Activa 125 Scooter: ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆக்டிவா 125 ஸ்கூட்டர்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கூட்டர் என்றாலே அனைவரது நினைவிற்கும் முதலாவதாக வரும் அளவிற்கு, ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ப்ராண்ட் பிரபலமடைந்துள்ளது. புதிய எடிஷனான ஆக்டிவா 125 ஆனது முந்தைய 110 எடிஷனை காட்டிலும், கூடுதல் சக்தி வாய்ந்தது. இந்நிலையில் இந்த வாகானத்தை வாங்குவதற்கு முன்பாக, பயனர்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆக்டிவா 125 ஸ்கூட்டர் - முக்கிய தகவல்கள்
1. ட்யூப்லெஸ் டயர்கள் உள்ளதா?
ஆம், ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் ட்யூப்லெஸ் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, முன்புறத்தில் 12 அங்குல சக்கரமும் பின்புறத்தில் 10 அங்குல சக்கரமும் இடம்பெற்றுள்ளன.
2. சைட் ஸ்டாண்ட் இன்ஜின் கட் ஆஃப் வசதி உள்ளதா?
ஆம், ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் சைட்-ஸ்டாண்ட் இன்ஜின் கட்-ஆஃப் வசதி உள்ளது. இது சைட்-ஸ்டாண்ட் கீழே இருக்கும்போது இன்ஜினை ஆஃப் செய்வது மட்டுமின்றி, வாகனம் மீண்டும் ஸ்டார்ட் ஆவதையும் தடுக்கிறது.
3. ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப் வசதி உள்ளதா?
ஆம், ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் எரிபொருள் செயல்திறனை மேம்படுத்த உதவும் ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு பொத்தனை அழுத்தவதன் மூலம் உடனடியாக ஸ்டார்ட்/ஸ்டாப் நிலைக்கு கொண்டு செல்லலாம்.
4. TFT டிஸ்பிளே உள்ளதா?
வாகனத்தின் உமிழ்வு தொடர்பான தகவல்கள் உடன் அழைப்புகள், இசை மற்றும் நேவிகேஷன் பற்றிய தகவல்களைக் காட்டும் 4.2-இன்ச் ப்ளூடூத் வசதி கொண்ட மேம்படுத்தப்பட்ட TFT டிஸ்ப்ளேவையும் ஆக்டிவா 125 ஸ்கூட்டர் பெற்றுள்ளது.
5. என்னென்ன வண்ண விருப்பங்கள் கிடைக்கின்றன?
ஹோண்டா ஆக்டிவா 125 இரண்டு வேரியண்ட்களிலும் ஆறு வண்ண விருப்பங்களிலும் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சிவப்பு, மேட் க்ரே, மேட் க்ரீனிஷ் - க்ரே, கருப்பு, வெள்ளை மற்றும் அடர் நீலம் ஆகிய ஆப்ஷன்கள் கிடைக்கின்றன.
6. ஆற்றல் வெளியீடு
ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் 123.9சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்ட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8.4hp மற்றும் 10.5Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது.
7. குறைக்கப்பட்ட விலை
ஹோண்டா ஆக்டிவா 125 விலை H-ஸ்மார்ட் வேரியண்டிற்கு ரூ.88,339 ஆகவும், DLX வேரியண்டிற்கு ரூ.91,983 ஆகவும் உள்ளது. ஜிஎஸ்டி திருத்தத்தின் விளைவாக இந்த ஸ்கூட்டரின் மீது பயனாளர்கள் ரூ.8,259 வரை சேமிக்கலாம்.
8. ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் மைலேஜ்
ஆக்டிவா 125 ஸ்கூட்டர் ஒரு லிட்டருக்கு சராசரியாக 45 முதல் 50 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. இது நகர மற்றும் நெடுஞ்சாலைகள் என பயன்படுத்தப்படும் சாலைகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது. வாகனத்தில் 5.3 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் உள்ளது. அதனை முழுமையாக சார்ஜ் செய்தால், சுமார் 260 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என கூறப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI