இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக, மின்சார வாகனங்களின் இரு சக்கரங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஓலா, ஏதர் வாகனங்களுக்குப் போட்டியாக  பல நிறுவனங்களும் உள்ளது. 

Continues below advertisement

இந்த சூழலில், இந்திய சந்தையில் அடுத்த மாதம் அறிமுகமாக உள்ளது Ultraviolette Tesseract. இந்த இ ஸ்கூட்டர் பற்றி கீழே விரிவாக காணலாம்.

இந்த Ultraviolette Tesseract மொத்தம் 3 வேரியண்ட்கள் கொண்டது. 

Continues below advertisement

1.  Ultraviolette Tesseract:

இந்த முதல் வேரியண்ட் 3.5 கிலோவாட் பேட்டரி கொண்டது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 51 ஆயிரத்து 578 ஆகும். ப்ளூடூத் மற்றும் இன்டர்நெட் வசதி உள்ளது. ஜிபிஎஸ் வசதி உள்ளது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 51 ஆயிரத்து 578 ஆகும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 162 கிலோமீட்டர் வரை செல்லலாம். அதிகபட்சமாக 125 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 

2. Ultraviolette Tesseract:

இந்த இரண்டாவது வேரியண்ட்டில் 5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 70 ஆயிரம் பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 220 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். அதிகபட்சமாக 125 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதில் ப்ளூடூத் வசதி உள்ளது. ஜிபிஎஸ் வசதியும் உள்ளது. 

3. Ultraviolette Tesseract:

இந்த 3வது வேரியண்டில் 6 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 2 லட்சம் ஆகும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 261 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 125 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதில் ப்ளூடூத் வசதி உள்ளது. ஜிபிஎஸ் வசதி உள்ளது. 

சிறப்புகள்:

இந்த Ultraviolette Tesseract இ ஸ்கூட்டரின் முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. இதில் வேகமாக சார்ஜ் ஏற்றும் வசதியும் உள்ளது. லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் வசதி உள்ளது. பேட்டரி வாரண்டி 8 வருடங்கள் ஆகும். மோட்டார் வாரண்டி 3 வருடங்கள் ஆகும். 

7 இன்ச் டிஎஃப்டி டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வித் ப்ரைட்னஸ் கன்ட்ரோல் வசதியுடன் உள்ளது. 2 ட்ரீப்மீட்டர்ஸ், டிஜிட்டல் வசதி கொண்டது. ஸ்டாண்ட் அலார்ம், லோபேட்டரி இண்டிகேட்டர் வசதி கொண்டது. ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி கொண்டது. கால், எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ரிவர்ஸ் வசதி உள்ளது.

பேட்டரி ஸ்டேட்டஸ், லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ் வசதி உள்ளது. லொகேஷன் ட்ராக்கிங் வசதி உள்ளது. டூயல் எல்இடி ப்ராஜெக்டர் முகப்பு விளக்குகள் உள்ளது. இட வசதி 34 லிட்டர் ஆகும். 


Car loan Information:

Calculate Car Loan EMI