இந்தியாவில் பாதுகாப்பிலும் தரத்திலும் மிகுந்த நம்பிக்கைக்குரிய கார்களில் முதன்மையானதாக டாடா  நிறுவனம் உள்ளது. டாடா நிறுவனம் சாதாரண மக்களின் தேவைகளுக்கு ஏற்ப முதல் சொகுசு வசதிகள் நிறைந்த அதிநவீன கார்கள் வரை பல மாடல்களை தயாரித்து வருகிறது. 

Continues below advertisement

டாடா டியாகோ:

அந்த வகையில், டாடா நிறுவனத்தின் மிக மிக முக்கியமான தயாரிப்பாக டியோகா கார் உள்ளது. நடுத்தர குடும்பத்தினரின் பட்ஜெட்டிற்கு ஏற்ப இந்த கார் உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் டாடா நிறுவனம் 11 கார்களுக்கு தள்ளுபடி அறிவித்தது. அதில் டியாகோ மாடல் காரும் ஒன்றாகும். 

ரூ.5 லட்சத்திற்கும் கம்மி:

5 சீட்டர் காரான இந்த காரின் ஆரம்பவிலை எக்ஸ் ஷோ ரூம் விலைப்படி ரூபாய் 5 லட்சம் ஆகும். டாடா நிறுவனம் இந்த காருக்கு ரூபாய் 55 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. இதனால், இதன் ஆரம்ப விலை 4.50 லட்சம் ரூபாய் முதலே தொடங்குகிறது. இந்த தள்ளுபடி முடிவதற்கு இன்னும் ஒரு வார காலமே அதாவது ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிகிறது. இதனால், தள்ளுபடியில் தரமான கார் வாங்க விரும்புபவர்கள் இந்த காரை வாங்கலாம்.

Continues below advertisement

பெட்ரோல், சிஎன்ஜி:

பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இரண்டிலும் இயங்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த காரில் 1119 சிசி திறன் கொண்ட பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சிஎன்ஜி காருக்கும் 1199 சிசி எஞ்ஜினே பொருத்தப்பட்டுள்ளது. 84.82 பிஎச்பி திறன் கொண்டது. 113 என் எம் டார்க் இழுதிறன் கொண்டது. 

இந்த டியாகோ கார் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஸ்ஸனிலும் வருகிறது. இந்த கார் 3 ஆயிரத்து 765 மி.மீட்டர் நீளமும், 1677 மி.மீட்டர் அகலமும், 1535 மி.மீட்டர் உயரமும் கொண்டது ஆகும். இந்த காரில் ஓட்டுனருக்கும், பயணிகளுக்கும் ஏர்பேக் வசதிகள் உள்ளது. ஏபிஎஸ் ப்ரேக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. தரக்குறியீட்டில் 5க்கு 4 ஸ்டார் அந்தஸ்து பெற்றது இந்த டாடா டியாகோ ஆகும். 

மைலேஜ் எப்படி?

டியாகோவில் பெட்ரோல் காரில் 7 வேரியண்ட்களும், சிஎன்ஜி யில் 6 வேரியண்ட்களும்,  ஆட்டோமெட்டிக்கில் 4 வேரியண்ட்களும், மேனுவலில் 9 வேரியண்ட்களும் இதில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Tiago XE, Tiago XM, Tiago XE CNG, Tiago XT, Tiago XM CNG, Tiago XTA AMT, Tiago XZ,  Tiago XT CNG, Tiago XZ Plus, Tiago XZA AMT, Tiago XTA AMT CNG, Tiago XZ CNG மற்றும் Tiago XZA AMT CNG வேரியண்ட்களின் தொடக்க விலை ரூ. 10 லட்சத்திற்கும் குறைவு ஆகும். 

Tiago XZA AMT CNG 28 கி.மீட்டர் மைலேஜும், Tiago XTA AMT CNG 28 கி.மீட்டர் மைலேஜும், Tiago XZ CNG 26.49 கி.மீட்டர் மைலேஜும், Tiago XT CNG 26.49 கி.மீட்டர் மைலேஜும், Tiago XM CNG 26.49 கி.மீட்டர் மைலேஜும், Tiago XE CNG 26.49 கி.மீட்டர் மைலேஜும் தருகின்றன. டியாகோ கார் பட்ஜெட் கார் என்பதால் நடுத்தர குடும்பத்தினரின் முதன்மைத் தேர்வுகளில் இந்த காரும் ஒன்றாக உள்ளது. மேலும், நகர்ப்புறங்களிலும் நெடுஞ்சாலைகளிலும் ஓட்டுவதற்கு ஏற்ற காராகவும் இந்த கார் உள்ளது. இதனால், டாடா அறிவித்துள்ள தள்ளுபடி பலருக்கும் பயன் அளிப்பதுடன் வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் என்றும் டாடா நம்புகிறது.

 


Car loan Information:

Calculate Car Loan EMI