அல்ட்ராவைலட் F77 அறிமுகம்:


எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், பொதுமக்களிடையே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே பல பெரு நிறுவனங்கள் மட்டுமின்றி,  புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் புதுப்புது எலெக்ட்ரிக் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் பெங்களூரை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான அல்ட்ராவைலட், F77 எனும் புதிய மாடல் எலெக்ட்ரிக் பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அல்ட்ராவைலட் F77 மாடல் ஸ்டாண்டர்டு, ரெக்கான் மற்றும் ஷ்பெஷல் எடிஷன் என மூன்று விதங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




அல்ட்ராவைலட் எலெக்ட்ரிக் பைக் (courtesy: carandbike)


அல்ட்ராவைலட் F77 சிறப்பம்சங்கள்:


அல்ட்ராவைட்டின் மூன்று விதமான வாகனங்களும் ஒரே மாதிரியான வடிவமைப்பு, எல்இடி முகப்பு விளக்கு, ஸ்ப்லிட் சீட் செட்டப், அலாய் வீல்கள் ஆகியவற்றை கொண்டுள்ளன. அல்ட்ராவைலட் F77 ஸ்டாண்டர்டு மற்றும் ரெக்கான் பைக்குகள்,  சூப்பர்சோனிக் சில்வர், ஸ்டெல்த் கிரே மற்றும் பிளாஸ்மா ரெட் என மூன்று நிறங்களில் கிடைக்கும். ஸ்பெஷல் வேரியண்ட் மீடியோர் கிரே மற்றும் ஆஃப்டர்பர்னர் மஞ்சள் கலந்த நிறத்தில் கிடைக்கும்.


 


பேட்டரி சிறப்பம்சங்கள்:


இதன் ஸ்டாண்டர்டு வேரியண்டில் 27 கிலோவாட் மோட்டார் மற்றும் 7.1 கிலோவாட் ஹவர் பேட்டரி இடம்பெற்றுள்ளன. இதனை ஸ்டண்டர்ட் முறையில் சார்ஜ் செய்தால் மணிக்கு 35 கிலோமீட்டர் தூரமும், பூஸ்ட் முறையில் சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர் தூரமும் செல்ல முடியும். இந்த பேட்டரிக்கு 3 ஆண்டுகள் அல்லது 30,000 கி.மீ பயணம் எனும் வகையில் வாரண்டி வழங்கப்பட்டுள்ளது. ரெகான் மாடலில் 5 ஆண்டுகள் அல்லது 50,000 கி.மீ பயணம் எனும் வகையில் வரண்டி வழங்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் பைக் அதிகபட்சமாக மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.


அதிகபட்ச வேகம்:


 ரெக்கான் மற்றும் ஸ்பெஷல் வேரியண்ட்களில் முறையே 29 கிலோவாட் மற்றும் 30.2 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இரு மாடல்களிலும் 10.3 கிலோவாட் ஹவர் பேட்டரி இடம்பெற்றுள்ளது. அல்ட்ராவைலட் F77 ரெக்கான் வேரியண்ட் மணிக்கு அதிகபட்சம் 147 கிலோமீட்டர் வேகத்திலும், ஸ்பெஷல் வேரியண்ட் மணிக்கு அதிகபட்சம் 157 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இரு வேரியண்ட்களும் முழு சார்ஜ் செய்தால் 307 கிலோமீட்டர் வரை செல்லும் என கூறப்படுகிறது.




அல்ட்ராவைலட் எலெக்ட்ரிக் பைக் (courtesy: carandbike)


வடிவமைப்பு:


 மூன்று மாடல்களிலும் முன்புறத்தில் 320 மில்லிமீட்டர் டிஸ்க், பின்புறம் 230 மில்லிமீட்டர் டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அல்ட்ராவைலட் F77 மாடலில் 5 இன்ச் அளவில் TFT ஸ்கிரீன், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, அடாப்டிவ் டேஷ் லைட்னிங், ஆட்டோ ஹெட்லைட் ஆன்/ஆஃப், நேவிகேஷன், வெஹிகில் லொகேட்டர், ஃபால் மற்றும் கிராஷ் சென்சார் உள்ளது. முதற்கட்டமாக அல்ட்ராவைலட் F77 வினியோகம் பெங்களூருவில் துவங்குகிறது. இதைத் தொடர்ந்து மும்பை, கொச்சின், சென்னை, ஐதராபாத் என பல்வேறு நகரங்களில் படிப்படியாக விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் தொடர்ந்துள்ளது.


விலை விவரங்கள்:


அல்ட்ராவைலர் நிறுவனத்தின் F77 விலை ரூ. 3 லட்சத்து 80 ஆயிரத்தில் தொடங்கி, டாப் எண்ட் மாடல் விலை ரூ. 4 லட்சத்து 55 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக 77 வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ள ஸ்பெஷல் எடிஷன் வாகனத்தின் விலை, ரூ.5.5 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI