இந்தியாவில் கார் விற்பனை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பட்ஜெட் விலையில் கார் வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

Continues below advertisement

இதன்படி, ரூபாய் 10 லட்சம் பட்ஜெட்டிற்கு கீழே உள்ள தரமான கார்களை கீழே காணலாம்.

1. Maruti Alto K10:

மாருதி சுசுகியின் ஹேட்ச்பேக் படைப்பு இந்த Maruti Alto K10 ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய். 4.42 லட்சம் ஆகும். டாப் வேரியண்ட் ரூபாய் 6.51 லட்சம் ஆகும். இந்த கார் நெருக்கடியான சாலைகளில், நகர்ப்புறங்களில் ஓட்டுவதற்கு சிறந்த கார் ஆகும். இரண்டு ஏர்பேக், ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் வசதியுடன் இந்த கார் உள்ளது. 24.39 கி.மீட்டர் வரை மைலேஜ்  தரும்.

Continues below advertisement

2.Renault Kwid:

ஹேட்ச்பேக் ரக காராக இருந்தாலும் அருமையான தோற்றம் கொண்டது. இதன் தொடக்க விலை ரூபாய் 5.12 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 7.28 லட்சம் ஆகும். 999 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் கொண்டது. பெட்ரோலில் ஓடும் கார். 22 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. இரண்டு ஏர்பேக் வசதி உள்ளது.

3. Tata Tiago:

டாடா நிறுவனத்தின் படைப்புகளின் விலை குறைந்த கார் இந்த Tata Tiago ஆகும். இதன் தொடக்க விலை ரூபாய் 5.49 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 9.34 லட்சம் ஆகும். 1199 சிசி திறன் கொண்டது. 19.01 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும். பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் ஓடும் திறன் கொண்டது. இரண்டு ஏர்பேக் வசதி கொண்டது.

4.Maruti Wagon R:

மாருதி சுசுகி நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பு இந்த Maruti Wagon R ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 5.91 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 8.32 லட்சம் ஆகும். 998 சிசி திறன் கொண்டது. 24.35 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் இயங்கும் ஆற்றல் கொண்டது. 

5. Hyundai Grand i10 Nios:

பட்ஜெட் விலையில் கார் வாங்கும் பலரின் முதன்மைத் தேர்வாக இருப்பது இந்த Hyundai Grand i10 Nios ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6.60 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 9.45 லட்சம் ஆகும். 1197 சிசி திறன் கொண்டது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் இயங்கும் ஆற்றல் கொண்டது.

6. Tata Tigor:

டாடா நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பு இந்த Tata Tigor ஆகும். இதன் தொடக்க விலை ரூபாய் 6.62 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 10.43 லட்சம் ஆகும். 1199 சிசி திறன் கொண்டது. 19.2 கி.மீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் கொண்டது.

7. Renault Triber:

ரெனால்ட் நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பு இந்த Renault Triber ஆகும். இதன் தொடக்க விலை ரூபாய் 6.88 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 10.18 லட்சம் ஆகும். 999 சிசி திறன் கொண்டது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் இயங்கும் ஆற்றல் கொண்டது.

8. Maruti Swift:

மாருதி நிறுவனத்தின் பிரபலமான கார் இந்த Maruti Swift ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6.96 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 10.51 லட்சம் ஆகும். 1197 சிசி திறன் கொண்டது.  25.75 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் ஓடும் ஆற்றல் கொண்டது.

9. Tata Punch:

டாடா நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் Tata Punch ஆகும். இன்று அதிகளவில் விற்பனையாகும் கார்களில் முக்கியமானது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6.63 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 11.09 லட்சம் ஆகும். 1199 சிசி திறன் கொண்டது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் ஓடும் ஆற்றல் கொண்டது.

10.Maruti Dzire:

மாருதி நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பு இந்த Maruti Dzire ஆகும். சுவிஃப்ட் காரின் அப்டேட் வெர்சன் இந்த Maruti Dzire ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 7.51 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 11.11 லட்சம் ஆகும். 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது.  24.79 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது.

 


Car loan Information:

Calculate Car Loan EMI