இந்தியாவில் கார் வாங்கும்போது, எரிபொருள் செலவு குறைந்து, நீண்ட தூரம் பயணிக்க உதவும் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதுவரை பெட்ரோல், டீசல் கார்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், இப்போது மக்கள் மெல்ல மெல்ல சுற்றுச்சூழலுக்கு உகந்ததும், சிக்கனமானதும் ஆன CNG கார்களை தேர்வு செய்ய தொடங்கியுள்ளனர்.

Continues below advertisement

இந்தச் சூழ்நிலையில், குறைந்த விலை மற்றும் நல்ல மைலேஜ் தரக்கூடிய இரண்டு பிரபலமான CNG கார்கள் சந்தையில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. அவை மாருதி சுசுகி செலேரியோ CNG மற்றும் டாடா டியாகோ iCNG. இவற்றில் எது உங்களுக்கு சரியான தேர்வு என்பதை புரிந்துகொள்ள, இப்போது இரு கார்களையும் விலை, மைலேஜ், வசதிகள் என ஒப்பிட்டு  பார்ப்போம்.

மாருதி சுசுகி செலேரியோ

மாருதி சுசுகி செலேரியோ CNG, இந்திய சந்தையில் தற்போது கிடைக்கும் CNG கார்களில் மிகவும் சிக்கனமான மாடலாக திகழ்கிறது. இது கிலோ மீட்டருக்கு ஒன்றுக்கு 34.43 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது என்பதே இதன் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்டாக பார்க்கப்படுகிறது. எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.89 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்தக் காரில், EBD, ABS மற்றும் டூயல் ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. 5 பேர் எளிதாக உட்காரும் வசதி கொண்டது. இதன் எரிபொருள் செலவு, மோட்டார் சைக்கிள் ஓட்டும் செலவை விட குறைவாக இருப்பதால், குடும்ப பயன்பாட்டிற்கும் தினசரி பயணங்களுக்கும் இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கிறது.

Continues below advertisement

டாடா டியாகோ

டாடா டியாகோ iCNG, சக்திவாய்ந்த 1.2 லிட்டர் எஞ்சின் கொண்டுள்ளது. மேலும்ம் இது 73hp பவரையும் 95Nm டார்க்கையும் உருவாக்குகிறது, மேலும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. கிலோ மீட்டர் ஒன்றுக்கு- இந்த கார்  27 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது, இந்தக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6 லட்சம் முதல் தொடங்குகிறது. 5 பேர் உட்காரும் வசதி கொண்ட இதன் ஸ்போர்ட்டி டிசைனும், நவீன இன்டீரியர்களும் இளைஞர்களை சுலபமாக கவர்கின்றது. நீண்ட பயணங்களுக்கு ஸ்டேபிளான டிரைவிங் அனுபவத்தையும், பாதுகாப்பில் முன்னிலை வகிக்கும் டாடா மோட்டார்ஸ் பிராண்டின் நம்பகத்தன்மையையும் வழங்குவதால், சிக்கனத்துடன் சக்தியையும் விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வாகும்.

எது சிறந்தது?

மைலேஜ் முக்கியம் என்றால்: மாருதி செலேரியோ CNG உங்களுக்கு சிறந்த தேர்வு.பவர் மற்றும் பர்பார்மன்ஸ் முக்கியம் என்றால்: டாடா டியாகோ iCNG உங்கள் தேவைக்கு ஏற்ற கார்.இரு கார்களும் 5 பேர் குடும்பத்திற்குத் தேவையான இடவசதியையும் பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளதால், உங்கள் பயன்பாட்டு நோக்கத்தை (சேமிப்பு vs சக்தி) அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்தால் சிறந்த அனுபவம் கிடைக்கும்.


Car loan Information:

Calculate Car Loan EMI