இந்தியாவில் முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனமாக இருப்பது ஹோண்டா. மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை குறைத்ததன் மூலமாக நாட்டில் பல பொருட்களின் விலை குறைந்துள்ளது. குறிப்பாக, இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விலை பன்மடங்கு குறைந்துள்ளது. 

Continues below advertisement

இந்த நிலையில், ஹோண்டா நிறுவனத்தின் CB350 பைக்கின் விலை எந்தளவு குறையும்? என்பதை கீழே காணலாம். 

1. Honda CB350:

ஹோண்டா நிறுவனத்தின் Honda CB350 பைக் வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்த பைக் ஆகும். இந்த பைக்கின் விலை தற்போது ரூபாய் 2 லட்சத்து 18 ஆயிரத்து 951 ஆக உள்ளது. இதன் விலை ஜிஎஸ்டி வரி மாற்றத்திற்கு ரூபாய் 17 ஆயிரம் குறைவாக விற்பனை செய்யப்பட உள்ளது. 

Continues below advertisement

348.36 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டது இந்த Honda CB350. 3000 ஆர்பிஎம் டார்க் இழுதிறன் கொண்டது. 4 ஸ்ட்ரோக், ஏர் கூல்ட், எஸ்ஐ எஞ்ஜின் இதுவாகும். இந்த பைக் கருப்பு, சாம்பல் என பல வண்ணங்களில் உள்ளது. 

2. Honda CB350RS:

ஹோண்டா நிறுவனத்தின் CB350 பைக்கில் வாடிக்கையாளர்கள் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட மற்றொரு வேரியண்ட் Honda CB350RS  ஆகும்.  இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூபாய் 2 லட்சத்து 1,523 ஆகும். இந்த பைக்கின் விலை ரூபாய் 17 ஆயிரத்து 078 வரை விலை குறைய உள்ளது. 

15 லிட்டர் பெட்ரோல் டேங்க் திறன் கொண்ட இந்த பைக் 180 கிலோ எடை கொண்டது ஆகும். 21 செ.மீட்டர் நீளமும், 7 செ.மீட்டர் நீளமும், 11 செ.மீட்டர் உயரமும் கொண்டது. ப்ளூடூத் மற்றும் குரல் உத்தரவு தரும் வகையில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

3. Honda CB350 H’ness:

ஹோண்டா நிறுவனத்தின் Honda CB350 H’ness இந்த சிபி350 மாடலில் டாப் வேரியண்டாக உள்ளது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூபாய் 2 லட்சத்து 15 ஆயிரத்து 601 ஆகும். இதன் விலை தற்போது ரூபாய் 17 ஆயிரம் வரை குறைக்கப்பட உள்ளது. இதனால், ரூபாய் 1 லட்சத்து 98 ஆயிரத்து 757 வரை விற்கப்படும். 

ஆன்டி லாக் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி இதில் உள்ளது. பிரத்யேக வண்ணங்களில் இந்த பைக் உள்ளது. செல்போனை இணைத்துக் கொள்ளும் வசதியுடன் ப்ளூடூத் வசதி, கூகுள் மேப் பார்க்கும் வசதியும் உள்ளது. இந்த பைக் 348.36 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. 3 ஆயிரம் ஆர்பிஎம் திறன் கொண்டது. 

4.Honda CB300F:

Honda CB300F பைக் 35 கிலோமீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 6 கியர்களை கொண்ட இந்த பைக் 293.52 சிசி திறன் கொண்டது ஆகும். ப்ளூடூத் வசதி கொண்டது ஆகும். 3 வேரியண்ட் 3 கலர் கொண்டது இந்த Honda CB300F  ஆகும். 

இதன் விலை தற்போது ஆன் ரோட் ரூபாய் 1 லட்சத்து 96 ஆயிரத்து 632 ஆக உள்ளது. இதன் விலை ரூபாய் 13 ஆயிரத்து 281 வரை குறைய உள்ளது. இதனால், ரூபாய் 1.82 லட்சம் வரை விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

5.Honda NX200:

ஹோண்டா நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் ரக பைக் இந்த Honda NX200  ஆகும். தற்போது இதன் விலை எக்ஸ் ஷோரூம் விலையாக ரூபாய் 1 லட்சத்து 69 ஆயிரத்து 596 ஆக உள்ளது. இதன் விலை ரூபாய் 13 ஆயிரத்து 250 வரை குறைய உள்ளது. Honda NX200 இதனால் ஜிஎஸ்டி வரி மாற்றத்திற்கு பிறகு ரூபாய் 1 லட்சத்து 56 ஆயிரத்து 346க்கு விற்கப்பட உள்ளது. 

இந்த விலை குறைப்பு வரும் 22ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Car loan Information:

Calculate Car Loan EMI