ஒரு காரை பார்த்து வாங்கும்போது அதன் மைலேஜ், விலை, பிக்கப், சீட் இருக்கைகள் உள்ளிட்டவற்றை எந்தளவு பார்க்கிறார்களோ, அதே அளவு பாதுகாப்பு அம்சத்தையும் வாடிக்கையாளர்கள் பார்க்கிறார்கள். பெரும்பாலும் புதியதாக கார் வாங்க விரும்புபவர்கள் தங்களது பொருளாதார நிலைக்கு ஏற்ப வாங்கும் பட்ஜெட் கார்களில் இதுபோன்ற பாதுகாப்பு குறைபாடுகள் இருக்குமோ? என்ற ஐயம் இருக்கும். 

Continues below advertisement

அந்த வகையில், பட்ஜெட் விலையில் 6 ஏர்பேக்குகள் கொண்ட தரமான 5 கார்கள்? என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. Maruti Suzuki Celerio:

முன்னணி கார் நிறுவனமான மாருதி சுசுகியின் ஹேட்ச்பேக் ரக கார் இந்த Maruti Suzuki Celerio ஆகும், இது வடிவத்தில் சிறியதாக இருந்தாலும் இதில் பயணிகளின் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள் உள்ளது. ஏபிஎஸ் ப்ரேக் வசதி உள்ளது. எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் எனப்படும் ஈஎஸ்சி வசதி உள்ளது. பார்க்கிங் சென்சார் வசதி உள்ளது. பாதுகாப்பான கார்களில் இது நல்ல பெயரைப் பெற்றுள்ளது.

Continues below advertisement

இதன் தொடக்க விலை ரூபாய் 5.64 லட்சம் (எக்ஸ் ஷோ ரூம்) ஆகும். 998 சிசி திறன் கொண்ட பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 கியர்கள் கொண்ட கார் இதுவாகும். சிஎன்ஜியிலும் இது உள்ளது. 

2. Hyundai Grand i10 Nios:

ஹுண்டாய் நிறுவனம் நடுத்தர குடும்பத்தினரின் கார் கனவை நனவாக்கும் வகையில் உருவாக்கியதே இந்த Hyundai Grand i10 Nios ஆகும். ஹேட்ச் பேக் ரக கார் என்றாலும் பாதுகாப்பில் எந்த குறையும் இல்லை.  இந்த காரிலும் 6 ஏர்பேக் உள்ளது. எலக்ட்ரானிக் ஸ்டபிளிட்டி கன்ட்ரோல், மலைகளில் ஓட்டுவதற்கான ஹில்சைட் ஸ்டார்ட் அசிஸ்ட், டயரில் உள்ள காற்றின் அழுத்தத்தை பரிசோதிக்கும மானிட்டர் உள்ளது. 

5 பேர் அமரும் வசதி கொண்ட இந்த கார் 5 கியர் கார் ஆகும். இந்த காரில் 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 95.2 என்எம் டார்க் இழுதிறன் வசதி கொண்டது. டிஸ்க் ப்ரேக் வசதி உள்ளது. பெட்ரோல் மட்டுமின்றி சிஎன்ஜி வசதியும் உள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 5.92 லட்சம் ஆகும்.

3. Hyundai Exter:

ஹுண்டாய் நிறுவனத்தின் பட்ஜெட் விலையில் தரமான கார் இந்த Hyundai Exter ஆகும். எஸ்யூவி ரக காரான இந்த கார் 6 ஏர் பேக் கொண்டது ஆகும். ரிவர்ஸ் கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டபிளிட்டி மேனேஜ்மேண்ட் கொண்டது. டேஷ்போர்டிலும் பல்வேறு அதிநவீன வசதி உள்ளது.

5 இருக்கைகள் கொண்ட இந்த கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் ஓடும் வசதி கொண்டது. 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் இதில் உள்ளது. 95.2 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. டிஸ்க் ப்ரேக் இதில் உள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 6.27 லட்சம் ஆகும்,

4. Nissan Magnite:

நிஸான் நிறுவனத்தின் தரமான படைப்புகளில் இந்த Nissan Magnite முக்கியமானது ஆகும். 360 டிகிரி கேமரா இதில் உள்ளது. எஸ்யூவி ரக காரான இதில் 6 ஏர் பேக் வசதி உள்ளது. ட்ராக்ஷன் கடடுப்பாடு, டயரின் காற்றழுத்தத்தை சோதிக்கும் டயர் ப்ரசர் மானிட்டரிங், மலையில் ஓட்டுவதற்கான ஹில் ஸ்டார் அசிஸ்ட் வசதி உள்ளது. 

1 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் கொண்ட இந்த நிஸானின் தொடக்க விலை ரூபாய் 6.14 லட்சம் ஆகும். 999 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் உள்ளது. 96 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 

5. Maruti Suzuki Swift:

மாருதி சுசுகி நிறுவனத்தின் வெற்றிகரமான தயாரிப்பு Maruti Suzuki Swift ஆகும். இந்தியாவில் பல லட்சக்கணக்கான ஸ்விஃப்ட் கார் சாலைகளில் பயன்பாட்டில் உள்ளது. பயணிகள் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக் உள்ளது. இதில் எலக்ட்ரானிக் ஸ்டபிளிட்டி சிஸ்டம், ஏபிஎஸ் ப்ரேக் வசதி உள்ளது. ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளது.

25 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் இந்த கார் 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது ஆகும். 111.7 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது ஆகும். 3 சிலிண்டர் உள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 7.3 லட்சம் ஆகும்.


Car loan Information:

Calculate Car Loan EMI