இந்தியாவில் பட்ஜெட் விலையில் கார்கள் தயாரிப்பதில் டாடா நிறுவனம் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. டாடா நிறுவனம் ரூபாய் 10 லட்சத்திற்கும் கீழே பல்வேறு பட்ஜெட் கார்களை இந்தியாவில் தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

Continues below advertisement

Tata Tiago NRG:

அந்த வகையில், டாடாவின் பட்ஜெட் விலை கார்களில் மிகவும் முக்கியமான கார் Tata Tiago NRG ஆகும். டாடா நிறுவனத்தின் வெற்றிகரமான இந்த காரின் விலை, மைலேஜ், தரம் குறித்து கீழே விரிவாக காணலாம்.

விலை என்ன?

டாடாவின் Tata Tiago காரின் அப்டேட் வெர்சனாகவே இந்த Tata Tiago NRG  கார் கருதப்படுகிறது. இந்த கார் ஒரு ஹேட்ச்பேக் ஆகும். 5 சீட்டர்கள் கொண்டது இந்த கார் ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 8 லட்சம் ( ஆன்ரோட்) ஆகும். இந்த காரின்  டாப் வேரியண்ட் விலை ரூபாய் 9.69 லட்சம் ஆகும். 

Continues below advertisement

இந்த காரில் மொத்தம் 4 வேரியண்ட்கள் உள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் இரண்டிலும் இந்த கார் உள்ளது. 181 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் இந்த கார் வைத்துள்ளது. 85 பிஎச்பி குதிரை ஆற்றல் கொண்டது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் ஓடும் ஆற்றல் கொண்டது. 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது இந்த கார் ஆகும். இந்த கார் 20.09 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 

வேரியண்ட்களும், விலையும்:

1. Tiago NRG XZ MT - ரூபாய் 8 லட்சம்

2. Tiago NRG XZA - ரூ.8.59 லட்சம்

3. Tiago NRG XZ iCNG - ரூ.9.07 லட்சம்

4. Tiago NRG XZA iCNG - ரூ.9.69 லட்சம்

சிறப்புகள்:

இந்த காருக்கு என்சிஏபி 4 ஸ்டார் பாதுகாப்பு தரக்குறியீடு வழங்கப்பட்டுள்ளது.  11 மி.மீட்டர் இதில் டாடா டியாகாவை காட்டிலும் கூடுதலாக கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது. கேபின் வசதியும் சிறப்பாக உள்ளது. இந்த கார் ஹுண்டாயின் கிராண்ட் ஐ10 நியாஸ், டாடாவின் டியாகோ, மாருதி செலோரியோ, கிளான்சா ஆகிய கார்களுக்கு போட்டியாக திகழ்கிறது.

இந்த கார் வெள்ளை, பழுப்பு, கருப்பு உள்ளிட்ட 4 வண்ணங்களில் உள்ளது. இந்த காரில் 2 ஏர்பேக்குகள் உள்ளது. இந்த கார் கடந்த 2023ம் ஆணடு பிப்ரவரி மாதம் 11ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காரில் 15 இன்ச் ஸ்டீல் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ரேர் வியூ கேமரா வசதி உள்ளது. 

7 இன்ச் டச் ஸ்கிரீன் உள்ளது. ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் உள்ளது. ஃபேப்ரிக் இருக்கைகள் உள்ளது.  ரெவோட்ரன் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 கியர்கள் உள்ளது. 95 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. மாருதி சுசுகி வேகன்ஆர் காருக்கு போட்டியாகவே இந்த காரை டாடா அறிமுகப்படுத்தியது.


Car loan Information:

Calculate Car Loan EMI