Toyota New Launch: டொயோட்டா நிறுவனம் 2030ம் அறிமுகப்படுத்த உள்ள கார்களில் எஸ்யுவி மற்றும் பட்ஜெட் பிக்-அப் வாகனம் ஆகியவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்:

இந்திய ஆட்டோம்பொபைல் சந்தையில் தனது போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்த டொயோட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன் மூலம், 2030ம் ஆண்டிற்குள் தனது சந்தை பங்களிப்பை எட்டிலிருந்து 10 சதவிகிதமாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயித்துள்ளது. சர்வதேச அளவில் அமெரிக்கா மற்றும் சீனாவை தொடர்ந்து, டொயோட்டாவின் மூன்றாவது மிகப்பெரிய சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது. 

இதனால் 2030ம் ஆண்டிற்குள் புதியது அல்லது மேம்படுத்தப்பட்டது என 15 புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதில் இரண்டு முற்றிலும் புதிய எஸ்யுவி மற்றும் பட்ஜெட் விலையில் பிக்-அப் வாகனம் ஆகியவையும் அடங்கும். மகாராஷ்டிராவில் கட்டப்பட்டு வரு டொயோட்டாவின் புதிய ஆலை செயல்பாட்டுக்கு வந்தவுடன், இந்தியாவில் அதன் ஆண்டு உற்பத்தியை ஒரு மில்லியன் யூனிட்டுகளைத் தாண்டிச் செல்லும் திறன் விரிவாக்கத் திட்டத்துடன் இந்தப் புதிய மாடல்களும் சந்தைப்படுத்தப்பட உள்ளது.

Continues below advertisement

மஹிந்த்ரா, ஹுண்டாய்க்கு போட்டியாக எஸ்யுவிக்கள்:

எஸ்யுவி பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் மஹிந்த்ரா மற்றும் ஹுண்டாய் உடன் நேரடியாக போட்டியிடும் விதமாக, இரண்டு எஸ்யுவிக்களை டொயோட்டா தயார்படுத்தி வருகிறது. இதில் ஒன்று லேண்ட் க்ரூசர் FJ மாடல் என கூறப்படுகிறது.இது ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மற்றொரு எஸ்யுவியும் இதே கட்டமைப்பில் உருவாக்கப்படும் ஹிலக்ஸ் சேம்ப் ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது ஏற்கனவே இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோக, ஹிலக்ஸ் மாடலுக்கு கீழே நிலைநிறுத்தும் வகையில் மலிவு விலை பிக்-அப் வாகனத்தையும் டொயோட்டா தயார்படுத்தி வருகிறது. கிராமப்புற மற்றும் பாதி நகரமான பகுதிகளை குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று வாகனங்களுமே மேற்குறிப்பிடப்பட்ட 15 வாகனங்களின் பட்டியல் அடங்கும். இதில் டொயோட்டா உருவாக்கும் மாடல்கள், சுசூகி மூலம் உற்பத்தி செய்யப்படும் மாடல்கள் மற்றும் தற்போது இருப்பவற்றில் மேம்படுத்தப்பட உள்ளவையும் இடம்பெறும்.

இந்தியாவில் உற்பத்தி விரிவாக்கம்:

ரொயோட்டா நிறுவனம் கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள தனது ஆலையை விரிவாக்கம் செய்யவும், மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் அடுத்த சத்ரபதி சம்பாஜி நகரில் புதியதாக கட்டி வரும் ஆலைக்கும் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது. இரண்டும் பயன்பாட்டிற்கு வந்தால், இந்தியாவில் டொயோட்டா நிறுவனத்தின் ஆண்டு உற்பத்தி திறன் 10 லட்சத்தை எட்டும். 

புதிய ஆலையானது இந்திய சந்தைக்கு புதிய எஸ்யுவிக்களை வழங்குவதோடு, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏற்றுமதிக்கும் உதவும். இதில் லேண்ட் க்ரூசர் FJ மாடலும் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசூகி மற்றும் ஹுண்டாய் ஆகிய நிறுவனங்கள் இந்திய சந்தைக்காக பரந்த முதலீட்டை அறிவித்துள்ள நிலையில், அதே பாணியில் டொயோட்டாவும் இறங்கியுள்ளது. 

டொயோட்டாவின் 3வது பெரிய சந்தை:

டொயோட்டா நிறுவனம் கடந்த நிதியாண்டில் இந்தியாவில் மட்டும் இதுவரை இல்லாத அளவில், 640 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 5 ஆயிரத்து 672 கோடி ரூபாயை லாபமாக ஈட்டியது. ஆலைகளை முறையாக பயன்படுத்தியது, மற்றும் மறுசீரமைக்கப்பட்ட சுசூகி மாடல்களின் வலுவான விற்பனையால் இது சாத்தியமானது. சுசூகி சார்ந்த தயாரிப்புகள் 2024 ஆம் ஆண்டில் டொயோட்டாவின் விற்பனையில் 52 சதவீதம் வரை இருந்தன . டொயோட்டா கடந்த ஆண்டு இந்தியாவில் 300,000 வாகனங்களை விற்றது. அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் இன்னோவா ஹைக்ராஸ் போன்ற வலுவான ஹைப்ரிட் மாடல்கள் மாற்று எரிபொருள் பிரிவில் பிராண்டின் இருப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன.


Car loan Information:

Calculate Car Loan EMI