Best SUV Under 10 Lakh: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 10 லட்ச ரூபாய்க்குள் கிடைக்கும், எஸ்யுவி கார் மாடல்கள் என்ன என்பதை இங்கு அறியலாம். 


விழாக்கால கொண்டாட்டம்:


பண்டிகைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், தற்போது வழங்கப்படும் சலூகைகளை பயன்படுத்தி கார் வாங்க வேண்டும் என்ற தங்களது கனவை நினைவாக்க பலரும் தீவிரம் காட்டுவர். செடான் மற்றும் ஹேட்ச்பேக் போன்ற மாடல்களை காட்டிலும், தற்போதைய சூழலில் எஸ்யுவி கார் வாங்க தான் பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. அதற்கு உதவும் வகையில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் உள்ள சிறந்த மற்றும் மிகவும் மலிவு விலை எஸ்யூவிகளை பட்டியலிட்டுள்ளோம்.


Hyundai Exter


எக்ஸ்டர் மாடலில் இடம்பெற்றுள்ள சிறப்பு, பாதுகாப்பு  அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் காரணமாக, எஸ்யுவி செக்டாரில் அதிகம் விற்பனையாகும் மாடலாக உள்ளது.  Exter ஆனது ஹூண்டாயின் மிகச்சிறிய SUV ஆக இருக்கலாம். ஆனால் அம்சங்கள் பட்டியலில் டேஷ்கேமரா, தானியங்கி மேனுவல் டிரான்ஸ்மிஷன் (AMT) பதிப்பிற்கான துடுப்பு ஷிஃப்டர்கள், ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல், ஓவர்-தி-ஏர் (OTA) அப்டேட்கள், ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் ( ESC), ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS), எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் (EBD), பின்புற பார்க்கிங் கேமரா, சன்ரூஃப் குரல் உதவி என ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றுளன.   எக்ஸ்டர் மாடலானது 3,815 மிமீ நீளம் , 185 மிமீ அகலம் மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் உயரம் 1710 மிமீ உள்ளது. எக்ஸ்டெர் 1.2லி பெட்ரோலுடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸுடன் வருகிறது. இதன் குறைந்தபட்ச விலை 6 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.


Maruti Suzuki Fronx:


மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் மாடல் கார் அதன் ஸ்டைலிங் பயனாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. காரின் முன்புறம் மற்றும் முகப்பு விளக்கின் வடிவமைப்பு ஆகியவை பெரிய கிராண்ட் விட்டாராவை ஒத்திருக்கிறது. அதேநேரம்,  காரின் சாய்ந்த கூரையானது இந்த காரை வடிவமைப்பில் தனித்துவமாக்குகிறது. 3,995 மிமீ நிளம், 1,765 மிமீ அகலம் மற்றும் 190 மி.மீ. கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது. காலநிலை கட்டுப்பாடு, 360-டிகிரி கேமரா, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்லன. இன்ஜின் விருப்பங்களைப் பற்றி பேசினால், Fronx இல் 1.2லி பெட்ரோல் வேரியண்ட் மேனுவல் மற்றும் AMT வகைகளில் வருகிறது. இதன் விலை ரூ. 7.4 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.


Tata Punch


உறுதித்தன்மை மற்றும் வடிவமைப்பு காரணமாக டாடா நிறுவனத்தின் பஞ்ச் மாடல் கார், எஸ்யுவி பிரிவு விற்பனையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குரல் உதவி,  ஆட்டோ முகப்பு விளக்குகள்  மற்றும் மின்சார சன்ரூஃப் ஆகிய அம்சங்கள் அண்மையில் பஞ்ச் மாடலில் இணைக்கப்பட்டுள்ளன. 3827 மிமீ நீளம், 1742 மிமீ அகலம் மற்றும் 187 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது. இதன் விலை 6 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது.


ALSO READ | New Bike Launch November: நவம்பரில் இந்தியாவில் அறிமுகமாக உள்ள மோட்டார் சைக்கிள்கள் - அட்வென்சர் டூ ஸ்போர்ட் மாடல்..!


 


Car loan Information:

Calculate Car Loan EMI