இந்தியாவின் விலை குறைவான எலக்ட்ரிக் காராக டாடா டியாகோ EV அறிமுகமாகி உள்ளது. இதன் அறிமுக விலை ரூ.  8.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அறிமுக விலை எனவும் இந்த அறிமுக விலையானது முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே எனவும் டாடா மோட்டார்ஸ் கூறியுள்ளது. இந்த பத்தாயிரத்தில் 2000 Nexon EV மற்றும் Tigor EV வைத்துள்ள உரிமையாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


டியாகோ EV-ன் முன்பதிவுகள் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் தொடங்குகிறது, இதன் டெலிவரி ஜனவரி 2023 முதல் தொடங்கும். முன்பதிவு தொகையாக ரூ. 21,000/- செலுத்தி அனைத்து டாடா மோட்டார்ஸ் டீலர்ஷிப்கள் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளங்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.


மாடிஃபைட் இந்தியன் ட்ரைவிங் சைக்கிள் என அழைக்கப்படும் MIDC சோதனையில் 315 கிலோ மீட்டர் ரேஞ்ச் வரை கொடுக்க கூடிய 24 kWh பேட்டரி பேக் மற்றும் MIDC-ல் 250 கிலோ மீட்டர் ரேஞ்ச் கொடுக்க கூடிய 19.2 kWh பேட்டரி பேக் என் டியாகோ எலக்ட்ரிக் இரண்டு வகையான பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டாருக்கு 8 ஆண்டுகள் அல்லது 1,60,000 கிலோ மீட்டர்கள் வாரண்டியை வழங்குகிறது டாடா, இதனுடன் வாகனத்திற்கான உத்தரவாதமாக 3 ஆண்டுகள் அல்லது 1,25,000 கிலோ மீட்டர்கள் கிடக்கிறது.




இந்த எலக்ட்ரிக் டியாகோவுக்கு நான்கு வெவ்வேறு சார்ஜிங் ஆப்ஷன்களை வழங்குகிறது டாடா. 15A பிளக் பாயிண்ட், ஸ்டாண்டர்ட் 3.3 kW AC சார்ஜர், 7.2 kW AC ஹோம் ஃபாஸ்ட் சார்ஜர் (இதில் 30 நிமிட சார்ஜ் போட்டால் 35 கிமீ வரை செல்லலாம்), 3 மணிநேரம் 36 நிமிடங்களில் 10% - 100% சார்ஜ்கள் மற்றும் இறுதியாக 30 நிமிடங்களில் 110 கிமீ மற்றும் 57 நிமிடங்களில் 10% - 80% வரை சார்ஜ் செய்யும் DC ஃபாஸ்ட் சார்ஜிங். இந்த நான்கு வகையான சார்ஜிங் ஆப்ஷன்களில் நம் வசதிக்கு ஏற்ப accessories-ஆக வாங்கி கொள்ளலாம். விற்பனையாகும் காருடன் இரண்டு சார்ஜர் ஆப்ஷன்களை டாடா வழங்குகிறது - 3.3 kW AC மற்றும் 7.2 kW AC.


அதிக ரேஞ்ச் கொண்ட 24 kWh வேரியண்ட் 114 Nm டார்க் மற்றும் 74 HP (55 kW) மின்சார மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இது 0-60 கிமீ வேகத்தை 5.7 வினாடிகளில் எட்டிவிடும்.




அடுத்த வேரியண்ட்டான 19.2 kWh 110 Nm டார்க் மற்றும் 60 HP (45 kW) மின்சார மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இது 0-60 கிமீ வேகத்தை 6.2 வினாடிகளில் எட்டிவிடும். இதில் சிட்டி மற்றும் ஸ்போர்ட் என இரண்டு டிரைவிங் மோடுகள் உள்ளன.




டீல் ப்ளூ, டேடோனா கிரே, ப்ரிஸ்டின் ஒயிட், மிட்நைட் பிளம் மற்றும் ட்ராபிகல் மிஸ்ட் என 5 வகை நிறங்களில் டியாகோ EV கிடைக்கிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI