New diesel SUVs: இந்திய சந்தையில் டீசல் வேரியண்டில் அடுத்தடுத்து 5 புதிய எஸ்யுவி கார்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.


டீசல் எஸ்யுவி கார்கள்:


இந்தியாவில் சில பிரிவுகளில் டீசல் கார்கள் மற்றும் SUV-களின் விற்பனை சற்றே தொய்வடைந்து இருக்கலாம்.  ஆனால் சில கார் தயாரிப்பு நிறுவனங்கள் டீசல் எடிஷனை தொடர்ந்து வழங்க உள்ளன. உண்மையில், பல உற்பத்தியாளர்கள் தங்களது டீசல் எடிஷன் வாகனங்களை நிறுத்திவிட்ட போதிலும், ஹுண்டாய் நிறுவனத்தின் நடுத்தர SUVயின் மொத்த விற்பனையில் கிரேட்டா டீசல் எடிஷன் தான் இன்னும் 45 சதவிகிதத்தை தக்க வைத்துள்ளது. கியா நிறுவனத்தின் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு செய்தவர்களில், 42 சதவிகிதம் பேர் டீசல் மாடலைத் தான் தேர்வு செய்தனர். ஹூண்டாய், மஹிந்திரா, டாடா மற்றும் எம்ஜி மோட்டார் இந்தியா ஆகியவை இன்னும் டீசல் விருப்பங்களை வழங்குகின்றன. இந்நிலையில், அந்த நிறுவனங்கள் சார்பில் மேலும் சில டீசல் கார் எடிஷன்கள் விரைவில் இந்திய சந்தைக்கு கொண்டுவரப்பட உள்ளன.


Mahindra XUV300 facelift:


எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 10 லட்சம்-15 லட்சம்
வெளியீடு: 2024 தொடக்கத்தில் வெளியாகலாம்
இன்ஜின்: 1.5-லிட்டர் டீசல்


மஹிந்திராவின் மோனோகோக் காம்பாக்ட் எஸ்யூவி ஃபேஸ்லிப்ட் செய்யப்பட்டுள்ளது. இது புதிய மஹிந்திரா SUV களுக்கு ஏற்ப பல காஸ்மெடிக் மாற்றங்களைக் கொண்டு வருகிறது. இதன் கேபின் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட XUV400 மின்சார வாகனத்தை போலவே இருக்கும். XUV300 ஃபேஸ்லிஃப்ட் இயந்திர ரீதியில் மாறாமல் இருக்கும் என்றாலும், அம்சங்கள் பட்டியல் கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.  இரட்டை 10.25-இன்ச் திரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.  அதே 117hp, 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் விருப்பங்களுடன் கிடைக்கிறது. 


Tata Curvv:


எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 14 லட்சம்- ரூ.20 லட்சம்
வெளியீடு: 2024 இன் நடுப்பகுதியில்
இன்ஜின்: 1.5-லிட்டர் டீசல்


டாடாவின் நடுத்தர SUV-கூபே நான்கு பவர்டிரெய்ன் விருப்பங்களுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார எடிஷன் முதலில் வரும், அதைத் தொடர்ந்து டீசல், பெட்ரோல் மற்றும் CNG விருப்பங்கள் வெளியாகும். இதில் இடம்பெறும் டீசல் இன்ஜின் ஆனது 115hp மற்றும் 260Nm டார்க்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் நிலையானதாக இருக்கும், AMT விருப்பமும் வழங்கப்படலாம். இந்த வாகனம் மிட்-சைஸ் எஸ்யுவிக்களான கிரெட்டா,  செல்டோஸ்,  குஷாக் , டைகுன், ஆஸ்டர் , எலிவேட் , கிராண்ட் விட்டாரா மற்றும் ஹைரைடர் ஆகியவற்றிற்கு கடும் போட்டியாக உள்ளது.


Mahindra Thar 5 door:


எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 16 லட்சம்-20 லட்சம்
வெளியீடு: 2024 இன் நடுப்பகுதியில்
இன்ஜின்: 2.2 லிட்டர் டீசல்


5 கதவுகளை  புதிய தார் கார் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.  அதன்படி, இதிலும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் தொடரும்.  இந்த இன்ஜின் 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினைப் போலவே 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் வரும். தார் ஆர்மடா என்று அழைக்கப்படும் பெரிய தார், ஒட்டுமொத்த ஸ்லாப் பக்க தோற்றத்தைத் தக்கவைத்து, பல தனித்துவமான வடிவமைப்பு கூறுகளைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 


Hyundai Alcazar facelift:


எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 17 லட்சம்-22 லட்சம்
வெளியீடு: 2024 இன் நடுப்பகுதியில்
இன்ஜின்: 1.5-லிட்டர் டீசல்


ஹூண்டாயின் ஏழு இருக்கைகள் கொண்ட க்ரெட்டாவின் வழித்தோன்றலான அல்கசார் விரைவில் ஃபேஸ்லிப்டை பெறுகிறது. ஸ்டைலிங் புதுப்பிப்புகள் புதுப்பிக்கப்பட்ட கிரேட்டாவின் வரிசையில் இருக்கும், இருப்பினும் சில பிட்கள் வித்தியாசத்தை வழங்க தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். அல்கசார் ஃபேஸ்லிஃப்ட்டின் உட்புறமும் கிரேட்டாவைப் போலவே இருக்கும். அதே சமயம் அதிக அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும். 116hp, 1.5 லிட்டர் டர்போ-டீசல் இன்ஜின் அதன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


MG Gloster facelift:


எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 40 லட்சம்-44 லட்சம்
வெளியீடு: 2024 இன் இறுதியில்
இன்ஜின்: 2.0-லிட்டர் டீசல்


Gloster மாடல் கார் கடந்தா 4 ஆண்டுகளாக விற்பனையில் உள்ளது. இதனால் இந்த ஆண்டு முடிவிற்குள் க்ளோஸ்டரின் ஃபேஸ்லிப்ட் வெளியாக உள்ளது . புதிய கிரில் மற்றும் லைட் யூனிட்கள் முதல் புதிய தோற்றம் கொண்ட பம்ப்பர்கள் மற்றும் பீஃபியர் கிளாடிங் வரை சில வெளிப்புற மாற்றங்களும் உள்ளன.  தற்போது உள்ளதை விட புதுப்பிக்கப்பட்ட மாடலில் கூடுதல் அம்சங்கள் இருக்கும். 2.0-லிட்டர் டர்போ-டீசல் இன்ஜின் மாறாமல் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இது 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் உடன் இணைக்கப்பட்டு 2WD வடிவத்தில் 161hp உற்பத்தி செய்கிறது. 


Car loan Information:

Calculate Car Loan EMI