Tata EVs 2024: நடப்பாண்டில் மேலும் மின்சார கார்களை அறிமுகப்படுத்தும் டாடா - லிஸ்ட் இதோ..!

Tata EVs 2024: டாடா நிறுவனம் நடப்பாண்டில் இந்திய சந்தையில் புதியதாக இரண்டு மின்சார கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

Continues below advertisement

Tata EVs 2024: டாடா நிறுவனம் நடப்பாண்டில் இந்திய சந்தையில் கர்வ் மற்றும் ஹாரியர் மின்சார எடிஷன் கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 

Continues below advertisement

டாடா மின்சார கார்கள்:

டாடா நிறுவனம் இன்ஜினை கொண்ட கார் மாடல்களுக்கு இணையாக, மின்சார கார் மாடல்களையும் விற்பனைக்கு கொண்டு வருவதில் முனைப்பு காட்டி வருகிறது. இதன் காரணமாகவே அடுத்தடுத்து மின்சார கார்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. ஏற்கனவே இந்திய சந்தையில் உள்ள இன்ஜின் அடிப்படையிலான கார்களை சார்ந்த, மின்சார கார்களையும் சந்தைக்கு கொண்டு வருகிறது. அந்த வகையில் அண்மயில் தான், டாடா பஞ்ச் மாடலின் மின்சார எடிஷன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இது அந்நிறுவனத்தின் நான்காவது முழு மின்சார கார் மற்றும் இரண்டாவது மின்சார SUV ஆகும். அதோடு,  Gen 2 EV கட்டமைப்பில் டாடாவின் முதல் மாடல் இதுவாகும். இதனை தொடர்ந்து, மேலும் இரண்டு கார்களின் மின்சார எடிஷன்களை நடப்பாண்டில் விற்பனைக்கு கொண்டு வர, டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டாடா Curvv மின்சார கார்கள்:

பஞ்ச் என்பது டாடா நிறுவனத்தின் மேம்பட்ட தூய மின்சார வாகனக் கட்டமைப்பான 'acti.ev' இல் உருவாக்கப்பட்ட முதல் EV ஆகும். இது சிறந்த பேட்டரி பேக்கேஜிங்குடன் அதிக நெகிழ்வுத்தன்மையையும் தருகிறது. அந்த வரிசையில் அடுத்த வெளியீடாக Curvv பிரீமியம் EV இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Curvv நெக்ஸானுக்கு மேலே கிரேட்டாவிற்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.  முதலில் மின்சார எடிஷனில் வரும் இந்த கார்,   பின்னர் பெட்ரோல் எடிஷனில் அறிமுகப்படுத்த உள்ளது.

ஹாரியர் மின்சார கார்:

Curvv மின்சார வாகனத்தை தொடர்ந்து ஹாரியர் மின்சார வாகனம் அறிமுகப்படுத்த உள்ளது.  இதற்கான கான்செப்ட் வடிவமும் ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயங்குதளமானது 300-600 கிமீ வரம்பிற்கு இடைப்பட்ட பேட்டரி பேக் வடிவமைப்புகளை கொண்டிருக்கலாம். அதே நேரத்தில் ஆல்-வீல் டிரைவ் அல்லது சிங்கிள் மோட்டாரைக் கொண்டிருக்கும். இதன் பொருள் பிரீமியம் EVகள் இரட்டை மோட்டார் கான்ஃபிகரேஷனை கொண்டிருக்கும். 

வடிவமைப்பு விவரம்:

வடிவமைப்பு மொழியானது பொதுவான டெம்ப்ளேட்டையும், ஏரோ ஆப்டிமைஸ்டு ஸ்டைலிங் மற்றும் லைட் பாருடன் வெவ்வேறு கிரில்லையும் பின்பற்றும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உட்புறங்களில் புதிய Nexon EV மற்றும் பஞ்ச் EV ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட வடிவமைப்புடன் ஸ்டீயரிங் வீலில் டிஜிட்டல் லோகோவும் பெரிய இரட்டை திரைகளும் இருக்கும். ஃபிரங்க் மற்றும் தட்டையான தரையுடன் கூடிய விரைவான சார்ஜிங் ஆகியவை இந்த ஃபிளாட்ஃபார்மின் மற்ற அம்சங்களாக கருதப்படுகிறது. எனவே, Tata.ev தனது மின்சார வாகன உற்பத்தியில் அதிக தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் EV சந்தையில் அதன் தலைமைத்துவத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதிலும் ஆர்வமாக உள்ளது என்பது தெளிவாகிறது. நெக்ஸான் மற்றும் பஞ்ச்க்குப் பிறகு, பிரீமியம் காம்பாக்ட் எஸ்யூவி செக்மெண்டில் கவனம் செலுத்தும் டாடா நிறுவனம், புதிய கர்வ் மற்றும் ஹாரியர் மின்சார வாகனங்களை சந்தைக்கு கொண்டு வர தீவிரம் காட்டி வருகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola