இந்தியாவின் வெற்றிகரமான இரு சக்கர வாகன நிறுவனம் டிவிஎஸ். பைக் மற்றும் ஸ்கூட்டர் ஆகிய வாகனங்களின் உற்பத்தியில் முன்னணியில் வகிக்கும் டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பு TVS Ronin. இந்த வாகனத்தின் மைலேஜ், தரம், விலை குறித்து கீழே காணலாம்.

இதில் மொத்தம் 6 வேரியண்ட்கள் உள்ளது. எந்த வேரியண்ட் என்னென்ன விலை ( ஆன் ரோட்), அதன் சிறப்பம்சங்கள்  என்பதை கீழே விரிவாக காணலாம்.

  வேரியண்ட்விலைப்ரேக், சக்கரம்ப்ரேக்கிங் சிஸ்டம்எடை

ப்ளூடூத் வசதி

ஜிபிஎஸ் வசதி
Ronin Base - Lightning Blackரூ.1,59,377டிஸ்க் ப்ரேக்ஸ், அலாய் சக்கரங்கள்சிங்கிள் சேனல் ஏபிஎஸ்159 கிலோஇல்லைஇல்லை
Ronin Base - Magma Redரூ.1,58,999டிஸ்க் ப்ரேக்ஸ், அலாய் சக்கரங்கள்சிங்கிள் சேனல் ஏபிஎஸ்159 கிலோஇல்லைஇல்லை
Ronin Agondaரூ.1,59,377டிஸ்க் ப்ரேக்ஸ், அலாய் சக்கரங்கள்சிங்கிள் சேனல் ஏபிஎஸ்159 கிலோஇல்லைஇல்லை
Ronin Mid - Glacier Silverரூ.1,81,858டிஸ்க் ப்ரேக்ஸ், அலாய் சக்கரங்கள்சுவிட்சபிள் ஏபிஎஸ்159 கிலோஇல்லைஇல்லை
Ronin Mid - Charcoal Emberரூ.1,83,340டிஸ்க் ப்ரேக்ஸ், அலாய் சக்கரங்கள்சுவிட்சபிள் ஏபிஎஸ்159 கிலோஇல்லைஇல்லை
Ronin Topரூ.1,95,653டிஸ்க் ப்ரேக்ஸ், அலாய் சக்கரங்கள்சுவிட்சபிள் ஏபிஎஸ்160 கிலோஉண்டு உண்டு 

எஞ்ஜின்:

இந்த பைக்கில் 225.9 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் சிவப்பு, வெள்ளை, சிவப்பு வெள்ளை கருப்பு கலந்த கலவை, சிவப்பு மஞ்சள் சாம்பல் கலந்த கலவை என பல வண்ணங்களில் உள்ளது.

மைலேஜ்:

இந்த பைக்கில் மொத்தம் 5 கியர்கள் உள்ளது. இந்த பைக்கின் பெட்ரோல் டேங்கர் திறன் 14 லிட்டர் ஆகும். இந்த பைக்கின் இருக்கை உயரம் 759 மி.மீட்டர் ஆகும். இந்த டிவிஎஸ் ரோனின் 42 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது.  20.1 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 19.93 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.

டேங்கரை நிரப்பினால் 560 கிலோமீட்டர் வரை செல்லலாம். 5 வருடங்கள் வரை வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 60 ஆயிரம் வரை கிலோமீட்டர் வரை வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 

எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் தோற்றம், ஓட்டுவதற்கு இலகு, சர்வீஸ் அனுபவம், செயல்பாடுகள், தொழில்நுட்ப  வசதிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த டிவிஎஸ் ரோனினுக்கு பயனாளர்கள் 4.6 ஸ்டார் வரை அளித்துள்ளனர்.


Car loan Information:

Calculate Car Loan EMI