டிசம்பர் 2025 இந்தியாவின் SUV சந்தையில் மிகப்பெரிய விற்பனைகள் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ் மற்றும் கியா ஆகிய நான்கு கார் நிறுவனங்கள் டிசம்பரில் SUV மாடல் கார்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன. மாருதியின் முதல் பிரதான மின்சார SUV முதல் டாடாவின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட Petrol ஹாரியர் மற்றும் சஃபாரி மற்றும் கியாவின் இரண்டாம் தலைமுறை செல்டோஸ் வரை அறிமுகமாக உள்ளது.
Maruti Suzuki e Vitara
இந்தியாவில் EV SUV மாடலில் மாருதி சுஸுகியின் e Vitara டிசம்பர் 2025 இல் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது HEARTECT-e EV கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன் (49 kWh மற்றும் 61 kWh) மற்றும் லெவல்-2 ADAS, பெரிய டிஜிட்டல் திரைகள், நான்கு-ஏர்பேக் மற்றும் அதிக பாதுகாப்பு, தொழில்நுட்ப உபகரணங்கள் அம்சங்களுடன் வருகிறது. இதன் விலை ரூ. 17 முதல் 22.5 லட்சம் வரையில் கிடைக்கும்.
Tata Safari (Petrol Version)
டாடா சஃபாரி இந்தியாவில் suvஇல் மிகப்பிரபலமான கார் ஆகும். ஆனால் இதுவரை அது டீசல் என்ஜின்களையே பெரிதும் நம்பியுள்ளது. டாடா மோட்டார்ஸ் டிசம்பர் 9, 2025 அன்று சஃபாரி பெட்ரோல் மாடல் அறிமுகப்படுத்தும்போது அது மாறுகிறது.
ஒரு புதிய 1.5-லிட்டர் டைரக்ட் இன்ஜெக்சன் டர்போ-பெட்ரோல் எஞ்சினில் வரும் எதிர்பார்க்கப்படுகிறது. பலர் டீசல் வேண்டாம் அல்லது பெட்ரோலுக்கு மாறி வருவதை கருத்தில் கொண்டு டாடா இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
Tata Harrier (Petrol Version)
வரும் டிசம்பர் 9 ஆம் தேதி சஃபாரியுடன், ஹாரியரும் அதே தேதியில் பெட்ரோல் மாடலுடன் வருகிறது. Mid suv இடத்தில் ஏற்கனவே வலுவான பிராண்டிங்கைக் கொண்ட ஹாரியருக்கு, பெட்ரோல் மாடல் வாங்குபவர்களின் பார்வையை இந்த பக்கம் திருப்பியுள்ளது.
ஹாரியர் பெட்ரோல் மாடல் சுத்திகரிப்பு, மென்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று கார் விரும்பிகள் தெரிவிக்கின்றனர். இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Kia Seltos (Second - generation)
Second - generation செல்டோஸ், டிசம்பர் 10, 2025 அன்று உலகளவில் அறிமுகமாக உள்ளது. இந்தியாவில் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்டோஸ், இந்தியாவில் கியாவின் வலுவான செயல்திறன் கொண்ட கார்களில் ஒன்றாகும். மேலும் Second - generation புதிய தளம், முக்கிய வடிவமைப்பு மாற்றங்கள் (புதிய தொழில்நுட்பம் உட்பட) மற்றும் ஹைபிரிட் பவர்டிரெய்ன் விருப்பங்களை உறுதியளிக்கிறது. இது, செல்டோஸ் மாடலில் அதிகளாவில் விற்பனையை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI