஆற்றலானது முன்புற சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது. நிறுவன தகவலின்படி, முழுமையாக சார்ஜ் செய்தால் முதல் வேரியண்ட் 399 கிலோ மீட்டரும், இரண்டாவது வேரியண்ட் 381 கிலோ மீட்டரும் ரேஞ்ச் அளிக்கும். டிசி சார்ஜிங் மூலம் வெறும் சுமார் 30 நிமிடங்களில் 20 முதல் 80 சதவிகித சார்ஜிங்கை அடைய முடியும்.
வின்ஃபாஸ்ட் VF7 விவரங்கள்:
வின்ஃபாஸ்டின் பெரிய கார் மாடலான VF7, 75.3KWh பேட்டரி பேக்கை கொண்டு, 201hp மற்றும் 309Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 451 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. கூடுதல் ஆற்றலை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த காரின் ப்ளஸ் வேரியண்டானது 348hp மற்றும் 499Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இதன் ரேஞ்ச் 431 கிலோ மீட்டராக குறைகிறது. இதனிடையே, VF6 மாடலில் இருக்கும் பெரும்பாலான அம்சங்கள் VF7 காரிலும் அப்படியே தொடர்ந்தாலும், இந்த காரானது அளவில் பெரியதாகவும் ப்ரீமியம் ஃபினிஷிங்கை கொண்டதாகவும் வேறுபட்டு திகழ்கிறது. இதனால் VF7 கார் மாடலின் விலை 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI