தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மாநகரம் இன்று தனது 384வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த சென்னையின் பெருமை என்ன என்பதை சற்றே அலசலாம்.



ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு அடையாளம்.. ஆனா, நம்ம மொத்த தங்க தமிழ்நாட்டுக்கும் அடையாளம்னா அது சென்னை மட்டும் தான். அப்படி என்ன இருக்கு சென்னைலா அப்டின்னு யாரு கேட்டாலும், என்ன இல்லன்னு காலர தூக்கிட்டு கேக்கலாம் ஸ்டைலா, கெத்தா..


எங்க பாரு பொல்யூசன், எப்ப பாரு டிராபிக்கு, என்னைக்கும் மாறாத கூவம் வாசம், எனக்கென்னவென கடந்து செல்லும் மக்கள், ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட அழிவுகள், மூக்கடைக்கும் கார்ப்ரேஷன் தண்ணி, எங்க ஊரு போல வருமான்னு ஆயிரம் கம்பேரிஷன் அப்டின்னு சென்னைய புடிக்காதவங்க டெம்பிளேட்டா பல காரணங்கள ஓயாம சொல்லிக்கிட்டே தான் இருக்காங்க.. ஆனா சென்னை இதுமட்டுமில்லிங்க. அதையும் தாண்டி நிறைய நிறைய இருக்கு..!


இங்க குருவிக்கூடு மாதிரி இருக்குற பேச்சுலர்ஸ் ரூம்ல இருந்து தான் பல வெற்றியாளர்கள் பொறந்து இருக்காங்க. இங்க யாரும் ஜாதி கேட்டு ஃப்ரெண்ட்ஸ் ஆகுறது இல்ல. ப்ரெண்ட்ஸ் ஓட இருக்குற யாரும் மாசக்கடைசில பசியில படுத்தது இல்ல. பட்ஜெட்ல படம் பாக்கணும்னா ஆல்பர்ட்டு, மகாராணி.  ஆளோட போயி என்ஜாய் பண்ணனும்னா ஈஏ, ஃபீனிக்ஸ் மாலு.. வீக் எண்ட் ஆன ஓ.எம்.ஆரு., ஷாப்பிங்னா தி.நகர் ஜோரு. பேசாத பாஷ இல்ல, ரிலீசாகாத படமும் இல்ல, மெரினா அண்ட் பெசண்ட் நகர் பீச்சு, பேச்சுலர்ஸ் டூ பேமிலிக்கு ஆல் டைம் ஃபேவரட். 


ஆட்டோகாரர்கிட்ட ஜகா வாங்குற கூகுள் மேப்பும், ஃபிளாட்பார்முல கிடைக்குற சூப்பும் என்னைக்கும் வேற லெவலு. உள்ளூரு மொதகொண்டு உலக நாடு ஸ்டைலு வரைக்கும் இங்கு கிடைக்காத பொருளே இல்ல. ஆச்யாவின் டெட்ராய்ட் அப்டிங்குற அளவுக்கு இங்க இல்லாத பொருளும் இல்ல. படிச்சியோ, இல்லயோ இங்க வாய்ப்புகள் யாருக்கும் மறுக்கப்பட்றது இல்ல.


கோயம்பேடு பஸ் ஸ்டேண்டு, மீனம்பாக்கம் ஏர்போர்ட்டு, எக்மோர் மியூசியம், எல்ஐசி பில்டிங்கு இதெல்லாம் சென்னையோட லேண்ட் மார்க்கா இருக்க.. தல தோனியோட எல்லோ ஆர்மி சென்னை ஓட பிரவுடாவே மாறி இருக்கு. இப்படி பல விஷயங்கள அடுக்கிக்கிட்டே போகலாம்..


ஆனா இதுக்கெல்லாம் ஒரு படி மேல போயி நம்மள ஆச்சரியப்படுத்துறதே சென்னை வாழ் குடிமக்கள் தாங்க. அடையாளம் தெரியாத நபருக்கு ஆபத்துல உதவுற மனுஷங்க, அட்டி போட்டு கானா பாட்டுலா அசத்துற பசங்க, பிரச்னைனா முன்னாடி வந்து நிக்குற ஜனங்க, அங்கேயும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பா இருக்குற பொண்ணுங்க.. 


டெக்னாலஜி பின்னாடி போயி டைம் வேஷ்ட் பண்றாங்கனு பல பேர் சொன்னப்ப, அந்த டெக்னாலஜிய வெச்சு நாட்டையே திரும்பி பாக்க வச்ச ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு அடித்தளம் போட்டது நம்ம சென்னை தான்.  என்ன தான் பல காரணத்தால நாம பிரிஞ்சி இருந்தாலும், மனுஷங்க கிட்ட என்னைக்கும் இருக்க வேண்டியது மனித நேயம்னு, திரும்ப திரும்ப நிரூபிச்சு காட்டுனதும் சென்னை மக்கள் தான். 


சுனாமி, பெருவெள்ளம்னு பல இயற்கை பேரிடர்கள் மட்டுமில்மாம,  போராட்டங்கள், அரசியல் எழுச்சின்னு மாநில வரலாற்று நிகழ்வுகளோட தொடக்க புள்ளியாவும் இருந்ததோடு, முதல் உலகப்போரையே பார்த்தும் கூட இன்னும் கம்பீரமா நின்னுட்டு இருக்கு இந்த மாநகரம்.. 


இதனால தான், சென்னை ஒரு உணர்வு.. சென்னை ஒரு காதல்.. சென்னை நம் வாழ்வின் ஒரு அங்கம்..அப்படிபட்ட சென்னை ஓட 384வது பிறந்தநாளில், அது என்றும் நிலைத்து செழித்து வரலாறு படைத்திட வாழ்த்துவோம்..