இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் டிவிஎஸ். இவர்களது படைப்பிற்கு என்று இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. மின்சார ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், டிவிஎஸ் நிறுவனமும் தனது மின்சார ஸ்கூட்டர்களை தயாரித்து வருகிறது.

Continues below advertisement

நேற்று முன்தினம் TVS Orbiter V1 மின்சார ஸ்கூட்டரை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், TVS Orbiter V1 இ ஸ்கூட்டருக்கும், TVS Orbiter V2 இ ஸ்கூட்டருக்கும் உள்ள ஒற்றுமைகள், வேற்றுமைகளை கீழே காணலாம்.

               TVS Orbiter V1               TVS Orbiter V2
பேட்டரி1. 8 கிலோவாட்3.1 கிலோவாட்
மைலேஜ் 86 கிலோமீட்டர்158 கிலோமீட்டர்
சார்ஜிங் நேரம்4 மணி நேரம் 10 நிமிடங்கள்2 மணி நேரம் 20 நிமிடங்கள்
விலைரூபாய் 92 ஆயிரம் முதல் ரூபாய் 98 ஆயிரம் வரைரூ.94 ஆயிரம் முதல் ரூபாய் 1.22 லட்சம் வரை
ஆட்டோமெட்டிக் முகப்பு விளக்குகள்          உண்டுஉண்டு
விளக்குகள்          LED    LED
கால்/எஸ்எம்ஸ் அழைப்புகள்உண்டுஉண்டு
பேட்டரி குறைவு எச்சரிக்கை அலர்ட்உண்டுஉண்டு
ரைடிங் மோட் 22
டிக்கி வசதி34 லிட்டர்34 லிட்டர்
கன்சோல் டைப்டிஜிட்டல்டிஜிட்டல்
ஜிபிஎஸ் வசதிஉண்டுஉண்டு
ஸ்டார்ட் வகைஎலக்ட்ரிக் ஸ்டார்ட்எலக்ட்ரிக் ஸ்டார்ட்
சார்ஜர் வசதிஉண்டுஉண்டு
ப்ரேக்கிங் வசதிSBSSBS
காலிபர் டைப்FixedFixed
முன்சக்கர அளவுR14R14
பின்சக்கர அளவு R12R12
முன்பக்க சஸ்பென்சன்டெலிஸ்கோபிக்டெலிஸ்கோபிக்
பின்பக்க சஸ்பென்சன்டூயல் ஷாக்டூயல் ஷாக்
சக்கரங்கள்அலாய்அலாய்
ப்ரேக் வகைட்ரம்ட்ரம்
மோட்டார் பவர்2500 வாட்ஸ்1800 வாட்ஸ்
டாப் ஸ்பீட்68 கிலோமீட்டர்68 கிலோமீட்டர்
ஆக்சிலேரேஷன்6.8 நொடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும்6.3 நொடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும்
கிரவுண்ட் கிளியரன்ஸ்165 மில்லி மீட்டர்165 மில்லி மீட்டர்
எடை110 கிலோ112 கிலோ
வாரண்டி3 வருடங்கள்/ 50 ஆயிரம் கிலோமீட்டர்3 வருடங்கள்/ 50 ஆயிரம் கிலோமீட்டர்

இதில் டிவிஎஸ் ஆர்பிட்டர் வி1 இ ஸ்கூட்டரின் பேட்டரியை சந்தா முறையில் சார்ஜ் செய்து கொள்ளும் வசதியையும் டிவிஎஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இந்த இ ஸ்கூட்டரை வாங்கினால் இதன் விலை ரூபாய் 49 ஆயிரத்திற்கு 999 மட்டுமே ஆகும். மாதந்தோறும் தவணை முறையில் சார்ஜிங் கட்டணத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

Continues below advertisement


Car loan Information:

Calculate Car Loan EMI