ஒரே நேரத்தில் 8,17,000 கார்களை டெஸ்லா நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. ஏன் தெரியுமா?


2021-2022 Model S and Model X, 2017-2022 Model 3, and 2020-2022 Model Y, ஆகிய மாடல் வாகனங்கள் ஆக்குப்பேஷன் கேஷ் ப்ரொடக்‌ஷன் விதிமுறையைப் பின்பற்றாதாதால் அது அமெரிக்க மோட்டார் வாகன பாதுகாப்பு நெறிமுறைக்கு உட்பட்டதாக இல்லை என்று தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து டெஸ்லா ஒரே நேரத்தில் 1.8 லட்சம் வாகனங்களை திரும்பப் பெற்றுள்ளது.


தொழில்நுட்ப வார்த்தைகளில் அல்லாமல் சாமான்யர்களுக்குப் புரிவது போல் சொல்ல வேண்டுமென்றால், டெஸ்லாவின் மேற்கூறிய மாடல் கார்களை ஒரு வாடிக்கையாளர் ஸ்டார்ட் செய்யும்போது அவர் சீட் பெல்ட் அணிவதற்காக மற்ற அலெர்ட் எதுவுமே அவருக்குக் கேட்காது. இதுதான் பிரச்சினை. இந்தப் பிரச்சினையை சரி செய்ய டெஸ்லா over-the-air (OTA) என்ற மென்பொருளை மீண்டும் அப்டேட் செய்து காரில் பொருத்தும் எனத் தெரிகிறது.


இருப்பினும் இந்தப் பிரச்சினையால் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி முடிவடைந்த காலம் வரை ஒரு விபத்து கூட நடக்கவில்லை என டெஸ்லா தெரிவிக்கிறது.


இந்தக் குறைபாட்டை தென் கொரியாவின் ஆட்டோமொபைல் டெஸ்டிங் அண்ட் ரிசேர்ச் இன்ஸ்டிட்யூட்  NHTSA, the South Korea Automobile Testing & Research Institute (KATRI) தான் முதன்முதலாக டெஸ்லாவின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
மேலும், காரை ஸ்டார்ட் செய்து மணிக்கு 22 கிமீ வேகத்தைத் தாண்டிவிட்டாலே இந்தக் குறைபாடு தெரிவதில்லை என்றும் டெஸ்லா வாதிடுகிறது. இதனால் தான் டெஸ்லா 8,17,000 கார்களை திரும்பப் பெறுகிறது. 
முன்னதாக செவ்வாய்க்கிழமை டெஸ்லா வெளியிட்ட அறிவிப்பில் அமெரிக்காவில் உள்ள 53,822 டெஸ்லா வாகனங்களை  Full Self-Driving (Beta) மென்பொருள் சர்ச்சையால் திரும்பப் பெறுவதாகக் கூறியது. 


இந்திய வருகை எப்போது?


டெஸ்லா இந்திய வருகை எப்போது? இது இங்குள்ள பணக்காரர்கள் அடிக்கடி எழுப்பும் மில்லியன் டாலர் கேள்வி. பிரபல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று டெஸ்லா. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் தங்களுடைய கார் விற்பனையை சிறப்பாக நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு இந்த நிறுவனம் விரைவில் இந்தியாவில் கால்பதிக்க உள்ளதாக தகவல் வெளியானது. எனினும் அதன்பின்னர் இது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. 


இந்நிலையில் இது தொடர்பாக  ட்விட்டர் தளத்தில் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு எலோன் மஸ்க் பதிலளித்துள்ளார். அதன்படி ஒருவர் ட்விட்டர் தளத்தில்,”டெஸ்லா கார்கள் எப்போது இந்தியாவில் வரும்? அந்த கார்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை உலகில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வேகமாக விற்பனைக்கு வரவேண்டும்” எனப் பதிவிட்டிருந்தார். அவரின் இந்த பதவிற்கு எலோன் மஸ்க் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் மூலம் பதிலளித்துள்ளார். அதில், “இந்தியாவில் எங்களுடைய கார்களை கொண்டு வர இன்னும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” எனக் கூறியிருந்தார். 


இந்தியாவில் என்ன சிக்கல்?


இந்த கார்கள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு மட்டும் இந்திய வர உள்ளதாக தெரிகிறது. ஆகவே அதற்கான வரி மிகவும் அதிகமாக இருக்கும். இதன்காரணமாக அந்த காரின் விலையும் இந்தியாவில் அதிகரிக்கும் சூழல் ஏற்படும். எனவே இதை தவிர்க்க எலோன் மஸ்க் இந்திய அரசிடம் பேசி வருவதாகக் கூறுகிறது.
 


Car loan Information:

Calculate Car Loan EMI