Maruti Suzuki Victoris:  மாருதி சுசூகியின் வேறு எந்த காரிலும் இல்லாத, விக்டோரிஸ் மாடலில் மட்டும் இடம்பெற்றுள்ள அம்சங்கள் மற்றும் வசதிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மாருதி சுசூகி விக்டோரிஸ்

மாருதி சுசூகி நிறுவனம் தனது கார் மாடல்களில் முன்பு எப்போதும் இல்லாத பல அம்சங்கள் மற்றும் வசதிகளை இணைத்து, புதிய விக்டோரிஸ் மாடலை இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அண்மையில் அறிமுகப்படுத்தியது. அரேனா டீலர்ஷிப்களில் விற்பனை செய்யப்பட உள்ள இந்த 5 சீட்டரானது, போட்டித்தன்மை மிக்கதாக 10 முதல் 18 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரானது க்ராண்ட் விட்டாராவுடன் அதிகளவில் ஒத்துப்போகிறது. 

மாருதி சுசூகி விக்டோரிஸ் - அம்சங்கள்

மாருதி சுசூகி விக்டோரிஸ் காரானது ப்ராண்டின் மிகப்பெரிய 10.1 இன்ச் டச்ஸ்க்ரீனை கொண்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமானது, வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டுள்ளது.  இவை இன் பில்ட் செயலிகளை கொண்டிருப்பதோடு, ஓவர் தி ஏர் அப்டேட் அம்சங்களையும் பெற்றுள்ளது. 35-க்கும் மேற்பட்ட அம்சங்களுடன் செயற்கை நுண்ணறிவு மூலமான அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ஸையும் பெற்றுள்ளது. கூடுதலாக முற்றிலுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டரும் இடம்பெற்றுள்ளது.

விக்டோரிஸில் தெறிக்கும் சவுண்ட் சிஸ்டம்

மாருதி கார்களில் வழங்கபட்டதிலேயே மிகப்பெரியதான 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் உடன், புத்தம் புதிய 3 ஸ்போக் ஸ்டியரிங் வீலும் வழங்கப்பட்டுள்ளது. 64 வண்ண ஆம்பியண்ட்லைட்டிங் ஃபங்சன், 5.1 டால்பி அட்மாஸ் (4 ஸ்பீக்கர்கள், 2 ட்வீட்டர்கள், செண்டர் ஸ்பீக்கர், சப் - ஃவூபர், 8-சேனல் இந்பில்ட் ஆம்ப்லிஃபையர் ) உடன் 8 ஸ்பீக்கர் ஹர்மன் இன்ஃபினிட்டி ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக 360 டிகிரி கேமரா சிஸ்டம்  மற்றும் ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

முதல்முறையாக லெவல் 2 ADAS

புதிய காம்பேக்ட் எஸ்யுவியில் மாருதி சார்பில் முதல்முறையாக கெஸ்டர் கண்ட்ரோல்ட்  பவர்ட் டெயில்கேட் இடம்பெற்றுள்ளது. ஆட்டோமேடிக் எமர்ஜென்சி ப்ரேக், கர்வ் ஸ்பீட் ரிடக்‌ஷன் உடன் கூடிய அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், ஹை பீம் அசிஸ்ட், ரியர் க்ராஸ் ட்ராஃபிக் அலெர்ட், லேன் சேஞ்ச் அலெர்ட் உடன் கூடிய ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர் ஆகியவற்றை உள்ளடக்கிய லெவல் 2 ADAS தொழில்நுட்ப வசதியும் முதல்முறையாக மாருதி காரில் வழங்கப்பட்டுள்ளது.

விக்டோரிஸ் - 60+ கனெக்டட் அம்சங்கள்

காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில், காரின் கட்டமைக்கப்பட்ட உடலுக்கு கீழே பாதுகாக்கப்பட்ட வடிவில், 55 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிஎன்ஜி டேங்கர்கரை பெறும் முதல் மாடல் இதுவாகும். இதன் மூலம் காரின் பூட் ஸ்பேஸ் கெபாசிட்டி ஆனது 330 லிட்டராக உள்ளது. நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி, விக்டோரிஸ் காரில் சுசுகி கனெக்ட் எனும் ஆப்ஷனை வழங்குகிறது. இதன் மூலம் இ- கால், மெயிண்டெனன்ஸ் நோடிஃபிகேஷன், பார்கிங் ப்ரேக் ஸ்டெடஸ், செண்ட் ட்ரிப் டு கார் உடன் கூடிய சுசூகி நேவிகேஷன் ஆகிய 60-க்கும் மேற்பட்ட கனெக்டட் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

விக்டோரிஸ் சொகுசு பயணத்திற்கான அம்சங்கள்

பயணங்களை வசதியாகவும், சொகுசாகவும் மற்றும் ப்ரீமியமாகவும் மாற்றுவதற்காக டேஷ்போர்டானது பிளாக் மற்றும் இவோரி தீமில் டூயல் ரோனை கொண்டுள்ளது. சாஃப்ட் டச் மெட்டீரியல்களை கொண்டு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. ஏசி டிஸ்பிளே உடன் கூடிய ஆட்டோமேடிக் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், மாருதி சுசூகி காரில் இதுவரையில் இல்லாத வகையில் மிகப்பெரிய டூயல் பேன் சன்ரூஃப், காற்றின் தரத்தை காட்சிப்படுத்துவதுடன் கூடிய PM 2.5 ஃபில்டர், ஆட்டோ ப்யூரிஃபையர் மோட், பேடல் ஷிஃப்டர்ஸ், டெரைன் மற்றும் ட்ரைவ் மோட்கள், முன்புற வெண்டிலேடட் இருக்கைகள் மற்றும் 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பவர்ட் ட்ரைவர் சீட் ஆகிய அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

மாருதி சுசூகி விக்டோரிஸ் - பாதுகாப்பு அம்சங்கள்

புதிய கார்களுக்கான பாரத் பாதுகாப்பு பரிசோதனையில் விக்டோரிஸ் கார் மாடல் 5 ஸ்டார் ரேட்டிங்கை ஈட்டியுள்ளது. பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 6 ஏர்பேக்குகள், டயர் ப்ரெஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆட்டோ ஹோல்ட் உடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்கிங் ப்ரேக், முன் மற்றும் பின்புற பார்கிங் சென்சார்கள் மற்றும் ஹில் ஹோல்ட் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாருதி சுசூகி விக்டோரிஸ் - இன்ஜின் விவரங்கள்

மாருதியின் புதிய 5 சீட்டர் விக்டோரிஸ் கார் மாடல் 1.5 லிட்டர் மைல்ட் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் ஸ்ட்ராங்  ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல்/சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்களை பெற்றுள்ளது. இவற்றிற்கு 5 ஸ்பீட் மேனுவல், eCVT  மற்றும் 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. ஆல் க்ரிப் செலக்ட் ஆல் வீல் ட்ரைவ் சிஸ்டமானது, VVT பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. இது ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை கொண்டுள்ளது. ஹைப்ரிட் அம்சத்தை கருத்தில் கொண்டால், இந்த காரானது அதிகபட்சமாக மணிக்கு 28.6 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI