டாடா நிறுவனம் பட்ஜெட் விலையில் பல்வேறு கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்திய சந்தையில் டாடா நிறுவனம் அறிமுகப்படுத்திய கார்தான் Tata Tigor. 7 லட்சம் ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில் விற்பனையாகி வரும் இந்த காரின் விலை, தரம், மைலேஜ், சிறப்பம்சங்கள் குறித்து கீழே காணலாம்.

Continues below advertisement

விலை எப்படி?

இந்த Tata Tigor காரின் தொடக்க விலை ரூபாய் 6.62 லட்சம் (ஆன்ரோட்) ஆகும்.  இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 10.43 லட்சம் ஆகும். இந்த காரில் மொத்தம் 14 வேரியண்ட்கள் உள்ளது. ஆட்டோமெட்டிக் மற்றும் மேனுவலில் ஓடும் ஆற்றல் கொண்டது இந்த கார். இந்த காரின் அனைத்து வேரியண்ட்களிலும் 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 

மைலேஜ் எப்படி?

பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் ஓடும் ஆற்றல் கொண்டது இந்த Tata Tigor கார். இந்த கார் 19.6 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 72 பிஎச்பி குதிரை ஆற்றல் கொண்டது. 

Continues below advertisement

வேரியண்ட்களும், விலைகளும்:

Tigor XM  - ரூ.6.62 லட்சம்

Tigor XT - ரூ.7.47 லட்சம்

Tigor XTA - ரூ.8.06 லட்சம்

Tigor XZ - ரூ.8.11 லட்சம்

Tigor XT iCNG - ரூ.8.54 லட்சம்

Tigor XZA - ரூ.8.70 லட்சம்

Tigor XZ Plus - ரூ.8.75 லட்சம்

Tigor XZ iCNG - ரூ.9.18 லட்சம்

Tigor XZ Plus LUX - ரூ.9.28 லட்சம்

Tigor XZA Plus - ரூ.9.34 லட்சம்

Tigor XZA iCNG - ரூ.9.79 லட்சம்

Tigor XZ Plus iCNG - ரூ.9.85 லட்சம்

Tigor XZ Plus LUX CNG - ரூ.10.38 லட்சம்

Tigor XZA Plus iCNG - ரூ.10.43 லட்சம்

பாதுகாப்பு அம்சம்:

ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு இந்த காரின் விலை ரூபாய் 80 ஆயிரம் வரை குறைந்துள்ளது. இந்த காருக்கு 4 ஸ்டார் பாதுகாப்பு தரக்குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஓட்டுவதற்கும் மிகவும் இலகுவான காராக இந்த கார் உள்ளது. 

1.2 லிட்டர் 3 சிலிண்டர் ரெவோட்ரன் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ள இந்த கார் 113 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 5 கியர்கள் மேனுவல் காரில் உள்ளது. இந்த கார் ஹுண்டாய் நிறுவனத்தின் ஆரா, டாடாவின் டியாகோ, டாடா ஆல்ட்ராஸ், டாடா பஞ்ச் ஆகிய கார்களுக்கு நல்ல போட்டியாக உள்ளது. 

பட்ஜெட்டில் கார் வாங்க விரும்பும் பலரின் தேர்வுகளில் இந்த Tigor  கார் இருக்கும். இந்த கார் ஒரு செடான் ரக கார் என்பது இதன் கூடுதல் அம்சம் ஆகும். பச்சை, கருப்பு, நீலம், வெள்ளை, சிவப்பு என 5 வண்ணங்களில் இந்த கார் உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI