அல்ட்ரா வைலட் நிறுவனத்தின் லிமிடெட் எடிஷன் மோட்டார் சைக்கிளான F77 ஸ்பேஷ் எடிஷன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


லிமிடெட் எடிஷன்:


பல்வேறு விதமான மாடல்கள், வசதிகள் மற்றும் அம்சங்களில் வேறுபட்டு புதுப்புது கார்கள் மற்றும் மோட்டர் சைக்கிள்கள் ஆட்டோமொபைல் சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் எண்ட்ரி லெவல் தொடங்கி, ஹை எண்ட் வரை என பல்வேறு வேரியண்ட்கள் உள்ளன. இவற்றில் இருந்து வேறுபட்டு உள்ள ஒரு பிரிவு தான் லிமிடெட் எடிஷன். இதில் அதிகப்படியான விலை மதிப்பில் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வாகனங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அந்த வகையில் தான், அல்ட்ரா வைலட் நிறுவனத்தின் லிமிடெட் எடிஷன் மோட்டார் சைக்கிளான F77 ஸ்பேஷ் எடிஷன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு மின்சார வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது.


அல்ட்ராவைலட் நிறுவனம்:


ஸ்டார்ட் அப் மின்சார வாகான உற்பத்தி நிறுவனமான அல்ட்ரா வைலட் இந்தியாவின் சந்திரயானை பெருமைப்படுத்தும் விதமாக, ஸ்பேஸ் எடிஷன் மாடல் மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளது. இது, ஏரோஸ்பேஸ் தர பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் வெறும் 10 வண்டிகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ள நிலையில், அவற்றிற்கான முன்பதிவு இன்று மாலை 6 மணிக்கு அல்ட்ரா வைலட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொடங்க உள்ளது.


ரேஞ்ச் என்ன?


இந்த மோட்டார்சைக்கிள் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 307 கிமீ தூரம் செல்லும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள உயர் செயல்திறன் கொண்ட மோட்டார் 39.94 Bhp  பீக் பவர் மற்றும் 100 Nm எனும் அதிகபட்ச டார்க் வெளியீட்டை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.  இந்த வாகனம் வெறும் 2.9 வினாடிகளில் மணிக்கு 0-60 கிலோ மீட்டர் எனும் வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 152 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த வாகனத்தை செலுத்த முடியும்.


சிறப்பம்சங்கள்:


புதிய F77 ஸ்பேஷ் எடிஷனில் 7075-கிரேடு அலுமினியம், விசேஷமான யு.வி. ரெசிஸ்டன்ட் பெயின்ட், அதிநவீன விமான மின் தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகனம் நீண்ட வாழ்நாள் பெறும் என கூறப்படுகிறது. வாகனத்திற்கு அலுமினியம் சாவி வழங்கப்படுகிறது. அல்ட்ராவைலட் F77 ஸ்பேஸ் எடிஷன் மாடலின் பேட்டரியில் ஃபெயில்-ப்ரூஃப் சிஸ்டம்கள், 9 ஆக்சிஸ் ஐ.எம்.யு. வழங்கப்படுகிறது. 


சந்திரயான் டச்:


நிலவின் தென் துருவத்தை ஆராயும் வகையில் இந்தியாவால் விண்ணில் செலுத்தப்பட்ட, சந்திரயான் 3 விண்கலத்தை பெருமைப்படுத்தும் விதமாக தான் அல்ட்ராவயலட் நிறுவனம் இந்த புதிய லிமிடெட் எடிஷன் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. அதோடு, ஏரோஸ்பேஸ் தரத்தில் அரிப்பை தவிர்க்க கூடிய பொருட்களையும், யுவி கதிர்களின் பாதிப்பை தவிர்க்கும் வகையிலான பெயிண்டும் இந்த வாகனத்திற்கு தீட்டப்பட்டுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI