இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகன நிறுவனம் டிவிஎஸ். இவர்களின் வாகனங்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.இவர்களின் புகழ்பெற்ற பைக் Apache. 

Continues below advertisement

TVS Apache RTR 160 4V:

இந்த Apache பைக்கின் மாடலான TVS Apache RTR 160 4V பைக்கின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம்.

12 வேரியண்ட்:

இந்த பைக்கில் மொத்தம் 12 வேரியண்ட் உள்ளது. அடிப்படை விலை ரூபாய் 1 லட்சத்து 42 ஆயிரத்து 746. இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 71 ஆயிரத்து 191. இந்த பைக்கில் 159.7 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த TVS Apache RTR 160 4V பைக் 42 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 5 கியர்கள் இந்த பைக்கில் உள்ளது.

Continues below advertisement

12 லிட்டர் பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது. 800 மி.மீட்டர் உயரம் கொண்டது. நீலம், கருப்பு, சிவப்பு, பச்சை என 12 வண்ணங்களில் உள்ளது. 17.31 பிஎச்பி குதிரை ஆற்றல் கொண்டது. 14.73 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. அதிகபட்சமாக 114 கிலோமீட்டர் வேகத்தில் இந்த பைக்கில் செல்லலாம்.

497 கிலோமீட்டர் மைலேஜ்:

ஒரு கியர் கீழேவும், மற்ற 4 கியர்கள் மேலேவும் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 497 கிலோமீட்டர் மைலேஜ் அளிக்கிறது. ஸ்போர்ட், அர்பன் மற்றும் ரெயின் மோட்கள் உள்ளது. 1 சிலிண்டர், ஆயில் கூல்ட் மற்றும் 4 வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளது.

சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் ட்ரம் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 17 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 17 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. மோனோஷாக் சஸ்பென்சன் பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. 144 கிலோ எடை கொண்டது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மி.மீட்டர் ஆகும் 2.5 லிட்டர்  ரிசர்வ்ட் டேங்கர் வசதி உள்ளது. 60 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 5 வருட வாரண்டி அளிக்கப்படுகிறது. 

எல்சிடி டிஸ்ப்ளே கன்சோல் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டல் வசதி உள்ளது. 2 ட்ரிப்மீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. டெகோமீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. கியர் இண்டிகேட்டர் வசதி உள்ளது. கியர் ஷிப்ட் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. லோ ஆயில் இண்டிகேட்டர் வசதி உள்ளது.

வசதிகள்:

ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி உள்ளது.  ஹை பீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. சைலன்ஸ் கவர் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகலில் எரியும் விளக்குகள் வசதி உள்ளது. எல்இடி சிக்னல் விளக்குகள் வசதி உள்ளது.

 


Car loan Information:

Calculate Car Loan EMI