இந்திய மின்சார வாகன (EV) சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனம், இந்த ஆண்டு மூன்று புதிய கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) தபன் குமார் கோஷ் தெரிவித்துள்ளார்.
புதிய கார்கள் அறிமுகம்
புதிய 7-சீட்டர் கார்: இந்த ஆண்டின் முதல் பாதியில் ஒரு புதிய 7-சீட்டர் மின்சார கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது 'லிமோ கிரீன்' (Limo Green) எம்பிவி (MPV) ரக காராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த எம்பிவி கார், வணிக பயன்பாட்டிற்கான (Fleet) பதிப்பு மற்றும் தனிநபர் பயன்பாட்டிற்கான (own use) பதிப்பு என இரண்டு மாடல்களில் வெளிவரவுள்ளது. 2025-ஆம் ஆண்டில் EV சந்தையில் மற்ற நிறுவனங்களை முந்தி வின்ஃபாஸ்ட் சாதனை படைத்தது. தற்போது 27 நகரங்களில் 35 ஷோரூம்களுடன் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது.
சந்தை விரிவாக்கம்:
மின்சார வாகனப் பிரிவில் 7-சீட்டர் கார்களுக்கு அதிக தேவை இருப்பதைச் சுட்டிக்காட்டிய திரு. கோஷ், இதுவரை பெட்ரோல்/டீசல் கார்களை மட்டுமே நாடிக்கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய எம்பிவி ஒரு சிறந்த மாற்றாக அமையும் என்றார்."வாடிக்கையாளர்களிடையே மின்சார வாகனங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. எனவே, முதல் 1 மற்றும் 2 (Tier 1 & 2) நகரங்களைத் தாண்டி, அடுக்கு 3 (Tier 3) நகரங்களிலும் எங்களது விற்பனை வலையமைப்பை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம்." என தபன் குமார் கோஷ், CEO.
எதிர்காலத் திட்டம்:
ஆண்டுக்கு 50,000 வாகனங்களைத் தயாரிக்கும் திறன் கொண்ட வின்ஃபாஸ்ட், தனது முழுமையான இக்கோசிஸ்டம் (Ecosystem) மற்றும் பெரிய தயாரிப்பு வரிசை மூலம் விற்பனை எண்ணிக்கையை மேலும் உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த ஓராண்டில் விற்பனைப் பட்டியலில் அசுர வளர்ச்சி கண்டுள்ள இந்நிறுவனம், தற்போது தனது நிலையை மேலும் வலுப்படுத்தத் தயாராகி வருகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI