ஒருபக்கம் நாளுக்கு நாள் பெட்ரோலின் விலை அதிகரித்து கொண்டேபோகிறது. மறுபக்கம் பெட்ரோல் இருப்பு மற்றும் பெட்ரோல் ஏற்றுமதி
செய்யும் நாடுகளின் பெட்ரோல் வளமும் பிறை நிலவைப்போல் தேய்ந்து வருகிறது. இதனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மவுசு மக்களிடையே 
ஏறிக்கொண்டே போகிறது.


எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவதற்கு ஒருமுறை முதலீடு செய்து பாருங்கள் இனி உங்கள் பட்ஜெட்டில் துண்டே விழாது. E-ஸ்கூட்டர்களை பராமரிப்பது மிக எளிது அதுபோக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையையும் கொடுப்பதில்லை. தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் ஐடியாவில் உள்ளவர்கள், கீழ்க்காணும் அனைத்து தகவல்களை படித்து பார்த்து உங்களுக்கான E-ஸ்கூட்டரை தேர்வு செய்து கொள்ளுங்கள்.




 


1. Revolt RV 300


Revolt RV 300 பைக் சராசரியாக 80 முதல் 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அமைப்பினை பெற்றுள்ளது. இதில் எகோ மோட், நார்மல் மோட் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட் என மொத்தம் மூன்று ட்ரைவிங் மோட் உள்ளது. பூட் ஸ்பேஸ் இல்லாதது இந்த பைக்கின் ஒரே ஒரு நிறையாகும்.



 


2.Ather 450X


Ather 450X பைக் மாடர்னாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.இந்த பைக்கில் 7-இன்ச் எல்.சி.டி டாஷ் போர்ட் உள்ளது. அதில் மியூசிக், நேவிகேஷன் மற்றும் கால் ஆப்ஷன் அமைந்துள்ளது.118 கிலோமீட்டர் ரேஞ் கொடுத்தாலும் Ather 450X-ன் விலை சற்று கூடுதலாக உள்ளது ஒரு மைனஸ் ஆகும்.




3.Hero Electric Photon


இந்த பைக் பார்ப்பதற்கு வெஸ்பா போல் ஸ்டைலாக இருப்பதனால் 80’ களின் ரெட்ரோ லுக்கினை நினைவுபடுத்துகிறது.இந்த பைக்
மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 108 கிலோமீட்டர் வரை செல்லும்.குறைவான விலையில் இந்த பைக் கிடைத்தாலும் இதன் குறைவான ஸ்பீட் லிமிட் இதன் நிறையாகும்.




 


4. Bajaj Chetak


பஜாஜ் ஸ்கூட்டர்களுக்கென தனி நுகர்வோர் கூட்டமே உள்ளது என்பது மறுக்க முடியாத கூற்று.இந்த பைக்கின் பேட்டரி 70,000 கி.மீ வரை 
செல்லும் வாழ்நாளை பெற்றுள்ளது. Bajaj Chetak சுமார் 7 வருடங்கள் வரை உழைக்கூடியதாக அமைந்துள்ளது.ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை பெற்றுள்ளதால் 5 மணிநேரத்திலேயே முழு சார்ஜையும் ஏற்றிவிடலாம். Bajaj Chetak-ன் ஷோ ரூம் விலை ரூ.1,41,400-ஆக இருப்பதால் சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.



5.Ola S1


இந்த பைக்கில் Ola S1, Ola S1 Pro ஆகிய இரண்டு ரகங்கள் உள்ளது.Ola S1 மொத்தம் பத்து வகையான கலர்களில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் வாய்ஸ் கண்ட்ரோல் புதிய அம்சமாக இருந்தாலும், இதன் பேட்டரி ஃபெயிலியர் பெரும் பிரச்சனையாகும். உங்களுக்கு ஏற்ற அமைப்பினை கொண்ட எலெக்ட்ரிக் பைக்கினை ஆராய்ந்து தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.


Car loan Information:

Calculate Car Loan EMI