" ரோமிங் சிம் " வாட்ஸ் அப் பயன்படுத்த முடியாத சூழல்

இந்த செயலிகளின் இணைய பதிப்புகளில், 'லாக் இன்' செய்யப்பட்டிருந்தால் அவை ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை தானாக லாக் அவுட் ஆகி விடும். அதன் பின், பயன்படுத்த மீண்டும் மொபைல் போனில் உள்ள வாட்ஸாப் செயலியில் இருந்து "க்யூ ஆர் " குறியீட்டை ஸ்கேன் செய்து உறுதிப்படுத்த வேண்டும்.

Continues below advertisement

இந்த விதிகள், மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த, 'சிம் பைண்டிங்' விதியால் வெளிநாடு செல்லும் இந்திய பயணியருக்கு சிக்கல் எழுந்துள்ளது. அங்கு, 'ரோமிங் சிம்' பயன்படுத்தும் போது வாட்ஸாப்பை அணுக முடியாத சூழல் ஏற்படுகிறது.

அதே போல் ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை வாட்ஸாப் உள்ளிட்டவற்றின் இணைய பதிப்பு தானாக 'லாக் அவுட்' ஆவதால், பணி ரீதியாக இதை பயன்படுத்துவோர் வேலை சூழலை பாதிப்பதாக தெரிவித்து உள்ளனர்.

Continues below advertisement

இது குறித்து தொழில்நுட்ப நிபுணர்கள் கூறுகையில் ; 

இந்திய இணைய மற்றும் மொபைல் போன் சங்கம், பிராட்பேண்டு இந்தியா அமைப்பு ஆகியவற்றிடம் கலந்தாலோசிக்காமல் இந்த விதியை அமல்படுத்தி உள்ளனர். இதனால், சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நிறுவனங்கள் அரசுக்கு அறிக்கை அளிக்கும். அதன் பின் மாற்றம் கொண்டு வர வாய்ப்பு உள்ளது என்கின்றனர்.

சிறுவர்களுக்கு தனி வாட்ஸ் அப்

'மெட்டா'வின், 'வாட்ஸாப்' நிறுவனம், 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் கண்காணிப்பு வசதியுடன் கூடிய 'வாட்ஸாப்' கணக்குகளை அறிமுகப்படுத்தி உள்ளது. நம் நாட்டில், 'வாட்ஸாப்' பயன்பாட்டுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 13 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

சில நாடுகளில் இது அதற்கும் மேல் இருந்தது. இந்நிலையில், பெற்றோர் மற்றும் நிபுணர்களின் ஆலோசனையை பெற்று, அதன் அடிப்படையில், பெற்றோரால் நிர்வகிக்கப்படும் குழந்தைகளுக்கான வாட்ஸாப் சேவையை அறிமுகப்படுத்துவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது