cheapest hybrid cars: இந்திய சந்தையில் மலிவு விலையில் கிடைக்கும் டாப் 5 ஹைப்ரிட் கார்கள், EV மோட்-ஐயும் கொண்டிருப்பது கூடுதல் ஆச்சரியமாகும்.


ஹைப்ரிட் கார்கள்:


இந்தியாவில் கார்கள் பணக்காரர்களுக்கு என்ற எண்ணம் நொறுங்கி, நடுத்தர மக்களிடையேயான பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உற்பத்தி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடன் உற்பத்தியை உணர்ந்து, பல்வேறு விதமான கார்களை சந்தைக்கு கொண்டு வருகின்றனர். அதில் ஒன்று தான் ஹைப்ரிட் கார். இத்தகைய வாகனங்கள் இன்ஜின் மற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மின் மோட்டார்கள் மூலம் இயக்கப்படுகின்றன. அவை பேட்டரிகளில் சேமிக்கப்படும் ஆற்றலைப் பயன்படுத்துகின்றன .  EV மோடில், பேட்டரிகள் மூலம் வாகனத்தை குறிப்பிட்ட தூரத்திற்கு முழுமையாக மின்சார வாகனமாக பயன்படுத்த முடியும். அநாவசிய இரைச்சலை தவிர்க்க முடியும். ஹைப்ரிட் கார் பேட்டரியை வயர்களில் இணைத்து சார்ஜ் செய்ய முடியாது. ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் மற்றும் இன்ஜின் மூலம்  மட்டுமே சார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்திய சந்தையில் கிடைக்கும், டாப் 5 மலிவு விலை ஹைப்ரிட் கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 


TOYOTA URBAN CRUISER HYRYDER:


டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மைல்ட் மற்றும் ஸ்ட்ராங்க் ஹைப்ரிட் வெர்ஷன்களில் சந்தையில் கிடைக்கிறது. இந்த SUVயின் ஸ்ட்ராங்க் வெர்ஷன் ஆனது EV மோடை கொண்டுள்ளது. அதுவும், மேனுவலாக ஒரு பொத்தானை அழுத்தவதன் மூலம், EV மோடை தேர்ந்தெடுக்கக்கலாம்.  இது S, G மற்றும் V ஆகிய மூன்று ஹைப்ரிட் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் தொடக்க விலை ரூ. 16.66 லட்சம் ஆகும்.


MARUTI SUZUKI GRAND VITARA:


மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா என்பது டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடரின் sister எஸ்யூவி என குறிப்பிடப்படுகிறது. இது மைல்ட் ஹைப்ரிட் (ஐஎஸ்ஜி) மற்றும் வலுவான ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் வருகிறது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடரில் இருப்பது போன்றே, இதிலும் EV மோடை தேர்ந்தெடுக்கக்கலாம். கிராண்ட் விடாரா  Zeta Plus மற்றும் Alpha Plus ஆகிய இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.  இதன் ஆரம்ப விலை ரூ.18.43 லட்சம் ஆகும்.


HONDA CITYE:HEV


ஹோண்டா சிட்டி இந்தியாவில் மிகவும் அடையாளம் காணக்கூடிய மற்றும் அடையாளத்துவம் கொண்ட செடான் மாடல் கார் ஆகும். அதுபோலவே  அதன் ஹைப்ரிட் பதிப்பும் காரைச் சுற்றி தனித்துவமான சின்னங்களுடன் மிகவும் அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. ஹோண்டா நிறுவனம் தனது சிட்டி e:HEV-ஐ வலுவான ஹைப்ரிட் தொழில்நுட்பம் மற்றும் EV பயன்முறையுடன் வழங்குகிறது. இது ஓட்டுநர் தேவைகளைப் பொறுத்து தானாகவே மாறும். V & ZX என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் தொடக்க விலை ரூ. 18.89 லட்சத்தில் தொடங்குகிறது.


MARUTI SUZUKI INVICTO:


மாருதி சுசுகி இன்விக்டோ ஒரு MPV ஆகும். இது டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் அடிப்படையிலானது மற்றும் வலுவான ஹைப்ரிட் பதிப்பில் மட்டுமே வழங்கப்படுகிறது. Invicto இந்திய சந்தையில் மாருதி சுசுகியின் ஃபால்ஷிப் மற்றும் மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ஆகும். இது EV மோட் பட்டனுடன் வருகிறது, இதைப் பயன்படுத்தி இந்த காரை 40 kmph வரை மின்சாரத்தில் மட்டுமே இயக்க முடியும். இதன் ஆரம்ப விலை ரூ.25.51 லட்சம் ஆகும்.


TOYOTA INNOVA HYCROSS:


டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் ஒரு நவீன ஹைபிரிட் MPV ஆகும். இது இன்னோவா பெயர் பலகையை அதன் பசுமை தொழில்நுட்பத்துடன் முன்னோக்கி கொண்டு செல்கிறது. இது இரண்டு பதிப்புகளில் ஒன்று லேசான ஹைப்ரிட் தொழில்நுட்பம் மற்றும் மற்றொன்று வலுவான ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் வழங்கப்படுகிறது. Innova Hycross ஆனது சுய-சார்ஜிங் வலுவான ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் EV பயன்முறையுடன் வருகிறது. இதன் தொடக்க விலை ரூ 25.72 லட்சம் ஆகும்.


Car loan Information:

Calculate Car Loan EMI