டாடாசியரா EV காரின் மாதத்தவணைஎவ்வளவு? முழுமையானபைனான்ஸ்மற்றும்போட்டியாளர்கள்விவரம் இதோ!
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் முன்னணி வகிக்கும் டாடா மோட்டார்ஸ், 90-களில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற தனது ஐகானிக் மாடலான சியரா (Sierra) காரை, அதிநவீன எலெக்ட்ரிக் அவதாரத்தில் மீண்டும் களமிறக்கி உள்ளது.
15ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள இந்த காரை வாங்குவதற்கான பைனான்ஸ் திட்டம் மற்றும் மாதத் தவணை விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பைனான்ஸ்மற்றும் EMI கணக்கீடு
டாடா சியாரா மின்சார எடிஷன் 18 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் என்ற தொடக்க விலையில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டாடா சியரா எலக்ட்ரிக் காரின் ஹை வேரியண்ட்டின் விலை தோராயமாக ரூ.25.99 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) என கணிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஆரம்ப வேரியண்ட் காரை வாங்க ரூ. 3.79 லட்சம் முன்பணமாக (Down Payment) செலுத்துகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். மீதமுள்ள ரூ.15 லட்சத்திற்கு நீங்கள் வங்கியில் வாகனக் கடன் பெற வேண்டும்.
வட்டி விவரம்
தற்போதைய நிலவரப்படி, வங்கிகள் வாகனக் கடன்களுக்கு தோராயமாக 8% வட்டி விகிதத்தை வசூலிக்கின்றன. 8 சதவீத வட்டி அடிப்படையில், 3 ஆண்டுகளுக்கு (36 மாதங்கள்) கடன் பெற்றால், நீங்கள் மாதந்தோறும் சுமார் ரூ. 47 ஆயிரம் மாதத் தவணையாக (EMI) செலுத்த வேண்டியிருக்கும்.
4 ஆண்டுகளுக்கு (48 மாதங்கள்) கடன் பெற்றால், நீங்கள் மாதந்தோறும் சுமார் ரூ. 36,619 மாதத் தவணையாக செலுத்த வேண்டியிருக்கும். இதுவே 5 ஆண்டுகளுக்கு (60 மாதங்கள்) கடன் பெற்றால், நீங்கள் மாதந்தோறும் சுமார் ரூ. 23,379 மாதத் தவணையாக செலுத்த வேண்டியிருக்கும்.
மாதங்கள் அதிகரிக்க அதிகரிக்க, இஎம்ஐ வட்டி விகிதம் குறையும். ஆனால் வட்டி விகிதம் அதிகரிக்கும் என்பதை மறக்க வேண்டாம்.
10 சதவீத வட்டி எனில் எப்படி?
அதே நேரத்தில் வட்டி விகிதம் 10 சதவீதம் எனில், மாதத் தவணை அதிகரிக்கும். உதாரணத்துக்கு 5 ஆண்டு கடன் பெற்றால், 31,871 ரூபாய் செலுத்த வேண்டும். இதுவே கடனை 7 ஆண்டுகளில் (84 மாதங்கள்) திருப்பிச் செலுத்தும் திட்டத்தை தேர்வு செய்தால், உங்களின் மாதாந்திர தவணை சுமார் 24,902 ரூபாய் ஆகக் குறையும்.
அதே நேரத்தில் வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோர், வங்கியின் விதிமுறைகள் மற்றும் மாநிலத்தின் ஆன்-ரோடு விலைக்கு ஏற்ப இந்தத் தொகையில் சிறு மாறுதல்கள் ஏற்படலாம்.
பேட்டரிமற்றும்சிறப்பம்சங்கள்
பழைய சியராவின் அடையாளமான வளைந்த பின்பக்க கண்ணாடிகள் இதிலும் நவீன முறையில் 5-கதவு அமைப்போடு கொடுக்கப்பட்டுள்ளன. உட்புறத்தில் பெரிய டச் ஸ்கிரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் லெவல் 2 ADAS பாதுகாப்பு வசதிகள் இடம்பெறும்.
இதில் 60 kWh முதல் 80 kWh வரையிலான பேட்டரி பேக் வழங்கப்படலாம் என்றும், ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 500 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டியாளர்கள்
இந்தியச் சந்தையில் டாடா சியரா EV அறிமுகமானதும், அது வரவிருக்கும் மஹிந்திரா XUV.e8, மாருதி சுஸுகி eVX, ஹூண்டாய் க்ரெட்டா EV மற்றும் தற்போது விற்பனையில் உள்ள எம்ஜி ZS EV (MG ZS EV), BYD Atto 3 ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு நேரடி மற்றும் கடுமையான போட்டியாக அமையும்.
Car loan Information:
Calculate Car Loan EMI