இந்தியாவில் சமீபகாலமாக பெட்ரோலில் ஓடும் இரு சக்கர வாகனங்களைப் பொறுத்தமட்டில் மின்சார வாகனங்களையே வாகன ஓட்டிகள் அதிகளவு விரும்புகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகள், நகர்ப்புறங்களில் ஓட்டுவதற்கு ஏற்றதாக இருப்பதே இதற்கு காரணம்.
இந்த நிலையில், இந்தியாவில் 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் உள்ள டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள் எது? எது? என்று கீழே காணலாம்.
1.Ola S1 X:
இந்தியாவில் இ ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருக்கும் நிறுவனம் Ola S1 X ஆகும். தற்போது சந்தையில் வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படு்ம இ ஸ்கூட்டராக இந்த Ola S1 X உள்ளது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூபாய் 94 ஆயிரத்து 999 ஆகும். இந்த இ ஸ்கூட்டர் 2 கிலோவாட் பேட்டரி, 3 கிலோவாட் பேட்டரி, 4 கிலோவாட் பேட்டரி வரை கிடைக்கிறது. மணிக்கு 108 கி.மீட்டர் செல்லும் திறன் கொண்டது. எகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரகத்தில் உள்ளது. 2 கிலோ வாட் பேட்டரி 108 கி.மீட்டர் ஆற்றலும், 3 கிலோ வாட் பேட்டரி 115 கி.மீட்டர் மைலேஜும், 4 கிலோவாட் பேட்டரி 242 கி.மீட்டர் மைலேஜும் தரும் ஆற்றல் கொண்டது.
2. TVS iQube:
இந்தியாவின் முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் நிறுவனத்தின் இ ஸ்கூட்டர் TVS iQube ஆகும். இதன் எக்ஸ் ஷோரூம் தொடக்க விலை ரூபாய் 94 ஆயிரத்து 434 ஆகும். இந்த இ ஸ்கூட்டர் iQube, iQube S மற்றும் iQube ST ஆகிய 3 வேரியண்ட்களில் உள்ளது. iQube 2.2 கிலோவாட் பேட்டரி கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 94 கி.மீட்டர் செல்லும் ஆற்றல் கொண்டது. இது 2.45 மணி நேரம் சார்ஜ் செய்ய எடுத்துக் கொள்ளும். iQube S 145 கி.மீட்டர் செல்லும் ஆற்றல் கொண்டது. 3.5 கிலோவாட் பேட்டரி கொண்டது. iQube ST இ ஸ்கூட்டரும் 145 கி.மீட்டர் மைலேஜ் கொண்டது. இதன் விலை ரூபாய் 1.27 லட்சம் ஆகும்.
3. Vida V2 Plus:
ஹீரோ நிறுவனத்தின் Vida V2 Plus இ ஸ்கூட்டரின் தொடக்க விலை ரூபாய் 85 ஆயிரத்து 300 ஆகும். இது 3.44 கிலோவாட் பேட்டரி கொண்டது ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தாலே 143 கி.மீட்டர் செல்லும் ஆற்றல் கொண்டது. இது எகோ, ரைட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய வேரியண்ட்களில் உள்ளது. இதில் சாவியில்லாமல் ஸ்டார்ட்- ஆஃப் முறையை கொண்டது. ப்ளூடூத் வசதி உள்ளிட்ட பல வசதிகளை உள்ளடக்கியது.
4. TVS Orbiter:
டிவிஎஸ் நிறுவனத்தின் மற்றொரு இ ஸ்கூட்டர் இந்த TVS Orbiter ஆகும். இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 158 கி.மீட்டர் செல்லும் ஆற்றல் கொண்டது. இதன் தொடக்கவிலை ரூபாய் 1.04 லட்சம் ஆகும். பிஎம் இ டிரைவ் 5 ஆயிரம் தள்ளுபடியாகியுள்ளதால் இதன் விலை ரூபாய் 1 லட்சத்திற்கும் கீழே வந்துள்ளது. இதில் 5.5 இன்ச் எல்சிடி திரை கொண்டது. யுஎஸ்பி சார்ஜிங் கேபிள் வசதியும் உள்ளது. மலைப்பாங்கான பகுதிகளில் இந்த வாகனத்தை ஓட்டுவதற்கான கட்டுப்பாடுகளும் இதில் உள்ளது. 3.1 கிலோவாட் பேட்டரி கொண்டது.
5.Ampere Magnus Neo:
இந்த வரிசையில் முக்கியமான ஸ்கூட்டராக உள்ளது Ampere Magnus Neo ஆகும். இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூபாய் 84 ஆயிரத்து 999 ஆகும். இது 2.3 கிலோவாட் பேட்டரியை கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 85 முதல் 95 கி.மீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது. மணிக்கு 65 கி.மீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது. 75 ஆயிரம் கி.மீட்டர் அல்லது 5 வருட வாரண்டி அளித்துள்ளனர்.
Car loan Information:
Calculate Car Loan EMI