TVS மோட்டார், இந்தியாவில் மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்துவிட்ட நிலையில், எல்லா நிறுவனங்களும் எலெக்ட்ரிக் கார், பைக்குகளை வெளியிட்டு வருவதில் மும்முரம் காட்டும் நிலையில், இந்தியாவின் முன்னணி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துடன் இனைந்து இந்தியாவில் தங்கள் எதிர்கால திட்டங்களை உருவாக்க ஜெர்மன் வாகன தயாரிப்பு நிறுவனமான BMW Motorrad ஒப்பந்தம் செய்துள்ளது. இரு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கும் முதல் தயாரிப்பு இரு வருடங்களுக்குள் காட்சிப்படுத்தப்படும் என்று தெரிகிறது. காற்று மாசு போன்ற அச்சுறுத்தல்களுக்கான சிறு தீர்வாக இவை இருப்பதால் அரசுகளாலும் ஆதரவு அளிக்கப்படுகிறது. வாகன சந்தையின் எதிர்காலம் என்று கூறப்படும் எலக்ட்ரிக் வகை வாகனங்களில் அனைத்து நிறுவனங்களும் முதலீடு செய்யும் நிலையில், சர்வதேச நிறுவனமான பிஎம்டபுள்யு களமிறங்கியிருப்பது பலரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 



"மோட்டார் துறையின் எதிர்கால இயக்கத்தில் தோய்ந்துவிடாமல் ஓடுவதற்கு, புதிய உலகான மின்சார வாகனங்கள் உட்பட மாற்று தீர்வுகள் மூலம் வலுவான நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய நிலையில் உள்ளோம். இந்த வெற்றிகரமான கூட்டணியில் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் பிற புதிய தளங்களுக்கு விரிவுபடுத்துவது, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் ஆர்வமுள்ள தயாரிப்புகளை உலகளாவிய சந்தைகளுக்கு வழங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது, மேலும் இரு நிறுவனங்களுக்கும் மதிப்புமிக்க ஒருங்கிணைப்பைக் கொண்டுவருவது ஆகியவை முக்கிய கூறுகளாகும்" என்று TVS Motor இன் இணை நிர்வாக இயக்குநர் சுதர்சன் வேணு கூறினார். இருப்பினும், முதல் தயாரிப்பு ஸ்கூட்டரா அல்லது மோட்டார் சைக்கிளா என்பதை வேணு கூறவில்லை. இந்த தயாரிப்பு நகர்ப்புற கஸ்டமர்களை ஈர்க்கும் என்றும், இது ஒரு சொகுசு பைக்கின் விலையைக் கொண்டிருக்காது, மலிவு விலையில் கிடைக்கும்படி செய்வோம் என்றும் அவர் கூறினார். 



சென்னையை தளமாகக் கொண்ட நிறுவனம் சமீபத்திய காலங்களில் எலக்ட்ரிக் வாகனங்கள் துறையில் பல முன்னேற்றங்களைக் கொண்டுள்ளது. கடந்த மாதம், எதிர்கால தொழில்நுட்பங்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் திட்டத்தில் ரூ. 1,200 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசுடன் கையெழுத்திட்டது. மேலும் செவ்வாயன்று எலக்ட்ரிக் பைக் ஸ்டார்ட்அப் அல்ட்ரா வயலட்டில் முதலீடு செய்வதாக அறிவித்தது. டிவிஎஸ் மற்றும் ஜோஹோ கார்ப்பரேஷனிடமிருந்து இந்த நிறுவனம் ஒரு புதிய சுற்றில் சுமார் $15 மில்லியன் திரட்டியுள்ளது. Hero MotoCorp, Bajaj Auto மற்றும் Honda ஆகியவை எலக்ட்ரிக் வாகன சந்தையில் தங்கள் இருப்பை விரிவுபடுத்த மும்முரமாக உள்ளன. பிஎம்டபுள்யு நிறுவனம் சென்ற வாரம் விலை உயர்ந்த எலக்ட்ரிக் காரான iX ரக காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


Car loan Information:

Calculate Car Loan EMI