இந்தியாவில் இரு சக்கர வாகனங்கள் இல்லாத வீடுகள் இல்லை என்ற சூழல் உருவெடுத்துள்ளது. அந்தளவிற்கு இரு சக்கர வாகனம் ஒரு அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது. குறிப்பாக, ஸ்கூட்டர்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Continues below advertisement

 Vespa Officina 8:

இந்தியாவில் பிரபலமான ஸ்கூட்டர் நிறுவனமாக திகழ்வது வெஸ்பா. இவர்களின் Vespa Officina 8 ஸ்கூட்டர் பற்றி கீழே விரிவாக காணலாம்.

இந்த ஸ்கூட்டரில் 124.45 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 115 கிலோ ஆகும். இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 58 ஆயிரத்து 747 ஆகும். இதன் இருக்கை உயரம் 770 மி.மீட்டர் ஆகும். இந்த ஸ்கூட்டர் நீல நிறத்தில் மட்டுமே உள்ளது. 10.1 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. அதிகபட்சமாக 86 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 1 சிலிண்டர், ஏர் கூல்ட், 3 வால்வு எஞ்ஜின் ஆகும்.

Continues below advertisement

மைலேஜ்:

இந்த Vespa Officina 8 ஸ்கூட்டர் 37.5 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதில் 7.4 லிட்டர் பெட்ரோல் டேங்கர் உள்ளது. ஒரு முறை பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 277.5 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. பிஎஸ் 6 பாஸ் 2பி எமிஷன் ஸ்டாண்டர்ட் ஆகும். சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. 

முன்பக்கம் டிஸ்க் ப்ரேக், பின்பக்கம் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 11 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 10 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஹைட்ராலிக் சிங்கிள் சைட் ஆர்ம் ஃப்ரண்ட் சஸ்பென்சன் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் சஸ்பென்சன் பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. 

5 வருட வாரண்டி:

ரிசர்வ்ட் லிட்டர் 1.85 லிட்டர் ஆகும். 60 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 5 வருடம் வாகன வாரண்டி அளிக்கப்படுகிறது. 4 இலவச சர்வீஸ் அளிக்கப்படுகிறது. செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர் அனலோக் வசதி உள்ளது. ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டல் வசதி உள்ளது. 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டல் வசதி உள்ளது.

லோ ப்யூல் இண்டிகேட்டர், ஸ்டாண்ட் அலார்ம் உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகலிலும் எரியும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது, ஹாலோஜன் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. சிக்னல் விளக்குகள் ஹாலோஜனாகவும் பொருத்தப்பட்டுள்ளது. வெஸ்பா ஸ்கூட்டர் அதன் தரத்திற்காகவே மிகவும் பிரசித்தி பெற்றது. இதன் காரணமாகவே மற்ற ஸ்கூட்டர்களை காட்டிலும் இதன் விலை சற்று அதிகமாக உள்ளது. பெண்கள் ஓட்டுவதற்கு மிகவும் வசீகரமாகவும், இலகுவாகவும் உள்ள ஸ்கூட்டர் இந்த வெஸ்பா என்பதும் குறிப்பிடத்தக்கது.


Car loan Information:

Calculate Car Loan EMI