இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தாத வீடுகளே இல்லை என்ற நிலை இந்தியாவில் உள்ளது. அத்தியாவசியமான ஒன்றாக தற்போது இரு சக்கர வாகனம் உள்ளது. பெட்ரோல் பைக்குகளுக்கு மாற்றாக மின்சார இரு சக்கர வாகனங்கள் சந்தையில் விற்பனையாகி வருகிறது. 

Continues below advertisement


இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியை அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இரு சக்கர வாகனங்களிலும் தற்போது மின்சார வாகனங்களின் விற்பனை சக்கைப் போடு போட்டு வருகிறது. இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் டாப் 5 மின்சார ஸ்கூட்டர் எது? எது? என்பதை கீழே காணலாம்.


1. Ola S1 Pro (2nd Gen)


மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருப்பது ஓலா. இவர்களின் தொடக்க கால உற்பத்தியில் ஏராளமான குறைகள் இருந்தையடுத்து, பின்னர் அதை சரி செய்தனர். தற்போது Ola S1 Pro (2nd Gen) ஸ்கூட்டரை அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தாலே 195 கி.மீட்டர் வரை பயணிக்கலாம்.  இதில் ஸ்மார்ட்  தொடும் திரை, கீ லெஸ் ஸ்டார்ட் போன்ற பல அம்சங்கள் இந்த வாகனத்தில் உள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.1.47 லட்சம் ஆகும்.


2. Simple One


இந்த Simple One ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தாலே 212 கி.மீட்டர் தொலைவிற்கு பயணிக்கலாம். இதில் பேட்டரியை சார்ஜ் செய்வதற்காக நீக்கியும், பின்னர் சார்ஜ் செய்து பொருத்தவும் செய்யலாம்.  நீண்ட தூர பயணத்திற்கு ஏற்றவாறு இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு ஏற்றாற்போல இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் ரூ.1.46 லட்சம் ஆகும்.


3. Ather 450X (Gen 3)


இந்தியாவில் புகழ்பெற்ற மின்சார ஸ்கூட்டர் Ather 450X (Gen 3) ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தாலே இந்த ஸ்கூட்டர் 150 கி.மீட்டர் செல்லும். ஸ்போர்ட்ஸ் ரகத்தில் இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 110 கி.மீட்டர் செல்லும் வகையில் இந்த ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 1.57 ஆயிரம் ஆகும்.


4. TVS iQube ST:


TVS நிறுவனமும் மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. அவர்களின் TVS iQube ST 5.1 கிலோ வாட் பேட்டரி கொண்டது. இதில் ஒரு முறை சார்ஜ் செய்தாலே 145 கி.மீட்டர் வரை பயணிக்கலாம்.  இந்த வாகனத்தில் குரல் மூலம் இயக்கும் சிறப்பம்சமும் உள்ளது. இதன் விலை ரூபாய் 1.72 லட்சம் ஆகும். 


5. Bajaj Chetak Premium 2025:


இரு சக்கர வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனம் Bajaj ஆகும். அவர்களது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாக Bajaj Chetak Premium 2025 உள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தாலே 127 கி.மீட்டர் செல்லும். இந்த வாகனத்தில் வேகமாக சார்ஜ் ஏறும் திறன் கொண்டும் வகையில் பேட்டரி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1.2 லட்சம் ஆகும்.


Car loan Information:

Calculate Car Loan EMI