Thar Roxx Safety Rating: மஹிந்திராவின் தார் ராக்ஸ் கார் மாடல், பாதுகாப்பு சோதனையில் புதிய சாதனை படைத்துள்ளது.


பாதுகாப்பு சோதனையில் தார் ராக்ஸ் சரித்திரம்:


BNCAP எனப்படும் பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்டத்தில், பாடி ஆன் ஃப்ரேம் கொண்ட கார்களில் 5 நட்சத்திர பாதுகாப்பு குறியீட்டை பெற்ற முதல் கார் என்ற பெருமையை தார் ராக்ஸ் பெற்றுள்ளது. மேலும், பாரத்-என்சிஏபி சோதனையில் எந்த இண்டர்னல் கம்பஸ்டன் எஸ்யுவி வாகனமும் பெறாத அளவில், பாதுகாப்பு குறியீட்டில் அதிக மதிப்பெண்ணை தார் ராக்ஸ் பெற்றுள்ளதாகவும் மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.


மதிப்பெண் விவரங்கள்:


மதிப்பெண் விவரங்களின்படி, பெரியவர்களுக்கான பாதுகாப்பு பிரிவில் 32-க்கு 31.09 மதிப்பெண்களையும், சிறார்களுக்கான பாதுகாப்பு பிரிவில் 49-க்கு 45 மதிப்பெண்களையும் தார் ராக்ஸ் பெற்றுள்ளது. கடினமான லேடர் ஃப்ரேமை கொண்டிருந்து 5 நட்சத்திர பாதுகாப்பு குறியீட்டை பெறுவது என்பது கடினமான செயலாகும். இருப்பினும், அதனை சாத்தியப்படுத்தியதன் மூலம் தார் ராக்ஸ் பயணிகளுக்கு எந்தளவிற்கு பாதுகாப்பை உறுதிபடுத்துகிறது என்பது உணர முடிகிறது.




தார் ராக்ஸின் பாதுகாப்பு அம்சங்கள்:


தார் ராகஸ் ஆறு ஏர்பேக்குகள், அனைத்து பயணிகளுக்கும் 3-பாயின்ட் சீட்பெல்ட்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), மற்றும் சீட்பெல்ட் நினைவூட்டல் (SBR) ஆகிய பாதுகாப்பு அம்சங்களை அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டேண்டர்டாக வழங்குகிறது. ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் (AEB), லேன் டிபார்ச்சர் வார்னிங், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் ப்ளைண்ட் வியூ மானிட்டருடன் கூடிய 360 டிகிரி சரவுண்ட் வியூ சிஸ்டம் போன்ற லெவல் 2 ADAS அம்சங்கள் ஆகியவை கூடுதல் பாதுகாப்பு அம்சங்களாகும். இது டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் பிரேக் லாக்கிங் டிஃபெரன்ஷியல் (BLD) ஆகியவற்றையும் கொண்டுள்ளது.


இன்ஜின் விவரங்கள்:


தார் ராக்ஸ் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் வருகிறது மற்றும் டீசல் 4x4 சலுகையையும் பெறுகிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய Roxx ஏற்கனவே அதிக தேவை காரணமாக நீண்ட காத்திருப்பு பட்டியலைப் பெற்றுள்ளது. இதன் விலை ரூ.18.79 லட்சம் முதல் ரூ.22.49 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


XUV 3XO மற்றும் XUV400 பாதுகாப்பு குறியீடு


XUV 3XO மற்றும் XUV400 உள்ளிட்ட கார் மாடல்களையும்,  BNCAP சோதனைகளுக்கு மஹிந்திரா நிறுவனம் அனுப்பியுள்ளது. பரிசோதனையின் முடிவில் இரண்டு கார்களும் முழுமையாக 5 நட்சத்திரங்களைப் பெற்றுள்ளன. XUV 3XO வயது வந்தோருக்கான பாதுகாப்பில் (AOP) 29.36/32 மதிப்பெண்களையும், குழந்தைகளின் பாதுகாப்பில் (COP) 43/49 மதிப்பெண்களையும் பெற்றது. அதே நேரத்தில் XUV400 வயது வந்தோருக்கான பிரிவில் 30.377/32 மதிப்பெண்களையும் மற்றும் குழந்தைகளுக்கான பிரிவில் 43/49 மதிப்பெண்களைப் பெற்றது.


Car loan Information:

Calculate Car Loan EMI